உணர்வோசை

பணக்காரர்களுக்கு முதன்முதலில் டைஃபாய்டு நோயை பரப்பியது யார்.. 40 ஆண்டாக தொடரும் சர்ச்சை: உண்மை என்ன?

1906ம் ஆண்டில் மனித குலத்தை டைஃபாய்டு நோய் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

பணக்காரர்களுக்கு முதன்முதலில் டைஃபாய்டு நோயை பரப்பியது யார்.. 40 ஆண்டாக தொடரும் சர்ச்சை: உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நியூ யார்க்கின் ஆய்ஸ்டர் பேவில் முக்கிய பணக்காரராக இருந்த ஜார்ஜ் தாம்ப்சனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் டைஃபாய்டு நோய் கண்டறியப்பட்டது. ஜார்ஜ் தாம்ப்சன் அவருக்கு உரிமையான வீட்டை இன்னொரு பணக்காரரான ஜெனரல் வில்லியம் ஹென்றி வாரனின் குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர்களின் குடும்பத்துக்குதான் டைஃபாய்டு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அதுவரை ஏழைகளுக்கு வரும் நோயாக அறியப்பட்டிருந்த டைஃபாய்டு பணக்கார குடும்பங்களுக்கும் வந்தது நகரத்துக்கே பெரும் அதிர்ச்சி.

1906ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அவ்வீட்டில் இருந்த பதினொரு பேரில் ஆறு பேர் நோய்வாய்ப்பட்டனர். உடனடியாக நோய் ஆராயப்பட்டது. காரணம் மட்டும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. டைஃபாய்டு நோய் எப்படி அக்குடும்பத்தினருக்கு வந்தது என்பதை கண்டறியாமல், புது குடித்தனக்காரர்களை கொண்டு வர முடியாது என்கிற பிரச்சினை வீட்டு உரிமையாளருக்கு. மர்ம முடிச்சை அவிழ்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். தன் வீட்டில் டைஃபாய்டு எப்படி வந்தது என கண்டறிய ஜார்ஜ் தாம்ப்சன், ஜார்ஜ் சோப்பரை பணித்திருந்தார்.

பணக்காரர்களுக்கு முதன்முதலில் டைஃபாய்டு நோயை பரப்பியது யார்.. 40 ஆண்டாக தொடரும் சர்ச்சை: உண்மை என்ன?

வழக்கமாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் உத்திகளை சோப்பர் பயன்படுத்தினார். டைஃபாய்டு தொற்று குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நாட்கள், கண்டறியப்பட்ட நாட்கள், சிகிச்சை முறைகள் போன்றவற்றையும் எங்கிருந்து வந்திருக்கலாம், என்னென்ன வழிகளில் வந்திருக்கலாம் போன்றவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தார். எந்த துப்பும் கிடைக்கவில்லை.

ஒரு சந்தேகம் மட்டும் சோப்பருக்கு மிஞ்சியிருந்தது. நோய் யாராலாவது கொண்டு வரப்பட்டிருக்குமா?

ஆய்ஸ்டர் பே குடும்பத்திலிருந்த நபர்களை ஒவ்வொருவராக விசாரித்தார் சோப்பர். ஒரே ஒரு நபர் மட்டும் சிக்கவில்லை. அந்தக் குடும்பத்துக்கு சமைத்துப் போடும் வேலையை செய்த சமையற்காரர். சமையல் வேலை செய்தவர் ஒரு பெண். ஆறு மாதங்களுக்கு முன் குடும்பத்துக்குள் முதல் தொற்று வந்தவுடனேயே அப்பெண் வேலையிலிருந்து நின்றுவிட்டார். சோப்பர் சுறுசுறுப்பானார்.

அப்பெண்ணுடைய பெயர் மட்டும் உறுதியாக தெரிந்தது. பெயர், மேரி மேலன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அச்சம்பவம் நேர்ந்திருந்ததை கண்டுபிடித்தார் சோப்பர்.

உணவு உண்டு முடித்த பிறகு குடும்பத்தினருக்கு மேரி ஓர் உணவு வகை செய்து கொடுத்தார். வெட்டப்பட்ட பீச் பழத்துண்டுகளை கொண்டு செய்யப்பட்ட ஐஸ்க்ரீம். நோய்த் தொற்றுக் கொண்டவரின் கை நேரடியாக பட்டு, சூடாக்கப்படாமல் பிறர் உண்ணும் வாய்ப்பு கொண்ட உணவு வகை. டைஃபாய்டு கிருமி செல்வதற்கான மிக நேர்த்தியான வழி.

பணக்காரர்களுக்கு முதன்முதலில் டைஃபாய்டு நோயை பரப்பியது யார்.. 40 ஆண்டாக தொடரும் சர்ச்சை: உண்மை என்ன?

ஆய்ஸ்டர் பே வீட்டை பற்றி துப்பறியத் தொடங்கி நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. மேரி, நியூ யார்க் நகரத்தின் மேற்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். துணி துவைப்பவருக்கு சமீபத்தில்தான் டைஃபாய்டு நோய் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜார்ஜ் சோப்பர் அடுத்ததாக மேரியின் வீட்டையும் கண்டுபிடித்தார். அங்கும் சென்று அவரிடம் பேசி டைஃபாய்டு இருக்கிறதா இல்லையா என பரிசோதிக்க சிறுநீர் மற்றும் கழிவை கொடுக்குமாறு சொல்கிறார். மேரி அப்போதும் உடன்படவில்லை. 1907ம் ஆண்டில் பத்திரிகையில் அவரின் அனுபவத்தை குறிப்பிட்டு முக்கியமான பத்தியையும் மக்களுக்கென பதிப்பித்து வைக்கிறார். அந்த பத்தியில் அவர் சொல்லியிருந்தது என்ன தெரியுமா?

‘ஆகஸ்ட் 4ம் தேதி குடும்பம் புது சமையற்காரர்களை பணிக்கு அமர்த்துகிறது. டைஃபாய்டு தொற்று பெருமளவுக்கு பரவுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் இது நடந்திருக்கிறது. புதிதாக சமையல்வேலைக்கு வந்திருந்த மேலன், குறைவான காலத்துக்குத்தான் பணியிலிருந்தார். டைஃபாய்டு பாதிப்பு குடும்பத்தில் கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் பணியிலிருந்து நின்றுவிட்டார். மேலன் ஐரிஷ் நாட்டை சேர்ந்த பெண். நாற்பது வயதானவர். ஆரோக்கியமாக இருப்பவர்.’

என சோப்பர் கூறியிருந்தார். பிற விஷயங்கள் அனைத்தையும் சோப்பர் சொல்லி விட்டிருந்தாலும் பரவாயில்லை. அவர் முக்கியமான ஒரு வரியை சேர்க்கிறார். ‘மேலன் ஐரிஷ் நாட்டை சேர்ந்த பெண்’ என்றவொரு வரியைச் சேர்க்கிறார். அந்த வரிக்கும் டைஃபாய்டுக்கும் நோய்ப்பரவலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அந்த வரியை சேர்ப்பதிலிருந்து மக்களிடம் சோப்பர் வேறொரு முக்கியமான விஷயத்தை பரப்புகிறார். அது டைஃபாய்டை காட்டிலும் ஆபத்தான நோய்.

மேரியை போன்ற ஒரு ஏழை பெண், இன்னொரு நாட்டிலிருந்து குடியேறியவர் அமெரிக்காவுக்குள் டைஃபாய்டை கொண்டு வந்து பணக்காரர்களுக்கு பரப்பிவிட்டார் என்றால் போதும். மக்களின் கோபத்தை மிக எளிமையாக திசைதிருப்பிவிடலாம்.

பணக்காரர்களுக்கு முதன்முதலில் டைஃபாய்டு நோயை பரப்பியது யார்.. 40 ஆண்டாக தொடரும் சர்ச்சை: உண்மை என்ன?

1907ம் ஆண்டில் சோப்பர் நியூ யார்க் சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பவர் என்கிற குற்றச்சாட்டில் மேரியை காவல்துறை கைது செய்தது. கைதுக்கு மேரி மறுத்த போது இன்னும் நிலைமை மோசமானது. ஐந்து காவலர்கள் மேரியை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ்ஸுக்குள் திணித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கட்டாயப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. டைஃபாய்டு பாக்டீரியா அவரின் கழிவில் கண்டுபிடிக்கப்பட்டது. மேரியின் பித்தப்பைக்குள் பாக்டீரியாவுக்கான மையம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேரி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. நார்த் பிரதர் தீவு என்ற இடத்தில் மேரி தனிமையில் சிறைவைக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

சற்றும் எதிர்பார்க்காமல் எல்லாமும் சடசடவென நடந்து முடிந்தது. திடுமென மேரியின் வாழ்க்கை தலைகீழாக்கி போடப்பட்டிருந்தது. டைஃபாய்டு நோய் பற்றிய அறியாமை மேரிக்கு மட்டும் இருந்ததாக கொள்ள முடியாது. டைஃபாய்டு நோய் ஏழைகளை மட்டுமே பாதிக்கும் என நம்புமளவுக்கே விழிப்புணர்வு அப்போது இருந்தது. ஆனால் அந்த அறியாமைக்கு விலையானது அரசு அல்ல, மருத்துவம் அல்ல. வழக்கம் போல் ஓர் ஏழை!

banner

Related Stories

Related Stories