விளையாட்டு

துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !

சேப்பாக்கம் மைதானம் குறித்த தனது அனுபவத்தை நடராஜன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு நடை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் சென்னை அணியினை எதிர்கொண்டார். இந்த போட்டிக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானம் குறித்த தனது அனுபவத்தை நடராஜன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " சென்னையில் மின்சார ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும்போது முதல்முறையாக அங்குள்ள துளை வழியாக இந்த மைதானத்தைப் பார்த்தேன்.

அப்போது இதற்குள் நம்மை விடுவார்களா? நாமெல்லாம் இங்கு விளையாடுவோமா? என நினைத்திருக்கிறேன். ஒரு முறை லீக் போட்டியில் விளையாடிவிட்டு, ஊர் திரும்பும்போது CSK vs RCB போட்டியை அப்படி ஒரு துளை வழியாகத்தான் பார்த்தேன். அடுத்த 2, 3 ஆண்டுகளிலேயே இங்கு விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மைதானத்தில் வைத்து ஃபாஸ்ட் பவுலராக 5 விக்கெட்டுகளை எடுத்திருந்ததுதான் என்னால் மறக்க முடியாத தருணம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories