தேர்தல் 2024

பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். ஹாசன் தொகுதியானது 1991-ம் ஆண்டு முதல் ஒரு முறையை தவிர்த்து தொடர்ந்து JDS கட்சியே வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த முறை எம்.பியாக இருந்த பிரஜ்வலுக்கே இந்த முறையும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். இந்த சூழலில் கர்நாடகாவில் கடந்த ஏப்.26-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது, ஹாசன் தொகுதிக்கும் நடைபெற்றது. இந்த சூழலில் தேர்தல் நடைபெறுவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் குறித்த ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. கர்நாடகா முழுவதும் அந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து சிறப்பு விசாரணைக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் எனவும், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் போட்டியிட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளது.

பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !

தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது தொடர்பான வீடியோவை தொடர்ந்து, அவர் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகாரும் அளிக்கப்பட்டது. தற்போது அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றுள்ளார்.

பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரஜ்வலை தொடர்ந்து தற்போது அவரது தந்தை மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை HD ரேவண்ணாவால் தான் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரஜ்வல் பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தந்தை HD ரேவண்ணா மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories