உணர்வோசை

ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும் இஸ்ரேலும்!

ஆக்கிரமிப்பு அரசியல் என ஒன்று உலக வரலாற்றில் உண்டு! பல நாடுகளை அந்த வரலாறு பறித்திருக்கிறது. உதாரணம் இஸ்ரேல்!

ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும்  இஸ்ரேலும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒருவன் வந்து உங்கள் வீட்டுக் கதவை தட்டுகிறான். திறக்கிறீர்கள். தண்ணீர் கேட்கிறான். அவன் நிலை கண்டு இரங்கி உள்ளே அமரச் சொல்லி விட்டு தண்ணீர் எடுக்கச் செல்கிறீர்கள். தண்ணீர் எடுத்து வரும்போது அங்கு நான்கு பேர் அமர்ந்திருக்கிறார்கள். வாசலிலும் நெருக்கியடித்துக் கொண்டு பலர் நிற்கிறார்கள். திகைப்படைகிறீர்கள். என்ன ஏது என கேட்க தொடங்குகையில் உங்களின் வீடு அவர்களுக்கு சொந்தம் என்கிறார்கள். அதிர்ச்சி அடைகிறீர்கள். ஆதாரம் கேட்கிறீர்கள். ஒரு புத்தகத்தை எடுத்துப் போட்டு அதில் அப்படிதான் எழுதியிருக்கிறது என்கிறார்கள்.

இது என்ன பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டதும் அவர்களின் நம்பிக்கையை களங்கப்படுத்தி விட்டதாக சொல்லி உங்களை திட்ட தொடங்குகிறார்கள். வாசலில் இருந்தோர் உள்ளே நுழைகின்றனர். அமர்ந்திருந்தவர்கள் தாக்க தொடங்குகின்றனர். நீங்கள் தடுத்து தற்காப்புக்கு அடிக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் வன்முறையை கையில் எடுப்பதாக சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவர்களும் தாக்கத் தொடங்குகிறார்கள். அனைவரும் சேர்ந்து உங்களை குண்டுகட்டாக தூக்கி வெளியில் போட்டு கதவை பூட்டிக் கொள்கிறார்கள்.

ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும்  இஸ்ரேலும்!

என்ன செய்வதென தெரியாமல் ஊரில் பெரிய மனுஷனை பஞ்சாயத்துக்கு அழைத்து வருகிறீர்கள். இரு தரப்பையும் அவர் கேட்டு வீட்டை இரண்டாக பிரித்து தங்கிக் கொள்ளும்படி தீர்ப்பு வழங்குகிறார். உங்களுக்கு அது அபத்தமாக தெரிகிறது. தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை. பெரிய மனிதரையே எதிர்த்து பேசும் நீங்கள் ஒரு தீவிரவாதி என கும்பல் கத்துகிறது. பஞ்சாயத்து செய்ய வந்தவரும் அமைதி காக்கிறார். மீண்டும் அந்த கும்பல் உங்களை குண்டுகட்டாக தூக்கி வெளியே போடுகிறது.

உங்களுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஆத்திரம் புகைய கையறுநிலையில் இருக்கிறீர்கள். வீடிருக்கும் தெருவையே சுற்றி சுற்றி வருகிறீர்கள். உங்களை போன்ற பலரும் வீடுகளிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள். எல்லாருக்குமே ரத்தம் கொதிக்கிறது. தங்களின் வீடுகளை மீட்க எல்லா வழிகளையும் முயற்சிக்கிறார்கள்.

ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும்  இஸ்ரேலும்!

கண்ணுக்கு எதிரேயே உங்களின் வீடு மாற்றப்பட்டு கட்டடமாகிறது. வேறு குடும்பங்கள் அங்கு சொகுசாக குடியேறுகின்றன. உங்களுடன் சேர்ந்து வீடிழந்த அனைவரையும் சுற்றி ஒரு கோடு கிழிக்கப்படுகிறது. தெருமுனையில் ஒரு பத்தடி அளவே கொண்டே சிறு இடம் அது. அந்த இடத்துக்குள்தான் நீங்கள் அனைவரும் இருக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. அங்கு உங்களுக்கு உணவு கிடையாது. குடிநீர் கிடையாது. அடிப்படை மனித உரிமை எதுவும் கிடையாது. திடுமென எப்படி இப்படி ஆனோம் என்கிற அதிர்ச்சி உங்கள் அனைவருக்கும்.

உங்களை தவிர்த்து யாரும் உங்களுக்கான தீர்வுக்காக குரல் கொடுக்கவில்லை. அவ்வப்போது சிலர் மாடி பால்கனியிலிருந்து உங்களுக்காக 'உச்' கொட்டுகிறார்கள். எவரேனும் உங்களுக்காக குரல் கொடுத்தால் அவர் காணாமல் போகிறார்.

என்ன செய்வீர்கள்?

இதில் துயரம் என்னவெனில் உங்களிடம் தண்ணீர் கேட்டு வந்தவனும் வீட்டை இழந்தவன் என்பதுதான். அவனின் வீடு வேறு இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து அவனை விரட்டி விட்டார்கள். சொந்த வீட்டிலிருந்து ஒருவனை விரட்டி விடுவது எத்தனை துயர் நிரம்பியது என்பது வேறு எவரை காட்டிலும் அவன்தான் அறிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவனே வந்து உங்களை வீட்டிலிருந்து குண்டுகட்டாக தூக்கிப் போடுகிறான்.

தனக்கு நேர்ந்த அநியாயத்தை அடுத்தவனுக்கு செய்யாதிருப்பவனே நற்பண்பு கொண்டவன். தனக்கு நேர்ந்ததை இன்னொருவனிடம் காட்டி கோபத்தை தீர்த்துக் கொள்வது மனிதப் பண்பே அல்ல. அதைவிட முக்கியமாக அப்படி நடந்து கொள்ளும் ஒருவனை எதிர்த்தால் அவன் தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லி அழத் தொடங்கினால் அவனை காட்டிலும் இழிவான பிறவி இருக்க முடியாது.

ஜெர்மனி மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேறி பாலஸ்தீனர்கள் வசித்த பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கிய நாடுதான் இஸ்ரேல்.

ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும்  இஸ்ரேலும்!

ஹிட்லர் செய்த கொடுமைகளை உலகம் முழுக்க பேசுவதற்கான எழுத்துகள் எழுதப்படுகின்றன. படங்கள் எடுக்கப்படுகின்றன. ஹிட்லரே இறந்து பல வருடங்கள் ஆன பின்பும் வரலாற்று துயரை ஆழமாக பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் யூதர்கள். பாலஸ்தீனர்களை பற்றிய படைப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

ஆக்கிரமிப்பவன் யூதனாக இருந்தால் என்ன, ஹிட்லராக இருந்தால் என்ன?

மனித நாகரிகத்தின் வீழ்ச்சி அவன்!

banner

Related Stories

Related Stories