உணர்வோசை

"நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!" என்று சொல்லும் காதலர் உங்களுக்கு உண்டா? அப்போ இதை படியுங்கள் !

காதலரின் பிரிவை உங்கள் மனம் ஏற்கவில்லையெனில், பொருளை உரிமையாக்கிக் கொண்டாடும் இச்சமூக உறவுகள் கொடுத்த அறிவில் உங்கள் மனம் சிந்திக்கிறது என தெளிந்து கொள்ளுங்கள்.

"நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!" என்று சொல்லும் காதலர் உங்களுக்கு உண்டா? அப்போ இதை படியுங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காதலில் பிரிவு ஏன் நேர்கிறது?

கடவுள், மனம், ஆன்மா, உணர்வு என எல்லாவகை கருத்து கோட்பாடுகளும் தன்னிச்சையாக உருவானதல்ல; ஏதேனும் பொருளிலிருந்து உருவானதே.

பொருள் என்பதை தமிழில் புரிந்து கொண்டால் அஃறிணையாக, வெற்று பொருளாக புரிந்து கொள்ளக் கூடிய ஆபத்து இருப்பதால் ஆங்கிலத்தில் சொல்கிறேன். Matter! சரியான தமிழில் பருப்பொருள் என சொல்லலாம்.

நீங்கள், நான், மேஜை, பூனைக்குட்டி என பார்க்கும் எல்லாமே பருப்பொருள்தான். பருப்பொருள் உருவாவது எப்படி? அணுக்கள் (atoms) கூடித்தான் பருப்பொருட்களான நீங்கள், நான், பூனைக்குட்டி, மேஜை, காற்று, கடல் என எல்லாமாக உருவாகி இருக்கிறோம். இதில் கருத்து என்பது எங்கிருந்து உருவாகி இருக்கும் என நினைக்கிறீர்கள்? தன்னிச்சையாகவா? கிடையாது.

"நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!" என்று சொல்லும் காதலர் உங்களுக்கு உண்டா? அப்போ இதை படியுங்கள் !

ஒரு குழந்தை அழகாக இருக்கிறதென நீங்கள் உருவாக்கும் கருத்துக்கு, குழந்தை என்ற பொருள் தேவை. 'இது ரம்மியமான ஒரு மழை நாள்' என நீங்கள் கவிதை பாடுவதற்கு மழை என்ற பொருள் தேவை. ஒரு பொருளை சாராமல் ஒரு கருத்து உருவாக முடியாது. ஒரு பொருளில் இருந்துதான் ஒரு கருத்து உருவாக முடியும். அப்படித்தான் கடவுள், உயிர், ஆன்மா, அத்வைதம் என எல்லாமும். இதைத்தான் பொருள் முதல்வாதம் என்கிறோம். அதாவது பொருளில் இருந்தே கருத்து உட்பட மொத்தமும் உருவாகியதென சொல்கிறோம்.

நிற்க.

இனி இதை அப்படியே தமிழில் சொல்கிறேன். ஒரு ஆணையோ பெண்ணையோ நீங்கள் காதலிக்கிறீர்கள். அவரும் ஒரு பொருள்தான். அவரே ஒரு பொருள் என்னும்பட்சத்தில் அவரிடம் மாற்றம் என்பது நிகழும்தானே. நன்றாக யோசித்து பாருங்கள். காதலிக்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் வாக்கியம் என்ன? 'நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!'

ஏன்?

ஏனெனில் மாற்றம் ஒன்றே நிலையானது. உங்கள் காதலர் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அச்சமூகம் அப்பா, அம்மா, குடும்பம், தொழில், வேலை, முதலாளி, நண்பன் என பல உறவுகளை உள்ளடக்கியது. எல்லா உறவுகளும் ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்கள் காதலரை சார்ந்திருக்கின்றன. அவரும் ஏதோ ஒரு ஆதாயத்துக்காக அச்சமூகத்தை சார்ந்திருக்கிறார்.

"நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!" என்று சொல்லும் காதலர் உங்களுக்கு உண்டா? அப்போ இதை படியுங்கள் !

அந்த ஆதாயத்தை வாழ்க்கை, பிழைப்பு, முன்னேற்றம், நிம்மதி என எந்த வார்த்தையில் சொன்னாலும் அடிப்படை பண ஆதாயம் மட்டுமே. ஏனெனில் பணம்தான் இன்றைய சமூகத்தின் இயக்கும் காரணியாக நியமிக்கப்பட்டிருக்கிறது. இச்சமூகம் உங்கள் காதலரை அனுதினம் வெவ்வேறு வகையிலான நிகழ்வுகளுக்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த நிகழ்வுகள் அவருக்கு பற்பல படிப்பினைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நேற்று நீங்கள் காதலித்த அந்த நபர், இன்று நிறையவே மாறி இருப்பார். ஆக அவர் முன் இருந்த மாதிரி நிச்சயமாக, திரும்ப எப்போதும் இருக்க மாட்டார்.

மேலும் ஒரு பொருள் கொண்டிருக்கும் தன்மைக்கு முற்றிலும் முரணான தன்மையை அப்பொருளே உள்ளார்ந்து கொண்டிருக்கும். அந்த பொருளை அந்த முரண்பாடே அழித்து வேறொன்றாக மாற்றும்.

இன்றைய குவாண்டம் தியரி காலத்தில், அலையாகவும் துகளாவும் சக்தி மாறுவதை புரிந்துகொள்கிறோம் இல்லையா, அதே போல்தான்!

உங்கள் காதல் உடையும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஆழத்தில் நிச்சயமாக இருக்கும். தேவை ஏற்படுகையில் அது மேலெழுந்து வந்து இயங்கி உங்கள் காதலை அழித்து, பிரிய வைக்கும்.

நெருப்பின் நாக்குகளுக்கு அடியில், ஒளிர்கிறது பாருங்கள் கறுப்பாய்... அதுவே நெருப்பை அணைப்பதற்கான முரண்பாடு!

ஒரு பாலம் கட்டியெழுப்பப்படுகையிலேயே அது இடிந்து விழும் என்ற உள்முரண்பாடும்தான் சேர்த்து கட்டி எழுப்பப்படுகிறது. ஓர் உறவு தொடங்குகையிலேயே அது முறியும் என்ற உள்முரண்பாடோடுதான் தொடங்கப்படும். நாம் பிறப்பதிலிருந்தே, இறந்துவிடுவோம் என்ற உள்முரண்பாடும் சேர்ந்து பிறந்து விடுகிறது.

"நீ முன்ன இருந்த மாதிரிலாம் இப்போ இல்லை!" என்று சொல்லும் காதலர் உங்களுக்கு உண்டா? அப்போ இதை படியுங்கள் !

அன்பால் மட்டுமே இனி சமூக உறவு என சொல்லி பாருங்கள். உங்களை பைத்தியம் என்பார்கள். உழைப்பு விரயமாக்கப்பட்டு மக்கள் சுரண்டப்படும் அமைப்பில், அன்பா சமூக உறவாக இருக்க முடியும்? நேயமா, சமூக அலகாக இருக்க முடியும்?

இவை எல்லாவற்றையும் விரும்பி போதித்து அவற்றுக்கு எதிரான ஒரு சமூக அமைப்பை கட்டி எழுப்பி இருப்பது யார்? காரணமே இல்லாமல் நாம் நிம்மதி இன்றி ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்? வாழ்தல் என்பதை சிறிய அளவுக்கு கூட பார்த்திடாத வாழ்க்கை நம் கைகளில் திணிக்கப்பட்டது எப்படி? நம் உறவுகளில் இத்தனை சந்தேகங்கள் ஏன் வந்தன? நம் மீதே நமக்கு ஏன் இத்தனை அவநம்பிக்கை?

எல்லாவற்றுக்கும் காரணம் நாம் கொண்டிருக்கும், நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் கருத்துகளே. அந்த கருத்துகளை உருவாக்கி தருவது நம் கண் முன்னால் அன்றாடம் நாம் கண்டு புழங்கும் சமூகம் மற்றும் அதன் உறவுகள் என்ற பொருளே. பொருளாக இருக்கும் எதுவுமே மாறும். பொருள் தோற்றுவிக்கும் கருத்துகளும் மாறும். அந்த மாற்றங்களுக்கான விதை அவற்றுக்குள்ளேயே உள்முரண்பாடாக அமைந்துமிருக்கும்.

இனி உங்கள் காதலர், உங்களை விட்டு பிரிவதாக சொன்னால் சண்டை போடாதீர்கள். அது அவரின் உள்முரண்பாடு என புரிந்து கொள்ளுங்கள். பிரிய அனுமதியுங்கள். முன் போல் அவர் இல்லை என நினைக்காதீர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என நினைத்துக் கொள்ளுங்கள். காதலரின் பிரிவை உங்கள் மனம் ஏற்கவில்லையெனில், பொருளை உரிமையாக்கிக் கொண்டாடும் இச்சமூக உறவுகள் கொடுத்த அறிவில் உங்கள் மனம் சிந்திக்கிறது என தெளிந்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில், இங்கு இருக்கும் மக்களின் உழைப்பை மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை, நிம்மதி என எல்லாவற்றையும் சுரண்டும் ஒரு சித்தாந்தம் சமூக உறவுகளாக இயக்கப்பட்டு கொண்டிருப்பதை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அறுத்தெறிய உறுதி பூண்டு மக்களின் மேன்மைக்கு சிந்தியுங்கள். உழையுங்கள். போராடுங்கள்.

banner

Related Stories

Related Stories