உணர்வோசை

ஆண்-பெண் முரண்பாடு ஏன் ? சராசரியான ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரலாம் ?

காதலும் திருமணமும் வன்மத்தையும் காதலையும் கொடுத்து வாங்கி திரும்பக் கொடுக்கும் பரிமாற்றத்தையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.

ஆண்-பெண் முரண்பாடு ஏன் ? சராசரியான ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரலாம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆணுலகம் தெரியாத பெண்ணும் பெண்ணுலகம் தெரியாத ஆணும் உறவுக்குள் இணைய நேர்கையில் முரண்கள் ஏற்படுவதுதான் சாத்தியம். அதுதான் இயற்கையும் கூட.

அத்தகைய முரண்கள் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தின் பல நிலைகளிலிருந்து கிடைத்தவையாக இருக்கும். அவற்றுக்கென சமூகம் கற்பித்த நியாயங்களும் கூட இருக்கவே செய்யும். உதாரணமாக குடும்பக் கடனை போக்க ஓடும் workoholic மகன், அண்ணனை பிடிக்காததால் மொத்த ஆண்கள் மீதுமே பொதுக் கருத்து கொண்டிருக்கும் பெண், எப்படியாவது பணக்காரனாக விரும்பும் ஒரு மிடில் கிளாஸ் ஆண், நல்ல அந்தஸ்தில் இருக்கும் ஆணை மணம் முடிக்க விரும்பும் பெண் என பல நியாயங்கள் இழை இழையாக நமக்குள் நெய்யப்பட்டிருக்கும்.

தனி அனுபவங்களும் சமூகப் படிமங்களும் சேர்ந்துதான் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் கட்டமைக்கிறது.

ஆண்-பெண் முரண்பாடு ஏன் ? சராசரியான ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரலாம் ?

சராசரியான ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரலாம்?

-'என் குடும்பம் உசத்தி... உன் குடும்பம் உசத்தி' பாணி சண்டைகள்.

-பொருளாதார ரீதியான பிரச்சினைகள்.

-'நான் சொல்வதே சரி' என்ற சண்டைகள்.

-இடைவெளி

- ஆதிக்கம், பொறாமை

- சந்தேகம், மாற்று உறவுகள்.

-நம்பிக்கைகளில் உடன்பாடின்மை சார்ந்து வரும் அகங்காரக் கீறல்கள். உதாரணமாக ஆணுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். பெண்ணுக்கு இல்லாமல் இருக்கலாம். அங்கு ஆணின் சிந்தனை 'தான் ஒரு முட்டாள்' என்கிற உண்மையை ஏற்று, பெண் அதே போல் நினைத்துவிடக் கூடாதென்பதற்காக அவளை முட்டாளாக சித்தரிக்கும் முரண்களை உருவாக்கிக் கொண்டிருப்பான்.

-வாழ்வியல் மற்றும் பொருளாதார முடிவுகளில் முரண்கள்.

ஆண்-பெண் முரண்பாடு ஏன் ? சராசரியான ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரலாம் ?

இவற்றை தாண்டி Feminism என்கிற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் அதிகம் புழங்கலாம். பொருளாதாரத்தை நோக்கி மட்டுமே, வீட்டுக்கு வந்த பிறகும் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். சமூக ரீதியாக நாம் கொண்டிருக்கும் அரசியல் விமர்சனங்களை வீட்டில் வாழும் இணையிடம் போடும் சண்டைகளில் கணைகளாக்கலாம். நாம் எதுவாக நம்மை ஆக்க விரும்புகிறோமே அந்த மொத்தத்தையும், காதல் தரும் வெறுப்புடன் எறியப்படும் அந்த கணைகள் உருக்குலைக்கலாம். ஒருவருக்கொருவரான வன்மமாக மாறலாம்.

இவை யாவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் முரண்கள். ஒன்றாக வாழ்வதில் இயல்பாக கிளைத்தெழும் முரண்கள். ஆகச்சிறந்த காதலும் ஆகச்சிறந்த திருமணமும் வன்மத்தையும் காதலையும் கொடுத்து வாங்கி திரும்பக் கொடுக்கும் பரிமாற்றத்தையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.

வேறு என்னதான் செய்வது?

ஒரு வழிதான்!

காதலித்து பாருங்கள். முரண்களை அவதானியுங்கள். சகித்துப் போகுமளவுக்கு சண்டைகள் இருக்குமா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஆமெனில் திருமணம் செய்வதை குறித்து நீங்கள் யோசிக்கலாம்.

ஆண் - பெண் முரணே தீராதா என கேட்டால், அதற்கு சமூக அமைப்பே மாற வேண்டும். இப்போதைக்கு சாத்தியமில்லை.

banner

Related Stories

Related Stories