இந்தியா

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!

பாஜகவுக்குத் தனியாகக் கொள்கை என எதுவும் இல்லை. அவர்களுக்கு அதிகாரத்தைப் பிடிப்பது மட்டுமே ஒரே நோக்கம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதன்பின்னர் இலவசங்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கில ஊடகங்களில் பேசியது இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!

அதில் பேசிய அவர், "அன்று அண்ணா தனிநாடு கேட்ட காரணத்தைப் புரிந்துகொள்ளத் திராவிட இயக்கத்தின் வேர் கொள்கைக்குச் செல்ல வேண்டும். திராவிட இயக்கத்தின் ஆணிவேர் சுயமரியாதைதான் . சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறிவதே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம். சுயமரியாதையில் இருந்தே சுயாட்சி வருகிறது. பல ஆயிரம் நூற்றாண்டுகளாகப் பல அரசர்களைக் கண்ட இந்த நிலம் இந்தியா என்ற நாடாக உருவாக்கப்படுகிறது.

சீனப் போருக்குப் பின்னால், அதன் காரணமாகவே அண்ணா சீனப் போருக்குப் பின் தனி நாடு கோரிக்கையை கைவிட்டார். இப்போதும் கூட மாநில சுயாட்சி, அதிகாரத்தைக் குவிப்பது, அது டெல்லியாக இருந்தாலும் சரி லண்டான இருந்தாலும் சரி, அதற்கு எதிரான எண்ணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது. அன்று இருந்த பேச்சுரிமை கூட இன்று இல்லை என்பதே நிஜம். நாம் எந்த சுதந்திரத்திற்கா போராடினோம். அதில் பேச்சுரிமையும் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆனால், இப்போது குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக எதாவது கூறினாலே அவர்களை அர்பன் நக்சல் என முத்திரையிடும் பழக்கம் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல!

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!

உலகில் இருக்கும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது. இந்தியாவில் தான் ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி உள்ளூர் அமைப்புகளே அதிக அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்காவில் மாகாணங்களுக்கும், நகராட்சிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவசர நிலை சமயத்தில் மாநில பட்டியலில் இருக்கும் சில விஷயங்களும் கூட ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இந்த அதிகார குவியலுக்கு எதிராகவே எங்களைப் போன்ற மாநிலங்கள் குரல் கொடுத்து வருகிறது. அண்ணாவின் குரலும் இது தான். கூட்டாட்சி முன்னிறுத்தும் அரசியலமைப்பு நமக்கு இருந்திருக்க வேண்டும்.

நரேந்திர மோடி கடந்த 25 ஆண்டுகளில் மாநில சுயாட்சிக்கும், ஒன்றிய அரசின் அதிகார குவியலுக்கு எதிராகவும் அதிகம் குரல் கொடுத்தவர் மோடி. குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் இதை அவர் செய்தார். மாநில சுயாட்சி தொடர்பாக நான் பொது மேடைகளில் சொல்லும் அனைத்தும் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது சொன்னதுதான். அப்போது கூட்டாட்சியைக் குறித்துப் பேசுபவர் அதிகார குவியலை நோக்கியே நடவடிக்கை எடுக்கிறார்.

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!

ஒவ்வொரு முறையும் இந்தி மொழியைத் திணிக்க முயலும் போது எதிர்ப்புகள் கிளம்பும். அண்ணா சொன்னது போல 2 மொழிக்கொள்கை இருந்தால் போதும். தாய் மொழி சொந்த மாநிலத்திற்கு உள்ளேயும், ஆங்கிலம் இந்திய மக்களிடையே மற்றும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு உதவும். இந்தி மாநிலங்களால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியாததால், அவர்கள் ஒற்றை மொழி கொள்கையாக இந்தியைப் பின்பற்றுவார்கள். ஆனால், தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் மட்டும் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமா?

பாஜகவுக்கு கொள்கை இல்லை மாநில சுயாட்சியை அழிப்பதே பாஜகவின் நோக்கம். அவர்களால் ஒன்றிய அரசையே முறையாக நடத்த முடிவதில்லை. பாஜகவுக்கே முரணான கொள்கைகள் உள்ளன. அவர்கள் உபி-இல் மாட்டுக்கறிக்கு எதிராகவும் கோவாவில் அதற்கு ஆதரவாகவும் உள்ளனர். பாஜகவுக்குத் தனியாகக் கொள்கை என எதுவும் இல்லை. அவர்களுக்கு அதிகாரத்தைப் பிடிப்பது மட்டுமே ஒரே நோக்கம்.

"மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!

பல வித்தியாசமான மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறையைக் கொண்டவற்றை இந்தியா என்ற நாடாக ஒருங்கிணைந்து இருப்பதே அதிசயம் தான். வரலாற்றில் உலகில் எந்தவொரு நாடும் இதுபோன்ற ஒரு அதிசயம் இல்லை. ஆனால், இந்த அதிசயம் இப்போது பெரிய ஆபத்தில் உள்ளது.

நாம் அனைவரும் நல்ல சமூகத்தை வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் மூலம் தேர்வாகி, ஜனநாயகத்தை அழித்தார்கள். ஆனால், அவர்களுக்கும் அழிவே வந்தது. எனவே, எதுவும் பெரிதாக நீட்டிக்காது. நான் இறை நம்பிக்கை உள்ளது. மனிதர்களைத் தாண்டிய ஒரு சக்தி இருக்கிறது. அது இதையெல்லாம் பார்த்துக் கொள்ளும். இந்தியா சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி வரும். ஒட்டுமொத்த தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கே முடிவு வந்ததை யாரும் மறந்துவிடக்கூடாது"

banner

Related Stories

Related Stories