உணர்வோசை

ஆண்- பெண் முரண் ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?

சக மனிதரின் நியாயங்களை மதிக்காதவர் எனில் அவர் எந்த சித்தாந்தக்காரராக இருந்தாலும் பயன் கிடையாது என்பதே எதார்த்தம்.

ஆண்- பெண் முரண் 
 ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பொதுவாக இன்று நேரும் காதலுறவுகளில் பலதரப்பட்டப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத செல்பேசி, சமூகதளங்கள் போன்றவையும் மாறி வரும் சமூகச் சூழலில் அதிகரிக்கும் நுகர்வு, தனிமனிதவாதம் போன்றவை இன்றைய காதலுறவுகளுக்கு சவால் விடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், சித்தாந்தப் பின்னணி கொண்ட ஆண்-பெண் உறவு எப்படியிருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

சித்தாந்தம் சார்ந்து விருப்பம் கொள்ளலாம்தான். ஓரளவுக்கு அவை உறவில் பங்கும் வகிக்கலாம். ஆனால் ஆண்- பெண் முரண், மிகவும் தொன்மையானது.

சித்தாந்தப் புரிதலே எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியாதல்லவா.. ? ஒருவேளை வெறும் பெயருக்காக தன்னை ஒரு சித்தாந்தக்காரராக காட்டிக் கொள்பவரை என்னவென வரையறுப்பது?

ஆண்- பெண் முரண் 
 ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?

அடிப்படையில் நேர்மை முக்கியம். அது சித்தாந்தத்தின்பால் கொண்ட நேர்மையாகவும் காதலின்பால் கொண்ட நேர்மையாகவும் சகமனிதனின்பால் கொள்ளும் நேர்மையாகவும் எளிதாக உருக் கொள்ளும்.

நேர்மையே இல்லையெனில், சக மனிதரின் நியாயங்களை மதிக்காதவர் எனில் அவர் எந்த சித்தாந்தக்காரராக இருந்தாலும் பயன் கிடையாது.

அதே போல் பெண்ணியத்தை நிராகரிக்கும் ஆணோ/பெண்ணோ இயல்பான வாழ்வில் அதே போல் இருப்பார்களா என்றால் சிலர் இருக்கிறார்கள். சிலர் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆண்- பெண் முரண் 
 ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?

பெண்ணியம் ஏற்கும் சில பெண்கள் தன் கணவனின் ஆதிக்கத்தை ஏற்பவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் கணவனின் ஆதிக்கத்தை மட்டும் ஏற்காதவர்களாக இருக்கிறார்கள். சில இடங்களில் ஊருக்கு எல்லாம் பெண்ணியம் சொல்லிவிட்டு வீடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் இருக்கின்றனர். அல்லது இருதரப்பும் பெண்ணியம் ஏற்று ஜனநாயகத்துடன் ஒருவருக்கு ஒருவர் உரையாடி, உதவி, இருவரும் வளர துணை புரியும் உதாரணங்களும் இருக்கின்றன. இன்னும் சிலர் பெண்ணியம் ஏற்காமல், ஆனால் பெண்ணிய செயல்பாடுகளை சிந்தனைகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.

சித்தாந்த ரீதியிலான உறவுகளில் பல வகைப்பாடுகள் உண்டு. பெரியாரியம், அம்பேத்கரியம், கம்யூனிசம் முதலிய சித்தாந்தங்கள் எல்லாவற்றுக்கும் இதே நிலவரம்தான்.

ஒரு நபர் தன்னளவில் ஒரு சித்தாந்தத்தை ஏன் தேடி வருகிறார் என்பதிலிருந்துதான் அவரையும் அவரின் சித்தாந்தப் பற்றையும் முடிவு செய்ய வேண்டும்.

மக்களுக்காக, சமூகத்துக்காக என வருபவர்களிடம் பெரும் கோபம் இருக்கும். நேர்மை இருக்கும். தனக்கென மட்டும் வேலை பார்க்க வருவோரிடம் பாசாங்கு இருக்கும். ஆணவம் இருக்கும். அத்தகையோரிடம் சித்தாந்தம் எந்தவித மாற்றத்தையும் உருவாக்காது. ஒரு பட்டப்படிப்பை பெயருக்கு பின்னால் போடுவதில் கிடைக்கும் கவுரவத்தைதான் அவர்கள் சித்தாந்தத்திடமிருந்து எடுத்துக் கொள்வார்கள்.

ஆண்- பெண் முரண் 
 ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?

ஒரு மனிதனாக அடிப்படையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம். வஞ்சம், திருட்டுத்தனம், நவதாராளவாதம், ஆதிக்கம், சுரண்டல், நேயமின்மை முதலியவற்றை தளும்ப தளும்பக் கொண்டிருந்தால் எந்த சித்தாந்தமும் நம்மை மாற்றாது. அந்த சித்தாந்தத்தை நம் சுயநலங்களுக்காக நாசமாக்கும் வேலைகளைதான் செய்து கொண்டிருப்போம்.

எல்லா எதிர்மறை குணங்களையும் கொண்டு ஓரளவேனும் நேர்மையை கொண்டிருந்தால் மட்டுமே சித்தாந்தங்கள் நமக்குள் தாக்கத்தை நிகழ்த்தும் வெளியை கொடுப்போம். நாமும் நம்மைச் சார்ந்தோரும் சமூகமும் உய்ய விரும்பிப் பணி செய்வோம்.

முக்கியமாக சித்தாந்தங்கள் சமீபத்தியவை. நேயம் மிகவும் சமீபத்தியது. நேர்மை கொஞ்சம் பழசு. ஆண், பெண் உறவு அதைக் காட்டிலும் பழசு.

நேர்மை மற்றும் நேயத்திலிருந்து தொடங்கினால் உறவுச்சிக்கல் களையும். சித்தாந்தமும் வெல்லும்.

banner

Related Stories

Related Stories