முரசொலி தலையங்கம்

”திராவிட மாடல் 2.O ஆட்சியை மக்கள் உருவாக்கும் நாள்.. தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்” : முரசொலி!

இன்று தமிழ்நாட்டில் 17வது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து திராவிட மாடல் 2.O ஆட்சியை கொண்டு வர சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என முரசொலி வேண்டுகோள்.

”திராவிட மாடல் 2.O ஆட்சியை மக்கள் உருவாக்கும் நாள்.. தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஏப்ரல் 23 – இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான 17 ஆவது பொதுத் தேர்தல். தமிழ்நாடு தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். திராவிட மாடல் 2.0 ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் உருவாக்கும் நாள்.

இருண்டு கிடக்கும் தமிழினத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 17 ஆண்டுகால அயராத உழைப்பால், தொடர் போராட்டங்களால், தியாகத்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை கழகம் பெற்றது. முதல் முறையாக ஆட்சியில் அமர வைத்தார் நம் அன்பு அண்ணா. ஐந்து முறை ஆட்சியில் அமர்த்தி நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார் தலைவர் கலைஞர் அவர்கள். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவர்.

கலைஞர் அவர்கள் நிறைவுற்ற பிறகு தலைமைப் பொறுப்புக்கு வந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், 'இரண்டாம் கலைஞராகவே' நடந்து காட்டினார். எதிர்கொண்ட தேர்தல் அனைத்திலும் வென்று காட்டினார். ஆறாவது முறையாக கழகத்தை அரியணை ஏற்றினார். இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நூறு விழுக்காடு முழுமையான வெற்றியை அவர் பெற்றும் காட்டினார். ஏழாவது முறையாக கழகத்தை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வரவும் அவர் உழைப்புதான் காரணமாக அமையப் போகிறது.

நமது மாநிலம் வளம் பெற - மாநிலத்து மக்கள் நலம் பெற - தமிழ்நாடு, தமிழ்நாடாக இருக்க - தமிழ்நாடு, இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக – தமிழ்நாடு, உலகத்தின் கவனத்தை ஈர்க்க - திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும். இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களே! மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஐந்தாண்டு சாதனைகளுக்காக வாக்களியுங்கள். 75 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டு, தமிழ்மக்களுக்காக உழைத்துவரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தின் உரிமை வரலாற்றை மனதில் வைத்து வாக்களியுங்கள். ஐந்து முறை ஆட்சியைக் கைப்பற்றி – இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் - தலைவர் கலைஞரை மனதில் வைத்து வாக்களியுங்கள்.

”திராவிட மாடல் 2.O ஆட்சியை மக்கள் உருவாக்கும் நாள்.. தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்” : முரசொலி!

14 வயதில் அரசியல் களத்துக்கு வந்து – அரைநூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்துவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் வாக்களியுங்கள்.

இரவு பகல் பாராது - வெயில் மழை பாராது - உடல் சோர்வு, உள்ளச் சோர்வு எதைப்பற்றியும் கவலைப்படாமல் - மக்கள் மகிழ்ச்சி ஒன்றே போதும் என்று இருக்கும் முதலமைச்சரை மனதில் வைத்து வாக்களியுங்கள். உங்கள் ஒவ்வொருவர் வாக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியம். தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்.

2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். அவர்களது நம்பிக்கையை காப்பாற்றிய முதலமைச்சராக ஐந்தாண்டுகள் அவர் செயல்பட்டுள்ளார். பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள், உழவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் நன்மை செய்யும் ஆட்சியையே அவர் நடத்தினார். எந்த தரப்பையும் வருத்தமடைய வைக்கவில்லை. எல்லாத் தரப்பையும் மேன்மை அடைய வைத்தார்.

இந்த ஐந்தாண்டு காலத்தில் எல்லோரையும் அவரது ஏதாவது ஒரு திட்டம் போய் சேர்ந்துள்ளது. பத்து கையெழுத்தில் மொத்த தமிழ்நாட்டையும் மகிழ்ச்சிப்படுத்தி விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

1. பெண்கள் எல்லாருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் தந்துள்ளார். தினந்தோறும் 65 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறார்கள்.

2. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

3. இதுவரை 48 லட்சம் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

4. தினந்தோறும் காலையில் 19 லட்சம் பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவு தரப்படுகிறது.

5. தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில் 10 லட்சம் மாணவ, மாணவியர் ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் பெறுகிறார்கள்.

6. தமிழ்நாடு முழுவதும் 24 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

7. பத்து லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

8. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2.14 கோடி பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

9. ஒன்பது லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் தரப்பட்டுள்ளது.

10.இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. இதுதான்திராவிட மாடல் அரசு.

தமிழ்நாடு அனைத்து சமூகக் குறியீடுகளிலும் முன்னேறிவிட்டது. தொழில் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியிலும் முன்னுக்கு வந்துவிட்டது. அரசியல் களத்தில் தமிழ்நாட்டை பாசிச பா.ஜ.க.வின் கையில் இருந்து பாதுகாக்கவும் இவர் ஒருவரே தகுதி வாய்ந்தவர்.

”திராவிட மாடல் 2.O ஆட்சியை மக்கள் உருவாக்கும் நாள்.. தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்” : முரசொலி!

அ.தி.மு.க. பழனிசாமி கையில் தமிழ்நாடு இருந்திருந்தால் இதற்குள் அனைத்திலும் தேய்ந்து போயிருக்கும். அதனால் தான் பழனிசாமி முதுகில் சவாரி செய்து உள்ளே வருகிறது பாசிச பா.ஜ.க. இன்னும் சிலர் புதிய கட்சிகளைத் தொடங்கி 'நாங்கள் தான் மாற்று' என்று கனைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்ட வளர்ப்புக் கட்சிகள்தான்.

தி.மு.க.வையும் முதலமைச்சரையும் திட்டும் ஒற்றைக் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கட்சிகள் இவை. பல்வேறு மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் பாசிச பா.ஜ.க.வின் இந்த தப்பாட்டம் தமிழ்நாட்டில் செல்லாது. தமிழ்நாடு அரசியல் விழிப்பு பெற்ற மாநிலம் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

இதை முன்கூட்டியே பா.ஜ.க. உணர்ந்து விட்டதால்தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பலநாட்கள் வருவதாகப் போட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டார்கள். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து ஆளுநர் ரவியும் தப்பித்து ஓடினார்.

"இது தமிழ்நாடு வெர்சஸ் N.D.A.! இதில் தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும்!”என்று திரும்பத் திரும்ப முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இது முழு உண்மை என்பதை தொகுதி மறுவரையறை விவகாரம் காட்டிக் கொடுத்து விட்டது. வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் மோடி கொண்டு வந்த மசோதா, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப் பட்டுள்ளது. அதற்கு முழு முதல் காரணம் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

தமிழ்நாட்டின், தென் மாநிலத்தின் குரலை இந்தியாவின் குரலாக மாற்றி, அந்த மசோதாவை தோற்கடித்ததன் மூலமாக பாசிச பா.ஜ.க.வின் எண்ணங்களுக்கு மிகப்பெரிய தடையரணாக நிமிர்ந்து நிற்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

பாசிசத்தை வீழ்த்த திராவிட மாடல் ஒன்றே - ஒற்றை மருந்து. டெல்லியின் ஆதிக்கத்தை தடுக்க மு.க.ஸ்டாலின் ஒருவரே வலிமையான தலைவர். இவரால்தான் தமிழ்நாட்டை பாதுகாக்க முடியும்.

banner

Related Stories

Related Stories