முரசொலி தலையங்கம்

“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!

“கல்­விப் புரட்சி உரு­வாக்­கும் அறிக்கை!” என தலைப்பிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் கல்விக்கு தரப்பட்டுள்ள முக்கியத்துவத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!

“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாண்புமிகு முதலமைச்சராக வந்தது முதல், திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார். மாணவ, மாணவியர் கூடும் அனைத்துக் கூட்டங்களிலும் அவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தையே அதிகம் உணர்த்தி வந்தார்.

“தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மாணவ சமுதாயத்திற்கு நான் சொல்ல விரும்புவது உங்களுக்காக நான் இருக்கிறேன் இந்த ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மனதில் வைத்துச் செயல்படுங்கள். கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத சொத்து ஆகும். எனவே ஒவ்வொரு இளைஞரும், மாணவரும் கல்வியைக் கைப்பற்றி விடுங்கள்.

மாபெரும் சபைதனில் மாலைகள் விழ வேண்டுமானால் முதல் தகுதி கல்வித் தகுதி தான். அடுத்து தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை பல்வேறு உயரத்துக்கு உயர்த்தும். உங்களது அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றித் தருவதற்குத்தான் 'திராவிட மாடல்' அரசு இருக்கிறது. நான் இருக்கிறேன்.

நீங்கள் அடையப் போகும் உயரங்களைப் பார்த்து மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்கள் பெற்றோரைப் போல நானும் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் உயர்ந்து, இந்த மாநிலத்தையும் உயர்த்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தொடர்ந்து மாணவர்களுக்குச் சொல்லி வந்தார் முதலமைச்சர் அவர்கள்.

இந்திய முதலமைச்சர்களிலேயே இவர் ஒருவர்தான் இப்படிச் சொல்லி வருகிறார். அதற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டிக் கொடுத்தார்.

“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!

பள்ளி மாணவர்கள் தகுந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க ‘கல்லூரி கனவு திட்டம்’ கல்லூரி படிப்பின் போது பொருளாதார சுமையைக் குறைக்க ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’; கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ‘சிகரம் தொடு திட்டம்'; பள்ளிப் படிப்பை இடை நிறுத்தம் செய்யும் மாணவர்கள் உயர்கல்வி பயில ‘உயர்வுக்குப் படி திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர்.

'நான் முதல்வன்' திட்டமானது அனைத்து வகையிலும் மாணவர்களை அனைத்துத் தகுதி உள்ளவர்களாகவும் மாற்றி வருகிறது. புதிய கல்லூரிகள், பல்தொழில் நுட்ப நிறுவனங்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. ஓவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பைப் பெறும் இளைஞர்களும், இதனை தமது அரசாகச் சொல்கிறார்கள்.

இந்த வரிசையில் இதனை மேல்நோக்கிய பாய்ச்சலாகக் கொண்டு செல்ல பல வாக்குறுதிகளை, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். கல்விக்கு மிகமிக முக்கியத்துவம் தரும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய ஆறு வகையாகப் பிரித்து வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*பள்ளியில் இடை நிற்றல் இல்லா மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம்.

*2030 ஆம் ஆண்டுக்குள் பள்ளிக் கல்வி பயிலும் அனைவரும் உயர் கல்வி பெறுவதை உறுதி செய்வோம். ஒன்பதாம் வகுப்பு தொடங்கும்போதே மேல் படிப்புக்கான ஆலோசனைகள் தொடங்கப்படும்.

*இதுவரை 1 முதல் 5 வரை படிக்கும் 19 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி காலை உணவு வழங்கப்பட்டது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!

*கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, 'புதுமைப்பெண்', 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

“நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6 மாத பயிற்சியுடன் ரூ.1500 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

*மாணவர்களிடம் அறிவியல் பார்வை உருவாக்கப்பட்டு இளம் அறிவியலாளர்களை உருவாக்குவோம்.

*தமிழ் மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவியருக்கு தொடர் போட்டிகள் நடத்தப்படும். அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

*2030 ஆம் ஆண்டுக்குள் 50 இலட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

*அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

*10 உயர் கல்வி வளாகங்கள், மாவட்டம் தோறும் மாணவியர் விடுதிகள், சமூகநீதிக் கல்லூரி விடுதிகள் அமைக்கப்படும்.

*அனைத்து பட்டப்படிப்புகளிலும் AI குறித்த பாடப்பிரிவு அமைக்கப்படும். செயற்கை நுண்ணறிவின் போக்குகளை ஆராய முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

*தகவல் தொழில் நுட்பத்தின் உலகளாவிய மையமாக சென்னையை ஆக்குவோம்.

- இப்படி பல்வேறு வாக்குறுதிகள் கல்வியை மையமாக வைத்துக் கொடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். 'திராவிட மாடல் 2.0' ஆட்சியானது கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போவது உறுதி.

banner

Related Stories

Related Stories