
S.I.R நடவடிக்கை மிகுந்த சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதில் தமிழ்நாடும் தப்பவில்லை.
S.I.R நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக் காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.
இரட்டைப் பதிவு உள்ளவர்களாக 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் சொல்லப்பட்டு உள்ளார்கள். உயிரிழந்தவர்களாக 26 லட்சத்து 94 ஆயி ரத்து 672 பேர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் இடம் பெயர்ந்தவர்களாக சொல்லப்பட்டு உள்ளார்கள். பெரும்பாலான வாக்காளர்கள் தங்களது முகவரியில் வசிக்காததால் கண்டறிய முடிய வில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"முந்தைய முகவரியில் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தேடிச் சென்ற குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர்கள் இல்லாததே பெருவாரியான வாக்காளர்கள் நீக்கப்படக் காரணம். அந்த வாக்காளர்கள் வேறு பகுதிக்கு இடம் மாறி இருக்கலாம். அல்லது வேறு காரணத்தால் கணக்கீட்டுப் படிவத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்" என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேர் நீக்கப்பட்டு உள்ளார்கள். செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை அதிகம். அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில்தான் நீக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 மட்டுமே.

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களின்பெயரை மீண்டும் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆவ ணங்களுடன் அளிக்க வேண்டும். தன் உறுதிமொழிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சொல்லி இருக்கிறார்.
டிசம்பர் 20 முதல் ஜனவரி 18 வரை வாக்குச் சாவடி வாரியாக சிறப்பு முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களுடன் படிவங்களை நிரப்பி அளிக்க வேண்டும். பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அளிக்கும் படிவம் 6 விண்ணப்பத்தையே நிரப்பித் தர வேண்டும். அதில் வயது மற்றும் இருப்பிட முகவரிக்காக தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும். முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்கள் வாக்களித்த இடத்தைக் குறிப்பிட வேண்டும்.
இவை அனைத்தையும் மிகச் சரியாகக் கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட கவனம் தேவை.
அவசர அவசரமாக இப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் செய்ய வேண்டிய பணியை ஒரே மாதத்தில் செய்தது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை கள் விடும் சூழலில் இப்பணிகள் செய்யப்பட்டது.
அதனால்தான் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளால் இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது எதைப் பற்றியும் தேர்தல் ஆணையம் கவலைப்படவில்லை. இந்த எதிர்ப்புகளை மதிக்கவே இல்லை. தங்களது எஜமானர்கள் என்ன கட்டளை இட்டார்களோஅதையே கண்ணை மூடிக் கொண்டு மற்ற மாநிலத்தில் செய்ததைப் போல இங்கும்செய்தார்கள்.
இறந்தோர், இடம்பெயர்ந்தோர், இரட்டைப் பதிவு செய்திருப்போர் என்ற காரணங்கள் முறையாக இருக்கலாம். ஆனால் இது உண்மை யானது தானா என்பதை நீக்கப்பட்டவர் பட்டியலை எடுத்துச் சென்று வீதி வீதியாக, வீடு வீடாகப் போய் பார்த்தால் தான் உண்மை புரியும்.
இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களோடு டீ சாப்பிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அது போல தமிழ்நாட்டிலும் இருக்காது என்பதில் என்ன நிச்சயம்? எத்தனை பேர் அப்படி வரப் போகிறார்களோ?

இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஒவ்வொரு வாக்காளரும் கண்காணிக்க வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதற்கான சரியான எச்சரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். நேற்றைய தினம் காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது,"ஒரே ஒருவர்கூட தவறுதலாக விடுபட்டு இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
"168 தொகுதிகளில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும். உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள்.
அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல, மற்ற 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவன மாக இருந்தும் ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
கும்மிடிப்பூண்டியில் ஒரே ஒரு வாக்குச் சாவடி நிலைமை இது. இதுபோல ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கவனிக்க வேண்டும். BLAZ களும், BIL.C களும் படிவங்களை சரியாக பயன்படுத்தி, சேர்த்தல் நீக்குதல் செய்வதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் அவர் கட் டளை பிறப்பித்துள்ளார்.
கவனம். கவனம். கவனம்.






