முரசொலி தலையங்கம்

'இழிவான சார்'- ஆகக் காட்சியளிப்பது பழனிசாமிதான் : முரசொலி தலையங்கம் கண்டனம்!

பழனிசாமி சட்ட மேதையாக இருந்தால், இந்த விசாரணையில் ஏதாவது விடுபட்டுள்ளது என்று சொல்லத் தயாராக இருக்கிறாரா?.

'இழிவான சார்'- ஆகக் காட்சியளிப்பது பழனிசாமிதான் :  முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-06-2025)

இழிவான சார்...!

சென்னை மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி இராஜலட்சுமி வழங்கி இருக்கிறார்.

சென்னை மாணவி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடந்தது. அவர் மறுநாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரை வைத்து ஞானசேகரன் என்பவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மே 28 ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி குற்றவாளிக்கான தண்டனை தரப்பட்டது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த சலுகை அடிப்படையிலும் அவர் சிறையை விட்டு வெளியே செல்ல முடியாது. அவர் சிறைக்குள்தான் இருக்க வேண்டும். அதுதான் இந்தத் தீர்ப்பின் சிறப்பம்சம்.

ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். இதுதவிர அபராதத் தொகையை இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆயுள் தண்டனையும், விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தலுக்கு மூன்று மாதங்களும், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்து தலுக்கு ஒரு மாதமும், உடலில் காயத்தை ஏற்படுத்துதல் என்ற குற்றத்திற்கு ஒருஆண்டு சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமைக்கு மூன்று ஆண்டுகள்சிறை தண்டனையும், கடுமையாக தாக்குதல் என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் கொலை மிரட்டல் விடுத்தல் என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் குற்றம்தொடர்பான ஆதாரங்களைஅழித்தல் என்ற குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம்11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டன.

புகார் கொடுத்த அன்றே குற்றவாளி கைது செய்யப்பட்டதும், விசாரணையில் அனைத்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதும், உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், 157 நாளில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததும் தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவத்தை வைத்து, ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று சொல்லி வண்டியோட்ட நினைத்த பழனிசாமியின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. ஆனாலும் வெட்கமில்லாமல், ‘யார் அந்த சார்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் பழனிசாமி. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்பதை காவல் துறை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபித்து விட்டது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.

'இழிவான சார்'- ஆகக் காட்சியளிப்பது பழனிசாமிதான் :  முரசொலி தலையங்கம் கண்டனம்!

நீதிபதி இராஜலட்சுமி அவர்கள் வழங்கிய தீர்ப்பில்,“ ‘சார்' என்ற வார்த்தையைபாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில் தான் ஞானசேகர் பயன்படுத்தி உள்ளார். தன்னை பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசை திருப்பவும், மிரட்டவும் ‘சார்’ வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இது அறிவியல் பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்ற அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் முழு மனதுடன் ஏற்று கொள்கிறது"என்று குறிப்பிட்டுள்ளார். இதனை சேலஞ்ச் செய்கிறாரா பழனிசாமி?

இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞரான மேரி ஜெயந்தி அளித்துள்ள பேட்டியிலும் இதனை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

“இந்த பாலியல் வழக்கில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்றெல்லாம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒன்றை நான் தெளிவுபடுத்த நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை குற்றவாளியின் செல்பேசிதான் இவ்வழக்கின் முக்கிய ஆயுதம். அந்த செல்பேசி, நீதிமன்றம் மூலமாக தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டு, அதில் என்னென்ன இருக்கிறது என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது. பாலியல் சம்பவம் நடந்த 23ஆம் தேதி, அந்த செல்பேசி F1ightMode- இல் போடப்பட்டிருந்தது என்பது Forensic Science Laboratory (FSL) தயாரித்தஆவணத்தின் வழி உறுதியானது.

செல்பேசி Flight Mode-ல் போடப்பட்டிருந்தது ஆவணம் மூலமாகவும், நிபுணரின் வாய்மொழி சாட்சியாகவும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த செல்பேசியில் பயன்படுத்தப்பட்டிருந்த Sim - Airtel Sim. அந்த நிறுவனத்தின் அலுவலர், நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து ‘அந்த தொலைபேசியில் 6.23 மணிக்குதான் முதல் அழைப்பு வந்துள்ளது. அதற்கு பிறகு 8.52 மணி வரைக்கும் எந்த அழைப்பும் இல்லை' எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

முதன்மை குற்றவாளியுடன் மற்றொருவர் தொடர்பில் இருக்கிறார் என்று நீதிமன்றம் கருதினால், அந்த மற்றொருவரையும் அழைத்து விசாரணை நடத்துவதற்குநீதிமன்றத்திற்கே அதிகாரம் உண்டு. ஆனால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாம் திருப்திகரமாக இருந்த காரணத்தால்தான், ஒருவர்தான் இதில் குற்றவாளி என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு, ஒருவர் மீது மட்டும் நீதி மன்றம் நடவடிக்கை எடுத்து, இந்தத் தீர்ப்பைக் கொடுத்துள்ளது. இதற்கு மேலும், இதுகுறித்து பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்”என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதில் பழனிசாமி என்ன குறை கண்டார்?

ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது, அவரது செல்போன் ப்ளைட் மோடில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காக, தானும் பல்கலைக்கழக ஊழியர்தான் என ஏமாற்றும் வகையில், ப்ளைட் மோடில் இருந்த செல்போனில், பேசுவது போல ஞானசேகரன் ஏமாற்றியிருக்கிறார்.

அவரது போனுக்கு, சம்பவத்தின்போது எந்த அழைப்பும் வரவில்லை, அவரும் எந்த அழைப்பையும் மேற்கொள்ளவில்லை என்பது செல்போன் சேவை நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவம் நடந்த இரண்டரை மணி நேரம் எந்த தொடர்பும் அவரது போனில் இருந்து இல்லை. இரவு 8.52 மணிக்குத்தான் முதல் எஸ்.எம்.எஸ். வருகிறது. அதுவும்மிஸ்டு கால் அழைப்பு தொடர்பான எஸ்.எம்.எஸ். அது. ஆனால் திரும்பத் திரும்பபொய் சொல்லி, இந்த விவகாரத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

ப்ளைட் மோடில் இருந்தால் போன் போகாது, போன் வராது என்பதை பழனிசாமிக்கு சொல்லத் தேவையில்லை. சேலம் டூ சென்னை அடிக்கடி வந்து போகிறவர்தான் அவர். அடுத்த தடவை வரும் போது பிளைட் மோட் போட்டுவிட்டு, போன் போகிறதா என்பதை அவர் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். பக்கத்து இருக்கைக்காரர்தான் இவரைப் பரிதாபமாக பார்ப்பார்.

பழனிசாமி சட்ட மேதையாக இருந்தால், இந்த விசாரணையில் ஏதாவது விடுபட்டுள்ளது என்று சொல்லத் தயாராக இருக்கிறாரா? இந்த விவகாரத்தில் இழிவான அறிக்கைகளை வெளியிட்டு, 'இழிவான சார்' ஆகக்காட்சியளிப்பது பழனிசாமிதான்!

banner

Related Stories

Related Stories