முரசொலி தலையங்கம்

“மோடியை கிலி அடைய வைத்த வெற்றி ஃபார்முலாவுக்கு சொந்தக்காரர்தான் மு.க.ஸ்டாலின்...” - முரசொலி புகழாரம் !

கலைஞருக்குப் பிறகு வெற்றிடம்' என்றார்கள். அது வெற்றிடம் அல்ல, வெற்றியின் இடம் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய தலைவரின் வெற்றிப் பயணம் தொடர்க!

“மோடியை கிலி அடைய வைத்த வெற்றி ஃபார்முலாவுக்கு சொந்தக்காரர்தான் மு.க.ஸ்டாலின்...” - முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வெற்றியின் நாயகன்!

நின்ற தேர்­தல்­க­ளில் எல்­லாம் வென்ற தலை­வர் தமி­ழி­னத் தலைவர் கலை­ஞர். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலைமை பொறுப்பை ஏற்­றுக் கொண்ட பிறகு, எதிர்­கொண்ட தேர்­தல் எல்லாம் வெற்­றி­யைப் பெற்றுத் தந்த தலை­வ­ராக மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் உயர்ந்து நிற்­கி­றார்­கள்.

2019 - நாடா­ளு­மன்­றத் தேர்­தல்

2019 - சட்­ட­மன்ற இடைத் தேர்­தல்

2019- - 9 மாவட்ட ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல்

2021 - ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல்

2021 - தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல்

2022 - நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல்

2023 - ஈரோடு இடைத்­தேர்­தல்

2024- நாடாளுமன்றத் தேர்தல் - என தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்து வெற்றியின் நாயகராக காட்சி அளிக்கிறார் மாண்புமிகு தலைவர் அவர்கள். ‘உழைப்பு - உழைப்பு உழைப்பு' - என்று இன்றைய தலைவரை அடையாளப்படுத்தினார் தலைவர் கலைஞர். ‘செயல் - செயல் - செயல்' - என்றும்; ‘சாதனை செயல்படுவதன் மூலமாக 'வெற்றி -- வெற்றி - வெற்றி' - என வென்று காட்டி வருகிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சாதனை 'சாதனை' - என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் வென்று காட்டிய சாதனை என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாகும். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் 40 இடங்களையும் கைப்பற்றியது. அதே வெற்றியை 2009 ஆம் ஆண்டு பெற முடியவில்லை. ஆனால், 2019 ஆம் ஆண்டு 39 இடங்களைக் கைப்பற்றி, அடுத்து நடந்த 2024 தேர்தலிலும் அதே சாதனையை, விடுபட்ட ஒரு இடத்தையும் சேர்த்துக் கைப்பற்றியதுதான் வரலாற்றில் இல்லாத சாதனையாகும். ஒரு தொகுதிக்குக் கூட சேதாரம் இல்லாமல் முழு வெற்றியை முழுமையான வெற்றியைப் பெற்றுத் தந்து விட்டார் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“மோடியை கிலி அடைய வைத்த வெற்றி ஃபார்முலாவுக்கு சொந்தக்காரர்தான் மு.க.ஸ்டாலின்...” - முரசொலி புகழாரம் !

இந்த வெற்றிக்கு முழு முதல் காரணம் என்பது, தனது இலக்கை லட்சக்கணக்கான தொண்டர்களின் இலக்காக மாற்றிவிடுவதில்தான் தலைவரின் வெற்றி அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றால்தான், இந்திய அரசியலில் - நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத சக்தியாக தி.மு.க. திகழும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு தொண்டனின் உடலிலும் வார்த்தைகளால் வார்த்தார் தலைவர்.

எத்தனை மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் எத்தனை ஆலோசனைக் கூட்டங்கள் எத்தனை காணொலிக் கூட்டங்கள் பாக முகவர்கள் மாநாடுகள் பரப்புரைப் பயணங்கள் பரப்புரைக் கூட்டங்கள் - மக்கள் சந்திப்புகள் – அறிக்கைகள் கடிதங்கள் -- வீடியோக்கள் ஆடியோக்கள் - இவை அனைத்தும் கணக்கிட முடியாதவை. 2023 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இருந்தே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் தலைவர்.

"பாசிச பா.ஜ.க.வை வீழ்த்துவோம்' என்ற கொள்கையை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் சேர்த்தே உணர்த்தினார். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக, பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பதையும் உணர்த்தினார். காங்கிரஸ் கட்சியும் அந்த அணியில் இருந்தாக வேண்டும் எனக் கட்டளையிட்டார்.

'காங்கிரஸை இணைத்துக் கொள்ளாவிட்டால் அந்த அணி கரை சேராது' என்பதைச் சொன்னார். காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியால் வெற்றி பெற முடியாது என்பதையும் அகில இந்தியக் கட்சிகளுக்குத் தொடக்கத்திலேயே எடுத்துச் சொன்னார். காங்கிரஸ் அல்லாத அணியை அமைக்க சில தலைவர்கள் முயற்சித்தபோது அது சாத்தியமில்லாத அணி என்பதை அவர்களுக்கே எடுத்துரைத்தார். 'இந்தியாவைக் காக்க ‘இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியதன் மூலமாக இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“மோடியை கிலி அடைய வைத்த வெற்றி ஃபார்முலாவுக்கு சொந்தக்காரர்தான் மு.க.ஸ்டாலின்...” - முரசொலி புகழாரம் !

இந்தியாக் கூட்டணி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு அந்தத் தலைவர்களிலும் ஒற்றுமையை வலியுறுத்தினார். வலிமைப்படுத்தினார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று நினைத்த மோடியை கிலி அடைய வைத்த வெற்றி ஃபார்முலாவுக்குச் சொந்தக்காரர்தான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘அனைத்துத் தொகுதியிலும் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்' என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டது முதல் - ‘உங்கள் தொகுதியில் வென்று விட்டு வந்து என்னைப் பாருங்கள்' என்று மாவட்ட அமைச்சர்களுக்கும், மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களுக்கும் கட்டளையிட்டது வரை ஒரே நேர்கோட்டில் வெற்றிச் சிந்தளையை அனைவர் உள்ளத்திலும் விதைத்தார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

வெற்றிக்குத் தேவை மிகச் சரியான இலக்கு. அந்த இலக்கை நோக்கி தொய்வில்லாத பயணம். அந்தப் பயணத்தை தடையில்லாமல் நடத்துவது; அதுவே வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும். இந்த இலக்கணத்தை எக்கணமும் தவறாமல் செயல்படுத்திக் காட்டியதன் மூலமாக வெற்றியின் நாயகனாகவே உயர்ந்து நிற்கிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

'கலைஞருக்குப் பிறகு வெற்றிடம்' என்றார்கள். அது வெற்றிடம் அல்ல, வெற்றியின் இடம் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய தலைவர் வாழ்க! அவர் தம் வெற்றிப் பயணம் தொடர்க!

banner

Related Stories

Related Stories