முரசொலி தலையங்கம்

கலைஞர் நூற்றாண்டு விழா : ஒரு தலைவருக்கு இத்தகைய விழாக்கள் நடைபெற்றதில்லை - முரசொலி பாராட்டு !

கலைஞர் நூற்றாண்டு விழா : ஒரு தலைவருக்கு இத்தகைய விழாக்கள் நடைபெற்றதில்லை - முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம்

05.06.2024

உயர்ந்த கலை­ஞ­ருக்­குச் சிறந்த விழாக்­கள்

அனைத்­தி­லும் உயர்ந்த தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ருக்கு மிகச் சிறந்த விழாக்­களை நடத்­திக் காட்­டி­விட்­டார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் அடைந்த உய­ரம் என்­பது மிக­மிக அதி­கம். ஐந்து முறை தாய்த் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர். 13 முறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர். இந்­திய நாட்­டின் பிர­த­மர்­களை உரு­வாக்­கி­ய­வர். இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர்­களை உரு­வாக்­கி­ய­வர். இந்­தி­யா­வின் பல்­வேறு அர­சி­யல் மாற்­றங்­க­ளுக்கு அடித்­த­ளம் அமைத்­த­வர். தமிழ்­நாட்­டில் அதிக ஆண்­டு­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர். தமிழ்­நாட்­டின் ஆட்சி ஆவ­ணங்­க­ளில் அதி­கக் கையெ­ழுத்­து­களை இட்­ட­வர். இந்த பூமிப்­பந்­தில் 95 ஆண்­டு­கள் வாழ்ந்து அதில் 80 ஆண்­டு­கள் பொது­வாழ்க்­கைக்­குச் சொந்­தக்­கா­ரர். தலை­வர்­க­ளுக்கு எல்­லாம் தலை­வர். முதல்­வர்­க­ளுக்­கெல்­லாம் முதல்­வர்!

இத்­த­கைய கலை­ஞ­ரின் நூற்­றாண்டு விழாவை ஒரு விழா­வாக நடத்­து­வது என்­பது சாத்­தி­ய­மில்லை. பன்­முக ஆற்­றல் கொண்ட தலை­வ­ருக்கு பன்­முக விழா­வாக நடத்­தத் திட்­ட­மிட்­ட­தில்­தான் திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளது பன்­மு­கச் சிந்­தனை வெளிப்­பட்­டது.

* இத­ழா­ளர் - – கலை­ஞர்

* எழுத்­தா­ளர் -– கலை­ஞர்

* கலை­ஞர் - – கலை­ஞர்

* சமூ­க­நீ­திக் காவ­லர் - – கலை­ஞர்

* பண்­பாட்­டுப் பாசறை - – கலை­ஞர்

* ஏழைப் பங்­கா­ளர் - – கலை­ஞர்

* சட்­ட­மன்ற நாய­கர் - – கலை­ஞர்

* பகுத்­த­றிவு, சீர்­தி­ருத்­தச் செம்­மல் - – கலை­ஞர்

* நவீன தமிழ்­நாட்­டின் சிற்பி -– கலை­ஞர்

* நிறு­வ­னங்­க­ளின் நாய­கர் - – கலை­ஞர்

* தமிழ்த்­தா­யின் தவப்­பு­தல்­வர் - – கலை­ஞர்.

* தொலை­நோக்­குச் சிந்­த­னை­யா­ளர் - – கலை­ஞர் – ஆகிய 12 தலைப்­பு­ க­ளில் குழுக்­களை அமைத்­தார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

கலைஞர் நூற்றாண்டு விழா : ஒரு தலைவருக்கு இத்தகைய விழாக்கள் நடைபெற்றதில்லை - முரசொலி பாராட்டு !

மாண்­பு­மிகு அமைச்­சர் பெரு­மக்­கள் – அர­சுத் துறை செய­லா­ளர்­கள் - – அலு­வ­லர்­கள் - – எழுத்­தா­ளர்­கள் – - பேச்­சா­ளர்­கள் - – கல்­வி­யா­ளர்­கள் - – தொழில் அதி­பர்­கள் – - சமூ­கச் செயற்­பாட்­டா­ளர்­கள் என பல­து­றை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் இக்­கு­ழுக்­க­ளில் இடம் பெற்­றி­ருந்­தார்­கள். அர­சு­டன் இணைந்து தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும் கொண்­டா­டும் விழாக்­க­ளாக இவை இருக்க வேண்­டும், கலை­ஞ­ரின் ஆற்­றலை அனைத்து மக்­க­ளும் அறிந்து கொள்­ளும் விழாக்­க­ளாக இவை அமைய வேண்­டும் என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வழி­காட்­டி­னார்­கள்.

தமிழ்­நாடு முழு­வ­தும் கடந்த ஓராண்டு காலம் என்­பது கலை­ஞர் ஆண்­டைப் போலவே அமைந்­தி­ருந்­தது.

கலை­ஞ­ரின் நூற்­றாண்டு வாழ்க்­கையை மன­தில் பதிய வைக்­கும் புகைப்­ப­டக் கண்­காட்­சி­கள் பல்­வேறு நக­ரங்­க­ளில் இடம் பெற்­றன.இவை அனைத்­தும் படங்­க­ளாக மட்­டு­மல்ல; பாடங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன. கலை­ஞர் என்­றாலே பேனா. அவ­ருக்கு மிக­மி­கப் பிடித்­த­தும் எழு­து­கோல்­தான். எழு­து­கோல் உரு­வத்­தில் முத்­த­மிழ்த் தேர் உரு­வாக்­கப்­பட்டு அது கன்­னி­யா­கு­மரி முதல் தலை­ந­கர் சென்னை வரை வலம் வந்­தது. ஒவ்­வொரு நக­ரத்­தி­லும் அந்த முத்­த­மிழ் தேருக்கு கிடைத்த வர­வேற்பு என்­பது மீண்­டும் கலை­ஞர் உயிர்த்­தெ­ழுந்த உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. துறை சார்ந்த சிறப்பு மலர்­கள் வெளி­யி­டப்­பட்­டன. இவை கலை­ஞ­ரின் பன்­முக ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தும் கலைக் களஞ்­சி­யங்­க­ளாக அமைந்­துள்­ளன.

காலத்­தால் அழி­யாத கலை­ஞ­ரின் பாடல்­கள் கொண்ட மாபெ­ரும் மெல்­லிசை நிகழ்ச்சி - – அனை­வர் மன­தி­லும் நின்று நிழ­லா­டும் நிகழ்ச்­சி­யாக நடை­பெற்­றது. மாவட்­டங்­கள் தோறும் கலை நிகழ்ச்­சி­கள் - – பேச்­சுப்

போட்­டி­கள் -– கட்­டு­ரைப் போட்­டி­கள் நடை­பெற்­றன. கவி­ஞர்­க­ளுக்கு எல்­லாம் கவி­ஞ­ரான கலை­ஞர் பெய­ரால் மாநில அள­வி­லான கவி­தைப் போட்டி நடத்­தப்­பட்டு மூன்று சிறந்த கவி­தைக்கு பரி­ச­ளிக்­கப்­பட்­டது. கருத்­துச்

செறி­வுள்ள சொற்­பொ­ழி­வு­கள் இடம்­பெற்ற கருத்­த­ரங்­கு­கள், பட்­டி­மன்­றம் ஆகி­ய­வை­யும் நடத்­தப்­பட்­டன.

தமிழ்­நாடு அர­சின் சார்­பில் மூன்று மலர்­கள் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. இவை மூன்­றை­யும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வெளி­யிட்­டுள்­ளார்­கள்.

‘முர­சொலி எனது மூத்த பிள்ளை’ என்று சொல்­லி­ய­வர் கலை­ஞர். ‘முர­சொலி’ நாளி­த­ழின் சார்­பில் வெளி­யி­டப்­பட்ட மலர் என்­பது கலை­ஞ­ரின் கரு­வூ­ல­மாக அமைந்­தி­ருக்­கி­றது. ‘முர­சொலி’ ஆசி­ரி­யர் குழு­வுக்கு மிக முக்­கி­ய­மான ஒரு ஆலோ­ச­னையை தலை­வர் அவர்­கள் வழங்­கி­னார்­கள். ‘தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சூன் 3 ஆம் தேதி­யன்று பிறந்­தார்­கள். ஒவ்­வொரு மாத­மும் 3 ஆம் தேதி என்று ஒவ்­வொரு துறை சார்ந்­த­வர்­களை கலை­ஞர் குறித்து எழு­தச் சொல்­லுங்­கள். மாதம் தோறும் இந்­தச் சிறப்பு பக்­கங்­க­ளைக் கொண்டு வாருங்­கள்.

கலைஞர் நூற்றாண்டு விழா : ஒரு தலைவருக்கு இத்தகைய விழாக்கள் நடைபெற்றதில்லை - முரசொலி பாராட்டு !

12 மாதங்­கள் வந்­த­பி­றகு அதை மொத்­த­மா­கத் தொகுத்து மல­ரா­கக் கொண்டு வர­லாம் என்ற ஆலோ­ச­னை­யைத் தலை­வர் அவர்­கள் சொன்­னார்­கள்.12 மாதம் வெளி­யான சிறப்­புப் பக்­கங்­க­ளின் தொகுப்­பு­தான் கலை­ஞர் நூற்­றாண்டு நிறைவு சிறப்பு மலர் ஆகும்.திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் - – பொதுச் செய­லா­ளர் - – பொரு­ளா­ளர் - – முதன்­மைச் செய­லா­ளர் –- துணைப் பொதுச் செய­லா­ளர்­கள் - ஆகி­யோர் நினை­வு­க­ளோடு பல்­வேறு இயக்­கங்­க­ளின் தலை­வர்­கள் இதில் எழுதி இருக்­­கிறார்­கள். உணர்­வுத் தலை­வ­ராக எப்­படி இருந்­தார் கலை­ஞர் என்­பதை உடன்­பி­றப்­பு­க­ளின் பார்வை வெளிப்­ப­டுத்­து­கி­றது. பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், கலை­யு­ல­கத்­தி­னர், கவி­ஞர்­கள், கல்­வி­யா­ளர்­கள், இளை­ஞர்­கள் என பல­த­ரப்­பட்ட ஆளு­மை­க­ளும் தங்­கள் பார்­வை­யில் தலை­வர் கலை­ஞ­ரின் ஆற்­றலை எடுத்­­துரைத்­துள்­ளார்­கள். எல்­லார்க்­கு­மான தலை­வ­ராய் தலை­வர் கலை­ஞர் எப்­படி எல்­லாம் இயங்கி இருக்­கி­றார் என்­ப­தைச் சொல்­லும் கரு­வூ­ல­மாக இந்த மலர் அமைந்­துள்­ளது.இது கையில் இருந்­தால் கலை­ஞ­ரோடு வாழும் உணர்வு ஏற்­ப­டும்.

ஒரு தலை­வர் இத்­தனை சாத­னை­க­ளைச் செய்­த­தில்லை என்று பெயர் வாங்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர். ஒரு தலை­வ­ருக்கு இத்­த­கைய விழாக்­கள் நடை­பெற்­ற­தில்லை என்று சொல்­லும் அள­வுக்கு சிறப்­பான, உயர்ந்த, பன்­முக விழாக்­களை நடத்­திக் காட்­டி­ய­வர் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இரு­வ­ரை­யும் போற்­று­வோம்.

banner

Related Stories

Related Stories