தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முழுவதும் 35,12,147 மாணவ, மாணவிகள் பயணம் மேற்கொள்ள 2025-2026 கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுமார் 4,10,000 மாணவ, மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போக்குவரத்துத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ஆண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்குவதை தொடங்கி வைக்கும் வகையில், மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

மேலும், சென்னை மாநகரில் பயிலும் மாணவ, மாணவிகள் அவர்களது தினசரி பேருந்து பயணத்தின்போது மிகுதியான கூட்டம் மற்றும் பொதுமக்களுடன் நெரிசலில் நின்று கொண்டு பயணிப்பது போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதை தவிர்க்கவும், மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பேருந்து சேவையை வழங்கவும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு, 50 பயண நடைகளாக "சிறப்பு மாணவர் பேருந்துகளை" காலை பேருந்து முனையத்திலிருந்து இயக்கி, வழித்தடங்களில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றி, பள்ளி வளாகத்தின் உள்ளே சென்று இறக்கிவிடப்படும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு என இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories