உலகம்

"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !

"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" -  டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" -  டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !

எனினும் அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உக்ரைனுக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்க அமெரிக்கா மறுத்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரை நிறுத்த விரும்புவதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து டிரம்ப் தனது சமூகவலைத்தள பதிவில், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம்.

அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க கூடாது. அதே போல கிரிமியாவுக்கு உக்ரைன் உரிமை கொண்டாடக் கூடாது. மேலும் சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories