முரசொலி தலையங்கம்

“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

கல்வியில் சிறந்த தமிழ்நாடாக, அறிவில் சிறந்த தமிழ்நாடாக, அனைத்திலும் முதன்மைமிகு தமிழ்நாடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்த்தெடுத்து வருவதன் சாட்சியாக இந்த மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள்.

“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

துள்ளி எழும் பள்ளிகள்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித் துறை துள்ளி எழுந்து எந்த அளவுக்குச் செயல்பட்டுள்ளது என்பதை அந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கான சிந்தனைகளில் மிகமிக முக்கியமானது கல்விக்குத் தரும் இடம் ஆகும். ‘யாராலும் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து ஒன்று உண்டென்றால் அது கல்விதான்’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் முதலமைச்சர். அனைவருக்கும் கல்வி – அனைவர்க்கும் அடிப்படைக் கல்வி - அனைவர்க்கும் கல்லூரிக் கல்வி - – அனைவர்க்கும் உயர்கல்வி என்ற படிநிலைகளோடு கல்விக் காலத்தை வரையறுத்து கல்வித் துறையை வளர்த்து வருகிறார் முதலமைச்சர்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவர்க்கும் வேலை, அனைவர்க்கும் அனைத்து உரிமைகள் என்பது ஆகும். கல்வியில் சமத்துவமின்மை இருந்ததை தகர்க்கவே சமூக நீதித் தத்துவம் உருவானது. இன்று ‘நீட்’ தேர்வை எதிர்க்கவும் அதுதான் காரணம். பல்வேறு தடைகளை ஏற்படுத்தி மாணவர்களை கல்விச் சாலைகளுக்கு வெளியே தள்ளும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கவும் அதுதான் காரணம். வாழ்விடங்களாகிய வீடுகளைப் போலவே, கல்வி வாழ்விடங்களாக பள்ளிகளை உருவாக்குவதே திராவிட மாடல் ஆட்சியாகும்.

“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி – 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடி – வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி ஆகியவை உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான திட்டப்படி ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் திட்டங்களாக அமைந்துள்ளன. இத்தகைய கல்விப் புரட்சியானது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உன்னிப்பான கவனிப்பால் இந்தத் திட்டங்கள் கூர்தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டதன் விளைவைத்தான் தேர்வு முடிவுகளில் நாம் காண்கிறோம்.

“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

இந்த ஆண்டு 7,60,606 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். ( கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் என்பது 94.03 ஆகும் ) தேர்வு எழுதிய மாணவியர்களில் 96.44 சதவிகிதம் பேரும், மாணவர்களில் 92.37 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மாணவர்களை விட 4.07 சதவிகிதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மொத்தமுள்ள மேல்நிலைப்பள்ளிகள் 7,532. இதில் 2,478 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் 397. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமானது 91.02 ஆகும். தமிழில் 35, ஆங்கிலத்தில் 7, இயற்பியலில் 633, வேதியியலில் 471, உயிரியலில் 652, கணிதத்தில் 2587, தாவரவியலில் 90, விலங்கியலில் 382, கணினி அறிவியலில் 6996, வணிகவியலில் 6142, கணக்கு பதிவியலில் 1647, பொருளியலில் 3299, கணினிப் பயன்பாட்டில் 2251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 210 பேர் என 26 ஆயிரத்து 352 – மாணவ – மாணவியர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் கடந்த ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் தமிழ்நாட்டை விடக் குறைவு. தமிழ்நாடு ஏறக்குறைய 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக கொண்டுள்ளது என்பதே மிகப்பெரிய சாதனையாகும்.

“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

தேர்ச்சி பெற முடியாதவர்களையும் கனிவோடு கவனிக்கும் அரசாக உள்ளது. தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ - – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ – நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. 30 மனநல ஆலோசகர்கள் 3 சுழற்சி முறையில் செயல்படுவர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடாக, அறிவில் சிறந்த தமிழ்நாடாக, அனைத்திலும் முதன்மைமிகு தமிழ்நாடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்த்தெடுத்து வருவதன் சாட்சியாக இந்த மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories