முரசொலி தலையங்கம்

நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !

நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (21.10.2023)

நீட் தேர்வை நொறுக்கும் கையெழுத்துகள்

..................

மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்து வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

கழகத்தின் இளைஞர் அணி -– மாணவர் அணி -– மருத்துவ அணி ஆகிய மூன்று அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் அக். 21 ஆம் தேதி (இன்று) முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், மருத்துவ அணிச் செயலாளர் நா.எழிலன் நாகநாதன் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.

இதுதொடர்பாக நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் போது, “நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக நாம் மாற்ற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை நாம் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !

பாசிச பா.ஜ.க. அரசின் நீட் என்னும் பலிபீடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பலியாகி இருக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்திலும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதற்குப் பிறகும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை. இப்படி உயிர்ப்பலிகள் அதிகம் நடக்கிறதே, என்ன காரணமாக இருக்கும் என்ற ஆய்வைக் கூட நடத்த பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு ஏன் இவ்வளவு வலிமையாக எதிர்க்கிறது என்றுகூட அவர்கள் சிந்திக்கத் தயாராக இல்லை.

நீட் தேர்வு மதிப்பெண்ணை பூஜ்யம் ஆக குறைத்து விட்டார்கள். அதன்பிறகும் இந்தத் தேர்வில் தகுதி இருக்கிறதா? 2023-–24-–ஆம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், பொதுப்பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்களும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்களும் இதற்கான கட்–ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேரவில்லை. உடனே, மதிப்பெண் தகுதியையே நீக்கிவிட்டார்கள்.

2023 ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண்ணை பூஜ்யமாக ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம் குறைத்துவிட்டது. அதாவது இடங்கள் நிரம்பவில்லை என்றதும் மதிப்பெண் தகுதியையே நீக்கி விட்டார்கள். நீட் தேர்வில் பெறும் கட் ஆப் மதிப்பெண்ணை வைத்தே முதுநிலைப் படிப்பில் இடங்கள் கிடைக்கும். இந்த மதிப்பெண்ணை பூஜ்யமாகக் குறைத்துவிட்டது ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும். இதற்குப் பிறகும் இதனை தகுதித் தேர்வுதான் என்று யாராவது சொல்ல முடியுமா?

நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !

அனைத்து விதமான விதிமீறல்களும் நடக்கும் ஒரு தேர்வு என்றால் அது நீட் தேர்வுதான். கேள்வித் தாள் வெளியாகும். ஆள் மாறாட்டம் செய்தார்கள். போலியான ஆட்களை வைத்து தேர்வு எழுத வைத்தார்கள்.

ரூ.25 லட்சம் வரை தேர்வுக்கே செலவு செய்தார்கள். சி.பி.ஐ. விசாரணையில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கைதாகி இருக்கிறார்கள். அந்த மாணவர்களின் பெற்றோர் கைதாகி உள்ளார்கள். பல மாணவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். பெற்றோர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சென்டரில் படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். குறிப்பிட்ட தேர்வு மையங்களில் எழுதுபவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். –- இப்படி இந்த தேர்வில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ராஜஸ்தான் மாநிலத்திலும் ‘நீட்’ தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. ராஜஸ்தான் மாநில உயர்கல்விச் செயலாளர் பவானி தேத்தா தலைமையில், கோட்டாவில் அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலை ஆராய குழு அமைக்கப்பட்டது. இக்குழு இந்தத் தேர்வின் கொடூரமான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

நீட் பயிற்சி மையம் என்பது ரூபாய் 10 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றும் இந்த ஆணையம் கூறியுள்ளது. சிலரின் சுயநலத்துக்காக - – அவர்கள் ஒன்றிய அரசின் உயரதிகார மையங்களைக் கையில் போட்டுக் கொண்டு நீட் தேர்வுக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் , “அரசின் கொள்கைசார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றாலும், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்தவில்லை. மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும் அது குறிக்கிறது” என்று சொல்லி இருந்தார்.

வழக்குகள் மட்டுமல்ல; மரணங்களும் நீட் தேர்வை அகற்றியே ஆகவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தனியார் கோச்சிங் சென்டர்களில் பல லட்ச ரூபாய் கட்டிப் படிக்க வசதியானவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது இந்தத் தேர்வு. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் வரக்கூடாது என்று தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த நீட் தேர்வு. இதனை ஒழித்தே ஆக வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனே இந்த நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை இளைஞர் அணி –- மாணவர் அணி -– மருத்துவ அணி ஆகிய மூன்று அணிகளும் தொடங்கி உள்ளன.

இந்த கையெழுத்துகள் நீட் தேர்வை நிச்சயம் நொறுக்கும்.

banner

Related Stories

Related Stories