முரசொலி தலையங்கம்

குடும்ப பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கி தந்துள்ள திராவிட மாடல் அரசு : இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!

குடும்பப் பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கித் தந்துள்ளது திராவிட மாடல் அரசு!

குடும்ப பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கி தந்துள்ள திராவிட மாடல் அரசு :  இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29-03-2023)

குடும்பம்,தனிச்சொத்து,அரசு!

ஆணாதிக்கச் சமூக அமைப்பில் பெண்ணினத்துக்கு, சமூகப் பொருளா தாரச் சுதந்திரத்துக்கு அடித்தளம் அமைப்பதன் மூலமாக பல நூற்றாண்டு அடிமைத் தனத்தைத் தகர்ப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தி ருக்கிறார் "திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

1000 ரூபாய் உரிமைத் தொகை என்பது யார் யாருக்கெல்லாம் கிடைக் கும் என்பது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரையா னது, நூற்றாண்டுப் பிரகடனமாகவே அமைந்துள்ளது. பெண்ணின் உழைப்பு குறித்து அவர் பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகநீதியின் உரையாகவே அமைந்துள்ளது.

“வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனித குலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரிய வரும். உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறிய போதுகூட பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயரா லும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் மூடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக் கப்பட்டது” என்று பேசி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

குடும்ப பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கி தந்துள்ள திராவிட மாடல் அரசு :  இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!

இது தமிழ்ப் பெண்களின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல, இந்தியப் பெண்க ளின் குமுறல் மட்டுமல்ல, உலகப் பெண்களின் பொதுக்குரல் ஆகும்.

‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார் அறிவுலக ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ். “தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைப்படுத்தப்பட்டாள். ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள். கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனம் ஆனாள். இது பெண்களின் நிலையைக் கீழே இறக்கிவிட்டது. இப்படி நிலைநாட் டப்பட்ட ஆணின் ஏகபோக ஆட்சியினால் ஏற்பட்ட முதல் விளைவு இப்பொழுது இடைக்காலக் குடும்ப வடிவமாகத் தோன்றிய தந்தை வழிக் குடும்பத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது” என்று எழுதிய எங்கெல்ஸ்,

“வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒருதார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்து கிறது. முதல் வர்க்க ஒடுக்குமுறை பெண்பாலை ஆண்பால் ஒடுக்கின்ற ஒடுக்கு முறையுடன் பொருந்துகிறது. அடிமை முறையுடனும், தனிச் சொத்துடனும் சேர்ந் தால் போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவக்கியது. அந்த யுகத் தில் ஒவ்வொரு முன்னேற்றமும். ஒரு பின்னடைவாகவும் இருக்கிறது. ஒரு குழு வின் துன்பத்தில், இன்னொரு குழு மகிழ்ச்சியை அடைந்து வளர்கிறது. இதுதான் இன்றைய நாகரிக சமூகத்தின் உயிரணு வடிவமாகும்” என்று எழுதினார்.

குடும்ப பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கி தந்துள்ள திராவிட மாடல் அரசு :  இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!

ஏதோ ஒன்று வளரும் போது, ஏதோ ஒன்று தேய்கிறது என்பது இன்றைய சமூக அமைப்பு முறையாக இருக்கிறது என்பதை அன்றே எழுதி இருக்கிறார் எங்கெல்ஸ். அப்படி ஆகிவிடாமல் தடுப்பதுதான் சமூகநீதித் தத்துவம் ஆகும்.

வெளியில் வரக்கூடாது, குடும்பத்துக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டும். படிக்கக் கூடாது. வேலைக்குச் செல்லக் கூடாது ஆகியவை இந்தியச் சமூக அமைப்பில் பண்பாடு, சமய மரபுகளாகவே கட்டமைக்கப்பட்டன. புனித மாகவே கருதப்பட்டன. சூத்திரனின் இடத்தில் அனைத்து ஜாதிப் பெண்களும் அடைத்து வைக்கப்பட்டார்கள். 'வேதத்தை பெண்கள் படிக்கக் கூடாது' என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்கள்.

பெண்களுக்கும் சூத்திரர்க்கும் உபநயனம் செய்து வைக்கக் கூடாது, பெண் களும் கடை வருணத்தவரும் வேதஒலியைக் கேட்கக் கூடாது என்று கட்டுப் படுத்தப்பட்டார்கள். உடன்கட்டை ஏறுவதை தூண்டியது புராணங்கள். 'கண வன் வேற்று நாட்டில் இறந்து போனால், அவனது செருப்பை மார்பில் வைத்துக் கொண்டு மனைவி தீயில் விழ வேண்டும்' என்று தூண்டப்பட்டது. 'புராணப் புதைகுழியில் மூடப்படும் நட்சத்திரங்கள்' என்று இதனை உருவகப்படுத்தினார் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன். காலம் தோறும் பெண் அடிமைப்பட்டுக் கிடந்ததை உடைக்க எத்தனையோ முயற்சிகள் சமூக சீர்திருத்தவாதிகளால் செய்யப்பட்டது.

ஆனால் அதில் மாபெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் பெரியார். பெண்ணை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். குழந்தை பெற்றுக் கொள்ளாதே என்றார். அரசியலுக்குள் வரச் சொன்னார். மாநாடுகளுக்கு வரச் சொன்னார். எல்லா போராட் டங்களுக்கும் வரச் சொன்னார். நீளமான தலைமுடியை துண்டிக்கச் சொன்னார். துண்டித்துக் கொண்ட பெண்ணுக்கு பணம் கொடுத்தார். பேண்ட் சட்டை போட்டுக் கொள்ளச் சொன்னார். உருவத்தில் வித்தியாசம் தெரியக் கூடாது என்றார். பேர் வைப் பதில் வேறுபாடு இருக்கக் கூடாது என்றார். சமையல் கூடங்களை ஒழிக்கச் சொன் னார். 'கம்யூன்' போல பொதுச் சமையல் கூடங்களைக் கட்டச் சொன்னார். அனைத்து அதிகாரம் பொருந்திய வேலைக்கும் போகச் சொன்னார். இதைப் பார்த்தும், கேட்டும், உணர்ச்சி பெற்றும் பெண்கள் வெளியில் வந்தார்கள். அதுதான் 100 ஆண்டுகளில் நாம் காணும் மாற்றம் ஆகும்.

இதனை ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர்.

குடும்ப பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கி தந்துள்ள திராவிட மாடல் அரசு :  இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு.

* பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.

* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது.

* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவ சக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியது.

* ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தது.

* மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு பொருளாதா ரச் சுதந்திரம் வழங்கினார் கலைஞர்.

இவை அனைத்தும் பல்லாயிரமாண்டு அடிமைத்தனத்தின் மீது விழுந்த அடிகள் ஆகும். அடுத்த பலத்த அடியைக் கொடுத்திருப்பதுதான் மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணமும், மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகையும்.

மகளிர் சிந்தனையில் இருந்த பொருளாதாரக் கட்டுப்பாட்டை இவை இரண்டும் உடைத்து வெளியில் வர வைத்துவிட்டது. இனி பெண்ணுக்கு வானம் வசப்படும்!

குடும்பப் பெண்களுக்கு தனிச்சொத்தை உருவாக்கித் தந்துள்ளது திராவிட மாடல் அரசு!

banner

Related Stories

Related Stories