முரசொலி தலையங்கம்

போர் அச்சுறுத்தல் தேவையில்லை.. ஜி ஜின்பிங் நாட்டை பலியிடமாட்டார் என நம்புவோம்: முரசொலி!

தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நாட்டைப் பலியிடமாட் டார் என நம்புவோம். ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஜி ஜின்பிங் இதனை அறிவார்.

போர் அச்சுறுத்தல் தேவையில்லை.. ஜி ஜின்பிங் நாட்டை பலியிடமாட்டார் என நம்புவோம்: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (14-03-2023)

இன்றைய ராஜதந்திரம் எதுவோ?

மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார். மா சே துங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்பவர் என்ற பெருமையை ஜி ஜின்பிங் பெற்றிருக் கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் - இராணுவத்தின் தலைவர் - அதிபர் என மூன்று முக்கியமான பொறுப்புகளைக் கொண்ட அதிகாரமிக்க பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்கிறார் ஜி ஜின்பிங். சீன அதிபராக ஒருவர் இரண்டு முறை தான் இருக்க முடியும் என்பது அந்த நாட்டின் அரசியல் சட்டம் ஆகும். அதில் திருத்தம் கொண்டு வந்து மூன்றாவது முறையும் அதிபர் ஆகி இருக்கிறார். 2.952 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றம் அது. சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14 ஆவது தேசிய மக்கள் மாநாட்டின் மூலமாக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவருக்கு எதிராக எவரும் போட்டியிடவில்லை. அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு அவர் ஆட்சியில் இருப்பார். சீனாவைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய செய்தியாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் - அதே கட்சியின் தலைவராகவும் - அந்த நாட்டின் அதிபராகவும் - அதுவும் மூன்றாவது முறை ஆவது என்பது இதுவரை நடக்காத அதிசயம் ஆகும்.

போர் அச்சுறுத்தல் தேவையில்லை.. ஜி ஜின்பிங் நாட்டை பலியிடமாட்டார் என நம்புவோம்: முரசொலி!

சீனாவின் மாபெரும் தலைவரான மா சே துங் அவர்களின் நெருங் கிய நண்பரான ஜி சோங்ஷூனுவின் மகன்தான் ஜி ஜின்பிங். 1968-ம் ஆண்டு சீனப் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சோங்ஷூன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப் பட்டார். அவரது குடும்பமே ஊரைவிட்டு வெளியேறி ஒரு கிராமத்தில் குடி யேறி வாழ்ந்து வந்தது. அப்படி வாழ்ந்து வந்தவர்தான் இன்றைய அதிபர்.

1972 ஆம் ஆண்டு சீன அதிபராக இருந்த சூ என்லாய், 'சிறையில் அடைக் கப்பட்டவர்கள் குடும்பத்தோடு இணையலாம்' என்ற உத்தரவைப் பிறப்பித் தார். 1974 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொள் ளப்பட்டார் ஜி ஜின்பிங். தொடர்ச்சியாக கட்சிப் பணியாற்றி வந்த அவர் மாகாணங்களின் ஆளுநராக பல்வேறு மாகாணங்களில் பணியாற்றினார். 2007-ம் ஆண்டு 'பொலிட்பீரோ'வின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2008-இல் சீனாவின் துணை அதிபர் ஆனார். 2012-ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ஆம் ஆண்டு முதன் முறையாக சீன அதிபராகப் பதவியேற்றார். இப்போது மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.

தன்னை மக்கள் தலைவராகவும் இராணுவத் தலைவராகவும் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டவர் அவர். “எங்கள் மக்கள் அழ கான சூழலை எதிர்பார்க்கிறார்கள்" என்று மக்கள் மனதில் உள்ளதை அடிக்கடி சொல்லி வந்தார். அதே நேரத்தில் தனது கனவை சீனக்கனவு. இராணுவத்தின் கனவு என்றும் சொல்லிக் கொண்டார். “இந்தக் கனவை ஒரு வலுவான தேசத்தின் கனவு என்றும் சொல்லலாம். ஒரு வலிமை யான இராணுவத்தின் கனவு என்றும் சொல்லலாம்” என்றார். அதாவது இராணுவ மையவாதத்தின் தலைவராகவும் தன்னை வளர்த்துக் கொண் டார். இதற்கு முன் மா சே துங் மட்டுமே வைத்திருந்த 'மக்கள் தலைவர் பட்டத்தை இவர் போட்டுக் கொண்டார்.

போர் அச்சுறுத்தல் தேவையில்லை.. ஜி ஜின்பிங் நாட்டை பலியிடமாட்டார் என நம்புவோம்: முரசொலி!

கட்சியும் - இராணுவமும் ஒன்றாக இருப்பதே நாட்டுக்குப் பாதுகாப்பு என்று சொல்லி வருகிறார். “சோவியத் ஒன்றியத்தில் இராணுவம் அரசுமய மாக்கப்பட்டது. கட்சியில் இருந்து பிரிக்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட் டது. இதனால் கட்சி நிராயுதபாணி ஆக்கப்பட்டது. சோவியத் யூனியனுக்கு நெருக்கடி வந்தபோது ஒரு கட்சியால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பெரிய கட்சி அப்படியே போய்விட்டது. விகிதாச்சாரப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட சோவியத் கட்சி, பெரிய கட்சி. அதிகமான உறுப் பினர்கள் இருந்தார்கள். இருந்தும் கட்சியைக் காக்க முடியவில்லை” என்று சொன்னவர்தான் இவர். எனவேதான் ஆட்சியையும் கட்சியையும் இராணுவத் தையும் ஒரே கையில் வைத்துள்ளார்.

'சோசலிசத்தின் இன்றியமையாத தேவை - பொது செழிப்பு' என்பதை தனது தத்துவமாக அறிவித்து செயல்பட்டு வருகிறார். ஆனால் நமது கவலை எல்லாம் அவரது வெளியுறவுக் கொள்கையை முன் வைத்துத் தான். உலகின் பெரிய சக்தியாக சீனாவை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இவை அவரது இராஜதந்திரச் சிந்தனை களாக அழைக்கப்படுகின்றன.

இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது சீனா. தைவான் புரட்சி. ஹாங்காங் போராட்டம் என சீனா பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில். சீன அதிபர் ஜி ஜின்பிங் 'போருக் குத் தயாராகுங்கள் என ராணுவ வீரர்களிடம் கூறியுள்ளது ராஜதந்திரம் ஆகாது. ராணுவத்தைப் பலப்படுத்துவது என்பது அவர்களது சொந்தப் பிரச்சினை. ஆனால் 'போருக்குத் தயாராகுங்கள்' என்பது நாடுகளின் பிரச்சினை. ஏற்கனவே உக்ரைன் மீது போர் தொடுத்து ரஷ்யா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது. அதே வழியில் சீனாவும் செல்லத் தயாராவது உலக நாடுகளுக்கும் நல்லதல்ல. சீனாவுக்கும் நல்லதல்ல.

இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது சீனா. தைவான் புரட்சி. ஹாங்காங் போராட்டம் என சீனா பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில். சீன அதிபர் ஜி ஜின்பிங் 'போருக் குத் தயாராகுங்கள் என ராணுவ வீரர்களிடம் கூறியுள்ளது ராஜதந்திரம் ஆகாது. ராணுவத்தைப் பலப்படுத்துவது என்பது அவர்களது சொந்தப் பிரச்சினை. ஆனால் 'போருக்குத் தயாராகுங்கள்' என்பது நாடுகளின் பிரச்சினை. ஏற்கனவே உக்ரைன் மீது போர் தொடுத்து ரஷ்யா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது. அதே வழியில் சீனாவும் செல்லத் தயாராவது உலக நாடுகளுக்கும் நல்லதல்ல. சீனாவுக்கும் நல்லதல்ல.

போர் அச்சுறுத்தல் தேவையில்லை.. ஜி ஜின்பிங் நாட்டை பலியிடமாட்டார் என நம்புவோம்: முரசொலி!

கொரோனா வைரஸ் என்பது ஏற்கனவே உலகநாடுகளால் சீனாவின் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் போர் அச்சுறுத்தல் தேவையில்லை.

கொரோனா தொற்று பல லட்சம் பேரை பலிவாங்கி உள்ளது. பலி வாங்கியும் வருகிறது சீனாவில். இந்த நேரத்தில் போர் அச்சுறுத்தல் தேவையில்லை.

மக்களுக்கு உண்மையான அச்சுறுத்தல் என்பது பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், சுற்றுச்சூழல், வெப்பமய மாதல், செல்வம் ஒரே இடத்தில் குவிதல், அதிகாரமயமாக்கல் - ஆகிய வைதான். இவற்றில் இருந்து மக்களைக் காப்பதுதான் அரசுகளின் ராஜ தந்திரமாக இருக்க வேண்டுமே தவிர இராணுவமயம் அல்ல. கண்ணுக்கு முன்னால் இரண்டு பெரும் நாடுகள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு கிடக்கின்றன. ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஜி ஜின்பிங் இதனை அறிவார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நாட்டைப் பலியிடமாட் டார் என நம்புவோம்!

banner

Related Stories

Related Stories