முரசொலி தலையங்கம்

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !

முதலமைச்சர் அவர்களுக்கு இதயம் இருப்பதால் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை உருவாக்கினார். தனக்கும் இதயம் இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் இதுவரை காட்டவில்லையே ஏன்?

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (13-03-23)

இதயமா? இருக்கிறதா?

‘‘ஆளுநர்களுக்கு வாய்தான் இருக்கிறது, காதுகள் இல்லை” என்று சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கண்ட கண்ட கருத்துகளைச் சொல்கிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவி சாய்ப்பது இல்லை என்பதுதான் இதன் உள்ளடக்கம். காது என்பதும் வாய் என்பதும் உருவகமே தவிர, உறுப்புகள் அல்ல.

இது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களுக்கு சுருக்கென்று தைத்திருக்கிறது. உடனே வாயைத் திறந்து விட்டார். ‘வாய் இருக்கிறதோ, காது இருக்கிறதோ எனத் தெரியாது. ஆனால் இதயம் இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார் தமிழிசை. இதயம் இருக்கிறதா என்பதை ஆளுநர்கள் நிரூபித்தது இல்லை என்பதே உண்மை.

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !

‘நீட்’ தேர்வு கொடுமைக்கு எதிராக அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை பலியான உயிர்கள் எத்தனை?

« அரியலூர் அனிதா

« செஞ்சி பெரவள்ளூர் பிரதிபா

« திருச்சி சுபஸ்ரீ

« சேலையூர் ஏஞ்சலின் சுருதி

« திருப்பூர் ரிதுஸ்ரீ

« கூனிமேடு மோனிஷா

« பட்டுக்கோட்டை வைஸ்யா

« நெல்லை தனலட்சுமி

« கோவை சுபஸ்ரீ

« செந்துறை விக்னேஷ்

« தருமபுரி ஆதித்யா

« திருச்செங்கோடு மோதிலால்

« கரூர் பிரீத்தாஸ்ரீ

« அரியலூர் நிஷாந்தி

« மேட்டூர் தனுஷ்

« துவரங்குறிச்சி கனிமொழி

« மதுரை ஜோதிகாஸ்ரீ

« காட்பாடி செளந்தர்யா

--– இவை அனைத்தும் ‘நீட்’ தேர்வு கொடுமை தாங்கமுடியாமல் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள். ஆளுநர்களின் இதயம் அப்போதெல்லாம் செயல்பட்டதா?

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !

ஆன்லைன் சூதாட்டத்தால் பலியான உயிர்கள் எத்தனை? ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை 47 உயிர்கள் பறிபோயுள்ளன. திருச்சி ஆனந்த், சென்னை தாம்பரத்தில் வினோத் குமார், மெரினாவில் சுரேஷ், போரூரில் பிரபு, மணலியில் விக்னேஷ் மற்றும் பவானி, செங்குன்றத்தில் தினேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் , தருமபுரி வெங்கடேஷ், நெல்லை பணகுடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ், கோவை வெள்ளலூரைச் சேர்ந்த மதன்குமார் என ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியானோர் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

ஆன்லைன் ரம்மியால் மேலும் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன. தனது மரணமே ஆன்லைன் ரம்மியால் நிகழும் கடைசி மரணமாக இருக்கட்டும் என்ற கண்ணீர் குரலும், கணவனை இழந்து அனாதையாக நிற்கிறோம், எங்களைப் போன்று இனி வேறு எந்த ஒரு குடும்பமும் பரிதவிக்கக்கூடாது என்ற குடும்பத் தலைவிகளின் வேதனைக் குரலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இதயத்தைத் தொடவில்லையே!

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !

மெரினா கடற்கரையில் 40வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் என்றும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. காவல்துறை விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 17 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முன்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார் சுரேஷ். அந்தக் கடிதத்தில், “முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கு, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். தங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்களுக்கு இதயம் இருப்பதால் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை உருவாக்கினார். தனக்கும் இதயம் இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் இதுவரை காட்டவில்லையே ஏன்?

"இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரும், லோன் ஆப்களில் கடன் வாங்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மெடிக்கல் பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவர், ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்சம் ரூபாய் வரை இழந்து கடனாளியாக மாறியிருக்கிறார். கடனை திரும்ப செலுத்துமாறு லோன் ஆப்கள் கொடுத்த நெருக்கடிகளாலும், குடும்பத்தினரிடம் இதை சொல்வதற்கு பயந்தும், வினோத் குமார் கடந்த மார்ச் 4ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த பிரபு, வேலை ஏதும் இல்லாத நிலையிலும், கிரெடிட் கார்ட் மூலம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 35 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“எனது கணவர் இப்படியொரு விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார் என்பதே அவர் இறப்புக்கு பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது. குடும்பங்களை நேசிக்கும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவராக அவர் இருந்தார். இந்த சூதாட்டம் இப்போது எங்கள் குடும்பத்தையே சிதைத்து விட்டது” என்று பி.பி.சி. தமிழ் நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட வினோத் குமாரின் மனைவி லதா.

dr. lakshmi vijayakumar
dr. lakshmi vijayakumar

புகழ்பெற்ற மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் மிகமிக வேதனையான பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். ‘‘ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்படுவது அந்த தனிநபர் மட்டுமல்ல, அவரது குடும்பமே பாதிக்கப்படுகிறது. நமக்கு கணக்குத் தெரிந்தவர்களை பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். ஆனால் நமது கவனத்துக்கு வராத எத்தனையோ மரணங்கள் இதில் இருக்கலாம். இது சமூகப் பிரச்சினையாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஆன்லைன் கார்டு அல்லது காசு வைத்து ஆடும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். விளையாடும் போது அது விளையாட்டாக இருக்கும். அதுவே பணம் வைத்து விளையாடும் போது சூதாட்டமாக மாறிவிடும். நேரடியாக சூதாட்டம் விளையாடும் போது கையில் வருவது ரேண்டம். ஆனால் ஆன்லைன் மூலமாக விளையாடும் போது நிறுவனம்தான் ரேண்டம் எண்ணை அளிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள்தான் உங்களுக்கு எந்த சீட் வர வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றனர். அதனால் இது நிச்சயமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சாதகமாகத்தான் அமையும்” என்கிறார். இவரும் மருத்துவர்தான். தமிழிசையும் மருத்துவர்தான்.இதயம் இருக்கிறது என்று சொன்னால் போதாது. இதயம் இருப்பது அடுத்தவர்க்குத் தெரியவேண்டும்!

banner

Related Stories

Related Stories