முரசொலி தலையங்கம்

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

அதானியின் சந்தை சரியும் போது பா.ஜ.க.வின் பிம்பமும் சரிகிறது. திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல வலதுசாரிகள் கள்ள மவுனம் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுரண்டலுக்கு ஒரு முகமூடி!

அதானியின் சந்தை சரியும் போது பா.ஜ.க.வின் பிம்பமும் சரிகிறது. திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல வலதுசாரிகள் கள்ள மவுனம் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நியாயப்படுத்திப் பேசுவதற்குக் கூட அவர்களிடம் சொற்கள் இல்லை. இதனை அப்படியே விட்டுவிட்டு கடந்து போக நினைக்கிறார்கள். ஆனால் அதானி விவகாரம் அவ்வளவு சீக்கிரமாக முடியாது.

பா.ஜ.க.வின் ஊழல் தன்மையின் எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இவை மொத்தம் 88 கேள்விகள். இந்தக் கேள்வி கேட்டதுமே ஒரே நாளில் அந்த நிறுவனம் வீழ்ச்சியைச் சந்தித்தது. பங்குச் சந்தையில் மதிப்பை இழந்தது. இரண்டே நாளில் 4.20 லட்சம் கோடி இழப்பை அதானி குழும நிறுவன பங்குகள் சந்தித்தன.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருந்தவர், எட்டாவது இடத்துக்கு உருட்டி விடப்பட்டார். கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் நடக்குமா? நடக்கும். ஏனென்றால் அவை அனைத்தும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்! கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடைந்த வளர்ச்சி என்பது மிகமிக அதிகம். கொரோனா காலக்கட்டத்தில் அவரது ஒருநாள் வருமானமே ஆயிரம் கோடியைத் தொட்டது.

கொரோனாவுக்கு முன்பாக 2020 ஆம் ஆண்டு அவரது ஆண்டு வருமானம் 73 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது ஆண்டு வருமானம் 11 லட்சம் கோடியாகும். உலக பில்லியனர்களின் பட்டியலில் 3 ஆவது இடம். இந்தியாவில் முதலிடம்.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தால், பெரும் லாபம் கிடைக்கும் என்று தனிமனிதர்கள் நினைத்ததில் தவறு இல்லை. பொதுத்துறை நிறுவனங்களையே முதலீடு 'செய்ய' வைத்தார்கள். எல்.ஐ.சி. நிறுவனமானது அதானி குழுமத்தில் 77 ஆயிரம் கோடியை முதலீடு செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன்களை வாரி 'வழங்க' உத்தரவிடப்பட்டுள்ளன.

அதாவது பொதுத்துறை நிறுவனங்களின், வங்கிகளின் மூலமாக ஊதிப்பெருக்கப்பட்ட தொகையின் மூலமாக ஊதிப் பெருகிய நிறுவனமானது காற்று இறங்கிய பலூனாக இறங்கும் போது, அதனால் இழப்பு என்பது மக்களின் பணத்துக்கும் சேர்த்துத்தான். ஹிண்டன்பர்க் என்பது நிதி நிறுவனங்களை ஆராயும் அமைப்பு ஆகும். அது அதானி குழுமத்தின் தொழில் வளர்ச்சியை அம்பலப்படுத்துகிறது. அதானி நிறுவனத்தின் பங்கு முறைகேடுகளை இந்நிறுவனம் கேள்வி கேட்கிறது.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

பங்குகளை உயர்த்திக் காட்டி அதிகப்படியான கடன்களை எப்படிப் பெற்றார்கள் என்பதைச் சொல்கிறது. போலியான நிறுவனங்களின் மூலமாக எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்தார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். தனது நிறுவனத்தின் நிதிநிலைமை சிறப்பாக இருப்பதாகப் பங்குச்சந்தையை ஏமாற்றி இருப்பதாகச் சொல்கிறது.

அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 819 விழுக்காடு அதிகம் ஆகி இருக்கிறது. இதன் மூலமாக மட்டும் அவரது சொத்து மதிப்பு 8.20 லட்சம் கோடி அதிகம் ஆகி இருக்கிறது. இன்றைய தினம் அந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு 2 லட்சம் கோடி ஆகும். பங்கு சந்தையின் மதிப்பை உயர்த்தி கடன் பெற்றுள்ளார்கள்.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

வரிகளைச் செலுத்தத் தேவையில்லாத மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், கரீபியன் தீவுகளில் போலியான நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் எந்த வணிகச் செயல்பாட்டையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் பல பில்லியன் டாலர்கள் இந்நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் உள்ளன என்கிறது ஹிண்டன்பர்க் அறிக்கை.

இவை அனைத்தும் மேலோட்டமான கேள்விகள் அல்ல. அரசியல் கேள்விகளும் அல்ல. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இக்கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் என்கிற பெயரால் ஒரு அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது. அதனை நிராகரித்துவிட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

அதானி குழுமம் வெளியிட்ட 413 பக்க அறிக்கையில் "நாங்கள் கேட்ட 88 கேள்வியில் 62 கேள்விகளுக்கு பதிலே இல்லை. தொடர்பு இல்லாத தகவல்களைத்தான் தெரிவித்திருக்கிறார்கள்" என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. "தேசியவாதம் என்று கூறி மோசடியை மறைத்துவிட முடியாது" என அதானி நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலளித்துள்ளது.

இந்தியா அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று கூறியுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அதானி குழுமம் முட்டுக்கட்டை போடுகிறது என்று விமர்சித்துள்ளது. 413 பக்க அதானியின் அறிக்கை 30 பக்கங்கள் மட்டுமே தங்கள் ஆய்வறிக்கைக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது என்றும், அதுவும், முறைகேடுகளுக்கு சம்பந்தம் இல்லாத தகவல்களை திணித்து இருக்கிறார்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு ‘அந்நியச் சதி' என்ற பதிலைச் சொல்வதுதான் அவர்களது பாணி ஆகும். 'இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்' என்கிறார் அதானி. உலகப் பணக்காரர் ஆகும் போது தனிப்பட்ட அதானியாக இருப்பவர், யாராவது குற்றம் சாட்டும் போது மட்டும் இந்தியக் குடிமகனாக ஆகிவிடுவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

'இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்' என்றால் அவர்தான் 'இந்தியாவா?' அந்த மகுடத்தை அவருக்குச் சூட்டியது யார்? அவரே சூட்டிக் கொண்டாரா? பா.ஜ.க. பதுங்குவது இதனால்தான். "ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது. இதனை தனிப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் மீதான தாக்குதலாகக் கருத முடியாது. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் ஆகும்” என்கிறது அதானி குழுமத்தின் அறிக்கை.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. ஏமாற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் ஏமாற்றப்பட்டுள்ளன. இதன் மூலமாக கோடிக்கணக்கான ‘இந்தியர்கள்' ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்களை ஏமாற்றியது 'தேசவிரோதம்' இல்லையா? உண்மையான தேசவிரோதம் என்பது இதுதான். சொந்த நாட்டு மக்களைக் காட்டி சொந்த நாட்டு மக்களை ஏய்த்தது ஆகும்!

banner

Related Stories

Related Stories