முரசொலி தலையங்கம்

குஜராத் கலவரம் - கண்டித்த வாஜ்பாய், அத்வானி தேசவிரோதியா?: BBC-ல் கூப்பாடுபோடும் BJP-க்கு முரசொலி கேள்வி!

பி.பி.சி. ஏதோ சொல்லிவிட்டது என்பவர்களுக்கு நமது பதில் - இவை அனைத்தும் புதியவை அல்ல. வாஜ்பாயும் அத்வானியும் சொன்னது தான்!

குஜராத் கலவரம் - கண்டித்த வாஜ்பாய், அத்வானி தேசவிரோதியா?: BBC-ல் கூப்பாடுபோடும் BJP-க்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (31-01-2023)

வாஜ்பாயும் அத்வானியும் அன்று சொன்னதுதான்!

2002 - குஜராத் கலவரம் - அதன் மூலமாக நடந்த பச்சைப் படுகொலை களை நினைவூட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்திப்படம் தயாரித்துள் ளது. அது நாடு முழுவதும் பரவினால் பா.ஜ.க.வின் இன்னொரு முகம் அம்பலம் ஆகும் என்று பயந்து அதனை ஒன்றிய அரசு தடை செய்திருக் கிறது. நாடு முழுக்க அறிந்த ரகசியம்தான் குஜராத் படுகொலை. எனவே ஒரு கேசட்டை மறைப்பதால் அந்த படுகொலையை மறைத்துவிட முடியாது.

அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்களும் சொன்னதைத்தான் இன்றைக்கு பி.பி.சி. சொல்லி இருக்கிறது. தனது வாழ்க்கை வரலாற்றை 'என் தேசம் என் வாழ்க்கை' என்ற தலைப்பில் மிகப்பெரிய புத்தகமாக அத்வானி அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அதனை தமிழில் மொழி பெயர்த்து 'அல்லயன்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழில் மொத்தம் 1060 பக்கங்கள். இதில் குஜராத் கலவரம் குறித்து 831-842 ஆகிய பக்கங்களில் எழுதி இருக்கிறார் அத்வானி அவர்கள்.

"அதுவரையில் நாட்டில் மதக்கலவரங்கள் வெகுவாக குறைந்திருக் கிறது என்று வாஜ்பாய் ஆட்சிக்கு கிடைத்திருந்த பாராட்டை குஜராத் சம்ப வங்கள் சீர்குலைக்கின்றன என்பதால் நான் மிகவும் சோர்வுற்றேன். குஜராத்தில் நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆகும்" என்று சொல்லி விட்டு, அதில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை நாடாளுமன்றத்தில் பட்டியல் போட்டதை அத்வானி அவர்கள் சொல்கிறார்கள். "குஜராத் வன்முறையில் 790 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். 223 பேர் காணவில்லை. சாவு எண்ணிக்கை பற்றிய தகவல் அதிகாரபூர்வமற்ற வகையில் அதிகமாக இருக்கக் கூடும் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன்" என்கிறார்.

குஜராத் கலவரம் - கண்டித்த வாஜ்பாய், அத்வானி தேசவிரோதியா?: BBC-ல் கூப்பாடுபோடும் BJP-க்கு முரசொலி கேள்வி!

“கோத்ராவிற்கு வெளியில் வன்முறை பரவிய மூன்று நாட்களுக்குள் நான் குஜராத்திற்குச் சென்றேன். எந்த வகை மத கலவர சூழலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோத்ராவில் நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறையும் 'மதக்கலவரமற்ற' நிலையை உருவாக்கிய எங்களது அரசை களங்கப்படுத்துகிறது” என்று சொன்ன தாக அத்வானி சொல்கிறார். பா.ஜ.க. அரசுக்கு ஏற்பட்ட மாபெரும் களங்கம் என்கிறார் அத்வானி.

2002 ஏப்ரல் 4 ஆம் தேதி பிரதமர் வாஜ்பாயி குஜராத்திற்கு விஜயம் செய்தார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட 8000 முஸ்லிம்களுக்கு அடைக்க லம் அளிக்கப்பட்டிருந்த அகமதாபாத் ஷா ஆலம் நிவாரண முகாமில் மக்களுக்கு இடையில் பிரதமர் பேசினார்.

“சிக்கலான இந்த நேரத்தில் நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் எல் லோரும் உங்களுடன் இருக்கிறோம். ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆவது இதயத்தை உடைக் கும் ஒன்று. கோத்ராவில் நடந்தது கண்டனத்திற்குரியது. அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பிற பகுதிகளில் நடப்பவைகளும் வருந்தத்தக்கவை. குஜராத் வன்முறை உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் அந்தஸ்தை மோச மாக பாதித்துவிட்டது. இங்கு இவை எல்லாம் நடந்த பிறகு, எந்த முகத் தோடு நான் வெளிநாடுகளுக்குப் போவேன் என்று எனக்குத் தெரிய வில்லை. இந்த வெறிபிடித்த போக்கை நிறுத்தியாக வேண்டும்” என்று பிரதமர் வாஜ்பாய் பேசியதாக எழுதி இருக்கிறார் அத்வானி. இன்றைக்கு கூச்சல் போடுபவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் பேச்சுக்கு என்ன பதில் சொல்வார்கள்? வாஜ்பாய் தேசவிரோதியா? அந்நிய தேசத்தவரா?

குஜராத் கலவரம் - கண்டித்த வாஜ்பாய், அத்வானி தேசவிரோதியா?: BBC-ல் கூப்பாடுபோடும் BJP-க்கு முரசொலி கேள்வி!

ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற விவாதத்தின் போது உள்துறை அமைச் சர் அத்வானி பேசுகிறார். “இந்த விவாதத்தில் சோகம் நிறைந்த மனிதனாக பங்கேற்கிறேன். கலவரமற்ற அரசாட்சி என்று நான்கு வருடங்களாக எங்கள் அரசாங்கம் பெற்றிருந்த பெருமை வீணாகிவிட்டது. குஜராத்தில் நடந்தவைகள் மொத்தமாக, கோத்ரா மற்றும் கோத்ராவிற்கு பிறகான வன்முறைகள் கண்டனத்திற்குரியவை. அவமானகரமானது. கோத்ராவிற்கு பிறகு நடந்த நிகழ்ச்சி பற்றி மரியாதைக்குரிய உறுப்பினர்கள் இந்த அவை யில் கூறியவை எல்லாம், அவைகள் நரோடா பாட்டியாவில். அகமதாபாத் குல்பர்க் சொசைடியில், பரோடாவில் பெஸ்ட் பேக்கரி, மேஹ்சானாவில் சர்தார்புராவில் நடந்த அல்லது மற்றவைகள் எல்லாம் குறை காணத்தக்க வையே. கோத்ராவிற்கு பிறகு நடந்தவைகள் கோத்ராவில் நடந்ததை விளக்கலாம்.

ஆனால் நரோடா பாட்டியாவில், மேஹ்சானா அல்லது மற்ற எந்த கொலைகளையும் கோத்ரா சம்பவத்தால் நியாயப்படுத்திவிட முடியாது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் சமுதாயத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு எதி ரான பழிவாங்கும் போக்கை நியாயப்படுத்த முடியாது. அப்பாவி மனித னுக்கு எதிரான பழிவாங்கும் உணர்ச்சி இது. எப்படி இதை நியாயப்படுத்த முடியும்? பாதிக்கப்பட்டது ஹிந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருந்தா லும் நாகரிகமான சமுதாயத்தில் பழிவாங்குதலுக்கு இடமில்லை. அது நாகரிகமற்ற மிருகத்தனம் என்றுதான் கருதப்படும்” என்று. தான் பேசிய தாக அத்வானி குறிப்பிடுகிறார். கோத்ராவைக் காரணம் காட்டி மற்றவை களை நியாயப்படுத்த முடியாது என்று சொல்பவர் அத்வானி அவர்கள் கான்! அக்வானி கேசவிரோகியா? அந்நிய கேசக்கவா?

குஜராத் மாநில அரசின் செயல்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அத்வானி, “நிர்வாகத்தில் சில இடங்களில், போலீஸ்துறை செயல்பாடு போன்றவற்றில் சில குறைபாடுகள் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றும் நாடாளுமன்றத்தில் அப்போது சொல்லி இருக்கிறார்.

குஜராத் கலவரம் - கண்டித்த வாஜ்பாய், அத்வானி தேசவிரோதியா?: BBC-ல் கூப்பாடுபோடும் BJP-க்கு முரசொலி கேள்வி!

முதலமைச்சர் மோடி பதவி விலக வேண்டும் என்று அப்போது கோரிக்கை எழுந்தது. பதவி விலகத் தேவையில்லை என்று உறுதியாக வாதிட்டு தடுத்தவர் அத்வானி. 'மோடியாவது ராஜினாமா செய்திருக்க முன் வந்திருக்க வேண்டும்' என்று பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் சொன் னதாக (பக்கம் 934) அத்வானி எழுதுகிறார். மோடியை அழைத்து ராஜி னாமா செய்யுங்கள் என்று. தான் சொன்னதாக அத்வானி சொல்கிறார். கோவா தேசிய நிர்வாகக் குழுவில் இதனை மோடியும் ஒப்புக் கொண்டி ருக்கிறார். 'எது எப்படி இருந்தாலும் ஆட்சிக்கு தலைமை ஏற்றிருப்பவன் என்ற முறையில் என் மாநிலத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற் றுக் கொள்கிறேன். பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று மோடி அக்கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். கட்சி உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லை. அதனால் அவர் பதவி விலகவில்லை. அது தனிக் கதை!

எனவே, பி.பி.சி. ஏதோ சொல்லிவிட்டது என்பவர்களுக்கு நமது பதில் - இவை அனைத்தும் புதியவை அல்ல. வாஜ்பாயும் அத்வானியும் சொன்னது தான்!

banner

Related Stories

Related Stories