முரசொலி தலையங்கம்

முடை நாற்றம் எடுக்கும் தமிழக பா.ஜ.க-வின் வீடியோ கலாச்சாரம் பற்றி தெரியுமா?: நட்டாவுக்கு முரசொலி கேள்வி!

‘சீ சீ அண்ணாமலை ஆதரவில் ஆபாச வீடியோ பதறும் பா.ஜ.க.’ என்று அட்டைப்படம் வந்த ‘நக்கீரனை’ (நவம்பர் 26) நட்டாவிடம் யாரும் காட்டவில்லையா?

முடை நாற்றம் எடுக்கும் தமிழக பா.ஜ.க-வின் வீடியோ கலாச்சாரம் பற்றி தெரியுமா?: நட்டாவுக்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-12-2022)

தமிழக பா.ஜ.க. என்றால்...?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக நட்டா என்ற ஒருவர் இருக்கிறார். 365 நாட்களுக்கு ஒரு தடவை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் தோன்றுவார். ‘தி.மு.க.வை குடும்பக் கட்சி’ என்று சொல்லுவார். அதன்பிறகு காணாமல் போய்விடுவார். அடுத்து 365 நாட்கள் கழித்து மறுபடி வருவார். அதையே சொல்வார். காணாமல் போய்விடுவார்!

நேற்றைய தினம் கோவைக்கு வந்துள்ளார் அதே நட்டா. அவர் என்ன பேசினார் என்பதை தமிழ்நாட்டு நாளிதழ்கள் மகிழ்ச்சியோடு தலைப்பு போட்டு இருக்கிறார்கள். ‘தி.மு.க. மாநிலக் கட்சிகூட அல்ல, குடும்பக் கட்சி’ என்று நட்டா சொன்னதாக ‘தினமணி’ தலைப்பு போட்டிருக்கிறது. ‘தி.மு.க. மாநிலக் கட்சி அல்ல, குடும்பக் கட்சி’ என்று நட்டா சொன்னதாக ‘இந்து தமிழ் திசை’ தலைப்பு போட்டிருக்கிறது.

இந்த நட்டாவுக்கு, தமிழக பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் உள்ள முகம் தெரியுமா?

எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள்..?

ரவுடிகள் சேர்ந்த தகவல்கள்...? இவைதான் அதிகம்.

இப்படி மாற்றுக் கட்சியினர் யாரும் சொல்லவில்லை. அந்தக் கட்சியில் இருப்பவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வெளியில் வந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள், அந்தக் கட்சியில் இருந்து கொண்டே மீடியாக்களுக்குப் பேட்டி கொடுப்பவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதெல்லாம் அந்த ஜே.பி.நட்டாவுக்குத் தெரியுமோ?

முடை நாற்றம் எடுக்கும் தமிழக பா.ஜ.க-வின் வீடியோ கலாச்சாரம் பற்றி தெரியுமா?: நட்டாவுக்கு முரசொலி கேள்வி!

பா.ஜ.க. பாலியல் என்று இணைய தளத்தில் தட்டித் தேடுங்கள். சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை, பா.ஜ.க. பிரமுகர் கைது - தாய் மகளுக்கு பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப் பதிவு - பெண்கள் கழிவறையில் நுழைந்து சுகாதாரப் பணியாளர்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி கைது - சேலையை இழுத்து சேட்டை செய்த பா.ஜ.க. நிர்வாகி – பா.ஜ.க. நிர்வாகி மீது பாலியல் புகார் கொடுத்த பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி – பாலியல் புகார் கூறியவரை கட்சியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. - பாலியல் தொல்லை கொடுப்பதாக பா.ஜ.க. பிரமுகர் மீது பெண் புகார் – சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார்-: சிவகங்கை பா.ஜ.க. நிர்வாகி கைது – ஆபாச படம் காண்பித்து பாலியல் அத்துமீறல் , பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது - சிறுமிக்குப் பாலியல் தொல்லை – பா.ஜ.க. நிர்வாகி நீக்கம் – இவை அனைத்தும் இணையத்தில் உள்ளவையே!

பா.ஜ.க.வில் படப்பை குணா நேற்று ரவுடி, இன்று துணைத் தலைவர் - பா.ஜ.க.வில் சேர்ந்த ரவுடி டோக்கன் ராஜா கைது – மண்ணிவாக்கம் ஜோஷ்வா பா.ஜ.க.வில் இணைந்தார் – பா.ஜ.க.வில் சேர வந்த ரவுடி போலீசைப் பார்த்ததும் தப்பி ஓடினார் – அவரது கூட்டாளிகள் 6 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை - 36 வழக்குகள் உள்ள ரவி பா.ஜ.க.வில் இணைந்தார் – 6 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர் பா.ஜ.க.வில் இணைந்தார் – ரவுடிகளில் ஏ பிளஸ் பட்டியலில் இருப்பவர் பா.ஜ.க.வில் இணைந்தார் - அண்ணாமலை தோஸ்த் அமர்பிரசாத் ரெட்டியுடன் தேடப்படும் குற்றவாளி ஹரீஷ் –- இப்படி இணையத்தை திறந்தால் தமிழக பா.ஜ.க.வின் செய்திகள் ரத்தம் தெறிக்கத் தெறிக்க சிதறிக் கிடக்கிறது.

முடை நாற்றம் எடுக்கும் தமிழக பா.ஜ.க-வின் வீடியோ கலாச்சாரம் பற்றி தெரியுமா?: நட்டாவுக்கு முரசொலி கேள்வி!

‘சீ சீ அண்ணாமலை ஆதரவில் ஆபாச வீடியோ பதறும் பா.ஜ.க.’ என்று அட்டைப்படம் வந்த ‘நக்கீரனை’ (நவம்பர் 26) நட்டாவிடம் யாரும் காட்டவில்லையா?

பா.ஜ.க.வின் Honey Trapping குறித்து வந்த நக்கீரனை

(டிசம்பர் 17) பார்க்க வேண்டாமா நட்டா?

‘பா.ஜ.க.வில் சுழன்றடிக்கும் வீடியோ வில்லங்கம்- பிளாக் மெயில் அண்ணாமலை (நக்கீரன் டிசம்பர் 26) என்பதை படிக்கவில்லையா?

‘தாமரையில் மீண்டும் ஆபாச புயல் –- BJP DETOX’ என்கிறது ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (20.12.22).

பா.ஜ.க. தலைவர்களின் ஆபாச படங்கள் – அதிர வைக்கும் அண்ணாமலை என்ற தலைப்பில் ‘நக்கீரன்’ டிசம்பர் 14 இதழில் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி உள்ளது.

பா.ஜ.க. அலுவலக பாரத மாதா சிலைக்கு முன் நின்று கொண்டு ஒரு பெண் கொடுத்த பேட்டியே, அந்தக் கட்சியில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறதே. என்ன உடை, எப்படி உடுத்தச் சொன்னார்கள் என கமலாலயம் வாசலில் வைத்து அவர் சொல்லி இருக்கிறாரே!

முடை நாற்றம் எடுக்கும் தமிழக பா.ஜ.க-வின் வீடியோ கலாச்சாரம் பற்றி தெரியுமா?: நட்டாவுக்கு முரசொலி கேள்வி!

இன்னும் சிலரது பேட்டிகள் வெளியிட முடியாத அளவுக்கு தரக்குறைவு நாற்றம் கொண்டவை ஆகும். தமிழ்நாடு பா.ஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர் காயத்ரிரகுராம். இவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ‘அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்த பிறகுதான் பா.ஜ.க.வில் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் வந்தது. உழைக்கும் ஒவ்வொரு காரிய கர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவது தான் ஒரே வேலையா? பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய பா.ஜ.க. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சொல்லி இருந்தார் காயத்ரி ரகுராம்.

தேசியத் தலைவர் பதவியில் இருப்பவர் யார்? இந்த நட்டாதான்! என்ன தலைப்பு வைக்கலாம்?

banner

Related Stories

Related Stories