முரசொலி தலையங்கம்

கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்போம்.. நம்மை காத்து கொள்வோம்: முரசொலி வேண்டுகோள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது கடந்த 20 நாட்களாக பத்துக்கும் கீழாகதான் இருந்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்போம்.. நம்மை காத்து கொள்வோம்: முரசொலி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29-12-2022)

மீண்டும் கவனம் தேவை!

மீண்டும் சீன கொரோனா தனது சீற்றத்தைக் காட்டி வருகிறது.

மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை கவலை யில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் 20 நாட்களில், 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு புறம், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை சீன தேசிய சுகாதார மையம் சரியாக வெளியிடவில்லை என்றும் குற் றம் சாட்டப்படுகிறது. பலி எண்ணிக்கையை மறைப்பதாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில், "கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் சீன தேசிய சுகாதார மையம் சார்பில் இனி வெளியிடப்படாது" என்று அதிரடியாக அறிவிக்கப் பட்டுள்ளது. மாறாக, கொரோனா பாதிப்பு தக வல்கள். சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப் படுமாம். இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையக் கூட்டம் பெய்ஜிங்கில் நடை பெற்றுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3 கோடியே 70 லட்சம் என்று கணக்கிடப்பட்டதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்தது. இது உலகள வில் மிக அதிகமான தொற்றுப் பரவலாகும். அதாவது, சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு, கொரோனா தொற்று பாதிப்பு சுமார் 40 லட்சமாக இருந்ததுதான் சீனாவின் மிக அதிக அளவான பாதிப்பாக இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு உடனடியாக தளர்த்தியது தான் கொரோனா பரவல் வேகம் அதிக ரித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உலகம் மீண்டும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் கோவிட் - 19 நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுத் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, “உருமாறிய கொரோனா தொற்று குறித்து இந்தியா வில் பதற்றம் அடையத் தேவையில்லை. அதேவேளையில் முன்னெச் சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனமானது" என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்போம்.. நம்மை காத்து கொள்வோம்: முரசொலி வேண்டுகோள்!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல இரண்டு சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைவர்க்கும் கொரொனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது கடந்த 20 நாட்களாக பத்துக்கும் கீழாகதான் இருந்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சம்பந்தமான கட்டமைப்பு களை உறுதி செய்து அறிக்கை கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் பொழுது எந்தெந்த மருந்துகள் தேவைப்படுமோ அந்த மருந்துகள் தற்பொழுது இருக்கிறதா என்பது குறித்தும் அரசு ஆய்வு நடத்தி உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை - நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

*அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனைகளை அதிகரிக்க வேண்டும். எனவே மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவப் பொறியாளர் களிடம் சரிபார்க்க வேண்டும். பயன்படுத்தப் படாத செறிவூட்டிகள் பாது காப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும்.

* ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரக்காலப் பயன்பாட்டிற்குத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* N95 முகக் கவசம். பி.பி.இ. கிட் உள்ளிட்ட அவசரத் தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகளும் வாங்கி வைக்க வேண்டும்.

*மருத்துவ மாணவர்கள் பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் மாணவர் கள் தங்கும் விடுதிகளிலும் கொரோனா நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்போம்.. நம்மை காத்து கொள்வோம்: முரசொலி வேண்டுகோள்!

* மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.

கொரோனா வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். - ஆகிய கண்காணிப்புகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் துறையின் செயலாளர் மூலம் அறிவுறுத்தல் விடப்படுகிறது. மாவட்ட அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து மருத்துவம னைகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டால் எதிர்கொள்வது தொடர் பான வழிமுறைகளை உறுதிப்படுத்தி கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் மட்டும் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில். கொரோனா சிகிச்சைக்கான 72 ஆயிரம் கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 51,945 சாதா ரண படுக்கைகள், 17,542 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகள், 2.722 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 1954 மெட்ரிக்டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கையிருப்பு உறுதிப்பட்டுள் ளது. ஆறு மாதத்திற்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. அரசு கவனமாக தயார் நிலையில் உள்ளது.

மக்கள்தான் கவனத்துடன் இருந்தாக வேண்டும். வருமுன் தன்னைக் காத்துக் கொள்வதே முக்கியம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்போம். மீண்டும் அதிகக் கவனம் தேவை! தேவை!

banner

Related Stories

Related Stories