முரசொலி தலையங்கம்

'INS விக்ராந்த்'- 80% பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக !

உள் நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தின் 80 % பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என முரசொலி தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

'INS விக்ராந்த்'- 80% பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.08, 2022) தலையங்கம் வருமாறு:

விக்ராந்த் -வெற்றி யாருக்கு?

உள் நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்- நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளதை தனது சாதனையைப் போல் பிரதமர் மோடி அவர்கள் பேசுகிறார்.

‘’மிகப்பெரிய போர்க்கப்பலை உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் கட்டும் திறன்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. பாதுகாப்புத் துறையைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக விக்ராந்த் அமைந்துள்ளது. நாட்டை தன்னிறைவு பெற வைப்பதற்கான பிரதிபலிப்பாக விக்ராந்த் அமைந்துள்ளது” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

பா.ஜ.க.வே விக்ராந்த் கப்பலைக் கட்டமைத்தது போன்ற பிம்பமும், இவர்கள் வந்துதான் உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியதாகவும் சொல்லிக் கொள்ளும் தொனி அதில் இருக்கிறது. ஆனால் இந்தக் கப்பலை உருவாக்கும் பணியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்குத்தான் முக்கியப் பங்கு இருந்தது.

'INS விக்ராந்த்'- 80% பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக !

இந்தியக் கடற்படையில் ஏற்கெனவே ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட அந்தக் கப்பல், இந்தியக் கடற்படையில் கடந்த 1961 முதல் 1997- ஆம் ஆண்டு வரை பணியாற்றியது. அந்தக் கப்பலுக்கு ஓய்வு வழங்கிய பின்னர், அதே பெயரில் உள்நாட்டுத் தயாரிப்பில் புதிய கப்பலைக் கட்டுவதற்கு 1999ஆம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசு ஒப்புதல் வழங்கியது. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்தக் கப்பல், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட காலமாக கப்பல் கட்டும் பணியைத் தொடங்காமல் இருந்த நிலையில், 2002ஆம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கும் என அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார். 2008ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து 2011ஆம் ஆண்டிற்குள் இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் பணி தொடங்கப்படவில்லை.

இதன் பின்னர் 2003ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. மேலும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கப்பல் கட்டும் பணிகள் தொடங்கின. கப்பலுக்கான தகடுகள் வெட்டும் பணியை அப்போதைய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதலாக நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கப்பலின் கட்டுமானம் மாற்றப்பட்டது.

'INS விக்ராந்த்'- 80% பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக !

20 ஆயிரம் டன் எடையில் உருவாக்கத் திட்டமிட்ட நிலையில் பின்னர் 38 ஆயிரம் டன்னாக இது மாற்றப்பட்டது. இதனால் கப்பலுக்குத் தேவையான எஃகு சரியான, போதுமான தரத்தில் கிடைக்க வில்லை. எனவே இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி, ரஷ்யாவிலிருந்து அதி உயர் தரத்திலான எஃகு வரவழைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, கப்பலுக்கு அடித்தளம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கப்பலின் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்தன.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து கடலில் மிதக்கும் நிலை வந்ததும், எர்ணாகுளம் கால்வாயில் இந்தக் கப்பல் மிதக்க விடப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி அன்று, கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற ஒரு எளிய விழாவில், உள்நாட்டிலேயே கட்டப்பட்ட, 40,000 டன் எடை கொண்ட விமானம் தாங்கி கப்பலுக்கு, “ஐ.என்.எஸ். விக்ராந்த்” எனப் பெயரிடப்பட்டது. இதர தொடர் சோதனைகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் வசம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்றுதான் தனது முதல் கடல் சோதனைக்காகப் புறப்பட்டது.

இவ்வளவு பின்னணியைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலை முழுக்க முழுக்க மோடி அரசுதான் உருவாக்கி நாட்டுக்கு அர்ப்பணித்ததாகச் சித்தரிக்கின்றனர் பா.ஜ.க.வினர்.

'INS விக்ராந்த்'- 80% பணிகளை முடித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக !

இந்தக் கப்பலில் பெரும்பாலான பணிகளுக்கு நிதி ஒதுக்கியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதனைத் தொடர்ந்து கண்காணித்து 80 சதவீதத்திற்கும் மேலான பணிகளை முடித்துக் கொடுத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கோ, ஆத்ம நிர்பார் என்ற ஸ்டிக்கரை ஒட்டுகிறார். கொரோனா பெருந்தொற்றைப் பொருட்படுத்தாமல் மோடி அரசு நிகழ்த்திய வெற்றி எனக் கூறுகிறார். உண்மையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியக் கடற்படையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தக் கப்பலை இவ்வளவு காலம் இழுத்தடித்தது பா.ஜ.க. அரசுதான் என்பதே உண்மை.

‘‘விக்ராந்த் போர்க் கப்பல் வடிவமைப்பில் இருந்து முழுவதும் கட்டுவதற்கு 22 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. கப்பல் கட்டுவதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது மட்டுமே பா.ஜ.க. ஆட்சியில் இருந்துள்ளது” -என்று காங்கிரசு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருப்பது மட்டுமே உண்மை!

banner

Related Stories

Related Stories