தமிழ்நாடு

பா.ஜ.க-வால் பேரழிவை நோக்கி நகரும் இந்தியா.. ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி சாடல்!

தேசியக் கொடி ஒரு மதத்திற்கோ, மாநிலத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வால் பேரழிவை நோக்கி நகரும் இந்தியா.. ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

இதில் பேசிய ராகுல் காந்தி, "அருமையான இயற்கை சூழலில் முக்கடல் சங்கமிக்கும் இடத்திலிருந்து பயணத்தைத் துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமக்கு முன்னால் காற்றில் அசைந்தாடும் தேசிய கொடியை பார்க்கும் போது வாழ்த்த வேண்டும் என்று மனதார விரும்புகிறோம்.

பா.ஜ.க-வால் பேரழிவை நோக்கி நகரும் இந்தியா.. ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி சாடல்!

சிலர் மூவர்ணக் கொடியை பார்த்து, சக்கரத்தை பார்த்து சாதாரண கொடி என்று நினைக்கலாம். இந்த கொடி நம் கைகளுக்கு சாதாரணமாக வந்து விடவில்லை. இது பரிசாகக் கிடைக்கவில்லை. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்ட கொடி. இந்த கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு 75 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு ஏன் சுதந்திரம் தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தேசத்தை ஒற்றுமைபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்ததால் தான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

தேசியக் கொடி ஒரு மதத்திற்கோ, மாநிலத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானது அல்ல. நாட்டினுடைய, மாநிலத்தினுடைய அடையாளம் அல்ல. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதிப்படுத்துகிறது. இன்று இந்த கொடி மிகப்பெரிய தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எந்த அணுகுமுறை இருந்ததோ அதை தான் தற்போது பாஜக அரசு செய்து வருகிறது.

பா.ஜ.க-வால் பேரழிவை நோக்கி நகரும் இந்தியா.. ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி சாடல்!

நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகளைப் புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தி வருகின்றனர் இது போன்ற செயல்களினால் எங்களை அச்சுறுத்த முடியாது முடக்க முடியாது. பாஜக நினைக்கிறது மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிளக்கலாம் என நினைக்கின்றார்கள் அது முடியாது.

மிகப்பெரிய நெருக்கடிக்கு இந்தியா உள்ளாக்கப்பட்டுள்ளது. பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் சில தொழிலதிபர்கள் கையில் தான் உள்ளது. வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும் அதற்காகத் தான் இந்த ஒற்றுமை நடபயணத்தை துவக்கி உள்ளோம். நடைபயணத்தை துவக்கி வைத்துச் சிறப்பித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories