முரசொலி தலையங்கம்

கொடியிலும் திராவிட மாடல்: சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றவைத்து பட்டொளி வீசி ஒளிரும் முதல்வர்!

திராவிட மாடல் முதலமைச்சரின் வேகமும், விவேகமும் ஆகும். ‘திராவிட மாடல்’ கொடி பறக்கிறது பட்டொளி வீசி!

கொடியிலும் திராவிட மாடல்: சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றவைத்து பட்டொளி வீசி ஒளிரும் முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 20, 2022) தலையங்கம் வருமாறு:

தனது ஆட்சிக்கு ‘திராவிட மாடல் அரசு’ என்று பெயர் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதை இதன் உன்னதமான இலக்காக வரையறுத்திருக்கிறார். “அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி” என்று பிரித்துச் சொல்லி வருகிறார் முதலமைச்சர்.

வளர்ச்சி என்றாலே தொழில் வளர்ச்சியைத்தான் அனைவரும் நினைத்துக் கொள்வார்கள். “அனைத்துச் சமூகங்களின் வளர்ச்சி” என்பதை அழுத்திச் சொல்லி வருகிறார் முதலமைச்சர். “அனைத்து சமூகங்களின் வளர்ச்சி” என்பது மிகச் சாதாரணமாக நடந்து விடாது. பல்லாயிரம் கோடி பணத்தைக் கொண்ட திட்டங்களால் அல்ல, பல கோடிக்கணக்கான மக்களின் மனமாற்றத்தால் நிறைவேற வேண்டியதுதான் அனைத்துச் சமூகங்களின் வளர்ச்சி ஆகும்.

அத்தகைய சமூகச் சீர்திருத்த வளர்ச்சியையும் நம் கண்ணுக்கு முன்னே நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். ஆமாம்! சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதிலும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் பட்டொளி வீசி ஒளிரத் தொடங்கினார்.

கொடியிலும் திராவிட மாடல்: சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றவைத்து பட்டொளி வீசி ஒளிரும் முதல்வர்!

சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘தீக்கதிர்’ இதழில் தலைப்புச் செய்தியாக ஒரு அறிக்கை இடம் பெற்றிருந்தது. “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி”யின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர். கே.சாமுவேல்ராஜ் அவர்களின் அறிக்கைதான் அது.

“தலித் ஊராட்சித் தலைவர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 15ஆம் தேதி, 20 ஊராட்சிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர்களால் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. கொடி ஏற்ற அனுமதித்தாலும் மற்ற பிரிவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது போன்ற பாகுபாடுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக 20 ஊராட்சிகளிலும் தனி அதிகாரிகளை நியமித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசியக் கொடியேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கொடியேற்றும் உரிமை மறுக்கப்படும் ஒரு கிராமம் கூட இருக்கக் கூடாது” – என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார்.

கொடியிலும் திராவிட மாடல்: சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றவைத்து பட்டொளி வீசி ஒளிரும் முதல்வர்!

உடனடியாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இதனை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று கண்காணிக்கச் சொன்னார்கள். தமிழக தலைமைச் செயலாளர், முனைவர் இறையன்பு அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

“சுதந்திர தினத்தன்று, அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதியப் பாகுபாடுமின்றி தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” – என்று கட்டளையிட்டு இருந்தார்.

“சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபு. ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெற லாம் எனத் தகவல்கள் வந்துள்ளன. இப்படிச் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கொடியிலும் திராவிட மாடல்: சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றவைத்து பட்டொளி வீசி ஒளிரும் முதல்வர்!

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை, அவர்களது அலுவலகப் பணிகளை யும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பது, அச்சுறுத்துவது, அவமானப்படுத்துவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்” –என்று எச்சரிக்கை செய்திருந்தார் தலைமைச் செயலாளர்.

கொடி ஏற்றுதல், கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் சாதியப் பாகுபாடுடன் நடத்தப்படாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை – அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் கடுமையாகக் கண்காணித்தது. இதன்படி ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் பாகுபாடு இல்லாமல் நடந்துள்ளன. இப்படி நடந்துள்ளதை உறுதி செய்து, தனக்கு அறிக்கை அனுப்புமாறும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு இருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு ஊரில், - ஒரு பள்ளியில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள், தொடர்புடைய பள்ளிக்கு நேரில் சென்று ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடி ஏற்ற வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெகுவாகப் பாராட்டி இருக்கிறது. “தமிழக அரசு உறுதியான முன்னேற் பாடுகளைச் செய்திருந்தது. நாங்கள் குறிப்பிட்ட 20 ஊராட்சிகளில் மட்டுமல்ல, அனைத்து தனி ஊராட்சிகளிலும் தலித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்வதற்காக சிறப்பு ஆணையை அரசு வெளியிட்டது. அனைத்து தனி ஊராட்சி மன்றத் தலைவர்களும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்த குறுஞ்செய்தியும் தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு உறுதி செய்துள்ளார்கள். இதுபோன்ற முயற்சிகளினால் தமிழ்நாடு முழுவதும் தனி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுகிறது” – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை ஆகும். திராவிட மாடல் முதலமைச்சரின் வேகமும், விவேகமும் ஆகும். ‘திராவிட மாடல்’ கொடி பறக்கிறது பட்டொளி வீசி!

banner

Related Stories

Related Stories