முரசொலி தலையங்கம்

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!

கட்சிகளின் வேட்பாளராக இல்லாமல் கொள்கையின் வேட்பாளராக உயர்ந்து நிற்கிறார் சின்கா

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 02, 2022) தலையங்கம் வருமாறு:

இந்தியக் குடியரசுவின் குரலை ஓங்கி ஒலிப்பவராக இருக்கிறார் யஷ்வந்த் சின்கா. அவரைத்தான் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலை நிலைப்பாடுகள் எடுக்கும் கட்சிகள் சேர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளன.

தமிழ்நாடு வருகை தந்த யஷ்வந்த் சின்காவுக்கு மாபெரும் வரவேற்பை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அவர்கள், "இந்திய ஜனநாயக அமைப்பின் மிக உயரிய தேர்தலில் போட்டியிடும் உன்னதமான, உயர்ந்த மனிதருக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று குறிப்பிட்டார்கள். முதலமைச்சர் அவர்களின் பாராட்டு என்பது எவ்வளவு சரியானது என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் யஷ்வந்த் சின்கா அவர்கள்.

கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு மாண்புகள் ஆகியவற்றைக் காக்கவே நான் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறார்.

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. கட்சியானது கூட்டாட்சி அமைப்புகளுக்கு துளியளவு மரியாதையும் தரவில்லை என்றும், அரசியலமைப்பின் அனைத்துப் பிரிவுகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன என்றும் சொல்லி இருக்கிறார்.

இன்றைய பா.ஜ.க. அரசு மாநில ஆளுநர்களை எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். அதேபோல், ஒன்றிய அரசின் அமைப்புகளை, அரசியல் உள்நோக்கத்துடன் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார். ‘குடியரசுத் தலைவரின் பதவி முக்கியமானது. அந்த மாளிகையில் இருந்து கொண்டு பிரதமரின் பணயக் கைதியாக இருக்க முடியாது' என்பதையும் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் இன்றைய அரசியல் சூழல் என்பது எந்தளவுக்கு பா.ஜ.க.வால் பாழாக்கப்பட்டு வருகிறது என்பதை மிகமிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். இவை ஏதோ அரசியல் ரீதியான விமர்சனங்கள் என்று சொல்லி பா.ஜ.க.வினரால் ஒதுக்க முடியாது. யஷ்வந்த்சின்கா, அரசியல் கடந்து தத்துவார்த்த ரீதியிலும் மிக முக்கியமான கேள்விகளை எழுப்பி வருகிறார்.

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!

இன்றைக்கு இரண்டு சித்தாந்தங்களுக்கு எதிரான யுத்தம் நடப்பதாக சின்கா ஒப்புக் கொண்டு பேட்டி அளித்துள்ளார்.

"முழுமையான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக விளங்கும் மதச்சார்பின்மையையே மீறிக் கொண்டிருக்கிறார்கள். நம் அரசமைப்புச் சட்டம் நம் அனைவருக்கும் அவர்களின் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் அளிக்கிறது.

மதத்தின் அடிப்படையில் எவரொருவருக்கும் பாகுபாடு காட்டக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனினும், நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பல்வேறு பாதுகாப்பு ஷரத்துக்கள் அளிக்கப்பட்டிருக் கக்கூடிய நிலையிலும், சிறுபான்மை இனத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அச்சுறுத் தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக தங்களை உணரும்படி மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு வடிவங்களில் தனிமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தைத் தாங்களே கைகளில் எடுத்துக் கொள்ளும் நபர்களால் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள், அவர்களின் இருப்பிடங்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன்மூலம் சிறுபான்மையினரை மேலும் இழிவுபடுத்த பேய்த்தனமாக முயற்சிக்கிறார்கள்" என்று சொல்லி இருக்கிறார் சின்கா.

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!

"நம் நாடு எப்போதும் எல்லோருக்குமானதாக இருந்து வந்திருக்கிறது. நாம் நம் வேற்றுமைகளை மதித்திருக்கிறோம். அனைத்து சகோதர, சகோதரிகளும் இங்கே வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வரும் மதிப்புடன் கருதப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டத்தின் கீழ் முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் எப்போதும் பாரதத்தின் வழியாக இருந்திருக்கிறது"" என்று இந்திய மனச்சாட்சியின் குரலாக அவர் ஒலித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் பா.ஜ.க.வின் சார்பில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர் சின்கா. வாஜ்பாய் காலத்து முகமாக இருந்தவர் அவர். அவராலேயே இன்றைய பா.ஜ.க.வின் செயல்களை சகிக்க முடியவில்லை.

"அவர்களின் சித்தாந்தம் பெரும் பொய் களை அடிப்படையாகக் கொண்டது, நம் சித்தாந்தம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது"" என்று சொல்லி இருக்கிறார்.

”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!

"குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல. இந்தப் போராட்டம் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது. அவர்கள் சித்தாந்தம் ஜனநாயகத்தை அழிக்கும் சர்வாதிகாரம். நம் சித்தாந்தம் ஒவ்வொரு குடிமகனுக்குமான சுதந்திரம். நாம் நம் ஜனநாயகத்தை வலுப்படுத்த விரும்புகிறோம். அனைத்து நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டு மக்களிடம் நம் சித்தாந்தத்தை ஆதரிக்கக் கேட்டுக் கொள்கிறேன். இதனை அவர்களுடைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

இதற்காக பிரதமரை அழைத்து தனது தகவலை சின்கா சொல்லி இருக்கிறார். இராணுவ அமைச்சரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். பா.ஜ.க. தலைவர்களையும் சந்திப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார் சின்கா. அதாவது, தனது சித்தாந்தப் பரப்புரையை சின்கா தொடங்கிவிட்டார். இதன் முலமாக இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது எண்ணிக்கை அடிப்படையிலானதாக மட்டுமில்லாமல் எண்ணம், சிந்தனை, சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிவிட்டது. கட்சிகளின் வேட்பாளராக இல்லாமல் கொள்கையின் வேட்பாளராக உயர்ந்து நிற்கிறார் சின்கா.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சின்கா, குடியரசுவின் குரலாக ஒலிப்பதை வரவேற்கிறோம்.

banner

Related Stories

Related Stories