முரசொலி தலையங்கம்

ஆகஸ்ட் 2 வரலாற்றின் பொன்னாள்! வாழ்விலோர் திருநாள்! - பேரவைக்குள் கலைஞர் இருப்பது நமது நன்றியின் அடையாளம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது குறித்து முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

ஆகஸ்ட் 2 வரலாற்றின் பொன்னாள்! வாழ்விலோர் திருநாள்! - பேரவைக்குள் கலைஞர் இருப்பது நமது நன்றியின் அடையாளம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆகஸ்ட் 2 - வாழ்விலோர் திருநாளாக அமைந்திருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இந்த படத்திறப்பு விழா நடந்திருக்கிறது. நான்கு திசையிலும் பதினாறு கோணத்திலும் பரந்து விரிந்து வாழும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் வாழ்விலோர் திருநாளாக இது அமைந்துவிட்டது. இப்படம் வைப்பதன் மூலமாக இந்த தமிழ்ச் சமுதாயம் அவருக்குக் காட்ட வேண்டிய நன்றிக் கடனைக் காட்டிக்கொள்கிறது என்பதுதான் உண்மை!

"நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால் பின் தங்கிய வகுப்பினர் நலனுக்காக என்னுயிரை பணயமாக வைத்துப் போராடுவேன்" என்று இதே சட்டமன்றத்தில் 25.2.1969 அன்று சொன்னவர் முதல்வர் கலைஞர். தான் சொன்ன வாக்கைக் காப்பாற்றியவர் கலைஞர். அதற்கு நாம் காட்ட வேண்டிய நன்றியின் அடையாளமாக அவரது படம் திறக்கப்பட்டுள்ளது! "எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிக மிகப் பின்னடைந்த சமுதாயத்தைச் சார்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பர்யம் கிடையாது.

ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை. கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும், காஞ்சிக் கல்லூரியும். நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவுப் பணியாளன் என்று அண்ணா அவர்கள் எனக்குப் பட்டம் கொடுத்தார். சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென நினைப்பவன் நான்" என்றார் கலைஞர். அதற்கு ஏற்படவே நடந்தவர் கலைஞர். தனது ஒவ்வொரு பிறந்த நாள் விழாவையும் ஒவ்வொரு எளிய பிரிவினர் நன்மைக்காக தாரை வார்த்தவர் கலைஞர். 1972 ஆம் ஆண்டு பிறந்த நாளில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு பிறந்தநாளில் கண்ணொளி வழங்கும் திட்டம் தொடங்கினார். 1974 ஆம் ஆண்டு பிறந்தநாளில் சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் தொடங்கினார்.

ஆகஸ்ட் 2 வரலாற்றின் பொன்னாள்! வாழ்விலோர் திருநாள்! - பேரவைக்குள் கலைஞர் இருப்பது நமது நன்றியின் அடையாளம்!

1975 ஆம்ஆண்டு பிறந்தநாளில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கினார். அவரதுபிறந்தநாளை முன்னிட்டு சேர்ந்த நிதியை பல்வேறு பகுதியினரது மறுவாழ்வுக்குத் தாரைவார்த்தார்.1985 ஆம் ஆண்டு பிறந்த நாளில் வசூலான தொகையை தனித்தமிழீழம் கேட்டுப் போராடும்போராளிக் குழுக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். 1989 ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது,‘இந்திய ராணுவத்தால் பிரபாகரனுக்கு எந்த ஆபத்தும் நடந்துவிடக்கூடாது என்பதே எனதுபிறந்தநாள் செய்தி' என்று அறிவித்தார். கணவனால் கைவிடப்பட்டோர், 50 வயதைத் தாண்டியும்திருமணம் செய்து கொள்ளாதோர், திருநங்கையர், மறுவாழ்வுக்கு ஏங்கிய விளிம்பு நிலை மக்கள்ஆகியோருக்காகப் பல்வேறு திட்டங்களை எண்ணி எண்ணிச் செயல்படுத்தியவர் கலைஞர்.

தொழிலாளர்கள், பாட்டாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அவர் எல்லாத்துறையினருக்கும் ஏராளமாகச் செய்து கொடுத்தவர். அதனால்தான் அவருக்கு இந்த தமிழ்ச்சமுதாயம் நன்றியின் அடையாளம் காட்டுகிறது!1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சமூகத்தின்சரி பாதியான பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அதனை1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். ‘என்னுடையஐந்தாவது வயதிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. அதனை 60 ஆண்டுகளுக்குப் பிறகுஎன்னுடைய 65வது வயதில் நிறைவேற்றிக்காட்டுகிறோம் என்றால் அதுதான் எனக்கும் இந்தஅமைச்சரவைக்கும் கிடைத்த பெருமை' என்று இதே அவையில் முதல்வர் கலைஞர் அவர்கள்பேசினார்கள். சட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார்கள்.

அவருக்குத் தமிழ்ச்சமுதாயம் காட்டவேண்டிய நன்றியின் அடையாளமாகப் படம் திறக்கப்பட்டுள்ளது!‘திராவிட நாடு' கோரிக்கையைக் கழகம் கைவிட்ட போது அதனை அரசியல் ரீதியாகவிமர்சித்தவர்கள் உண்டு. காலத்தின் அரசியல் சூழலின் அருமையைக் கருதி அண்ணா எடுத்தநிலைப்பாட்டுக்கு ‘மாநில சுயாட்சி' என்ற மறுவுருவம் கொடுத்தார் கலைஞர். 1974 ஏப்ரல் 16 ஆம்நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர்கலைஞர் ஆற்றிய உரைதான் இன்று வரை இந்தியாவுக்கும் இந்தியாவின் அனைத்துமாநிலங்களுக்கும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது.‘பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில்பதித்துக் கொண்டும், இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும்இந்தச் சுடர் விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்றும்பணிவன்புடன் கோருகிறேன்' - என்று முடித்தார்.

இன்று தமிழ்நாடு மட்டுமல்ல; கேரளாவும்பஞ்சாப்பும் மேற்கு வங்காளமும் காஷ்மீரும் மாநில சுயாட்சிக்காக முழங்கிக் கொண்டு இருக்கிறதுஎன்றால் அதற்கான அடித்தளத்தை அன்றே முதல்வர் கலைஞர் அவர்கள் போட்டுக் கொடுத்தார்.கூட்டாட்சித் தத்துவத்திலும் மாநில சுயாட்சிக் கொள்கையிலும் நம்பிக்கையும் நல்லெண்ணமும்கொண்டவர்களால் காட்டப்படும் நன்றியின் அடையாளமாகப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!‘முரசொலி' இந்த நேரத்தில் அடையும் மகிழ்ச்சியும் பெருமையும் என்பது யாருக்கும்வாய்க்காதது. ‘முரசொலி'யைக் கருவாக்கி, திருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் படம்திறக்கப்பட்ட ஆகஸ்ட் 2 - வரலாற்றின் பொன்னாள்! வாழ்விலோர் திருநாள்!

banner

Related Stories

Related Stories