முரசொலி தலையங்கம்

“காவிரி நடுவர் மன்றம்: வரலாறு தெரியாமல் உளறும் போலி விவசாயி பழனிசாமி” - முரசொலி தலையங்கம் பதிலடி!

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டது எனக் கூறிய பழனிசாமிக்கு முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டி பதிலடி கொடுத்துள்ளது.

“காவிரி நடுவர் மன்றம்: வரலாறு தெரியாமல் உளறும் போலி விவசாயி பழனிசாமி” - முரசொலி தலையங்கம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மெத்தப்படித்த மேதையைப் போல போலி விவசாயியான பழனிசாமி தினமும் காவிரி பற்றி பேசி வருகிறார். காவிரியில் தி.மு.க.வும் கலைஞரும் துரோகம் செய்துவிட்டதாக அந்தப் போலி விவசாயி சொல்லி வருகிறார். கழக ஆட்சியும் முதல்வர் கலைஞரும் காவிரி பிரச்சினையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் விரிவாக விளக்கிவிட்டார்.

1968ஆம் ஆண்டு கர்நாடக அரசு அணைக் கட்டத் தொடங்கிய போதுஅன்றைய பொதுப்பணித் துறை அமைச்சரான கலைஞர் அவர்கள்தான் முதன்முதலாக கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கர்நாடக அரசு ஒத்துழைக்காத நிலையில் 1970ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் முதல்வர் கலைஞர்! இதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971ஆம் ஆண்டுதீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

ஹேமாவதி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க. அரசு. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி உரிமை மீட்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. 1989ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தார்கள். பேச்சுவார்த்தை இனி பயன்படாது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தாக வேண்டும்என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினார்.

“காவிரி நடுவர் மன்றம்: வரலாறு தெரியாமல் உளறும் போலி விவசாயி பழனிசாமி” - முரசொலி தலையங்கம் பதிலடி!

தமிழக அரசின் கருத்து எதுவோ, அதை மத்திய அரசின் கருத்தாக உச்ச நீதிமன்றத்தில் சொல்ல வைத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைத்தார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். அதற்குக் காரணம் முதல்வர் கலைஞர் அவர்கள்! காவிரி நடுவர் மன்றம் சார்பில் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றைத் தாருங்கள் என்று சொல்லி இடைக்காலத் தீர்ப்பை வாங்கியவர் முதல்வர் கலைஞர்! 25.6.1991ஆம் நாள் இடைக்கால தீர்ப்பு வந்தது.

ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற இடைக்காலத் தீர்ப்பை வாங்கித் தந்தவர் கலைஞர் அவர்கள். அதன் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 1997 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமையக் காரணமாக இருந்தவரும் முதல்வர் கலைஞர். காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் - 2007ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி. என்றுதான் தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்துக்கும் போனோம்.

காவிரி மன்றத்தையும் நாடினோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னோம். இதில் கலைஞர் அவர்கள் எங்கே துரோகம் செய்தார்?- என்று விரிவாக வரலாற்றுப் பூர்வமான பதிலை தி.மு.க. தலைவர் வழங்கிவிட்டார். அதன் பிறகும் பழனிசாமி வாயை மூடவில்லை! கடலூரில் உரையாற்றிய பழனிசாமி, "கர்நாடகாவில் உள்ள கபினி அணை கட்டப்படும் போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அதனை தடுத்து நிறுத்தவில்லை" என்று சொல்லி இருக்கிறார்.

அவருக்கு எந்த வரலாறும்தெரியவில்லை.கபினி அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட ஆண்டு 1958. அப்பணி தொடங்கப்படும்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் காமராசர் அவர்கள். அப்பணி விரைந்து நடந்து கொண்டு இருந்தபோது தமிழக முதலமைச்சராக இருந்தவர் பக்தவத்சலம் அவர்கள். இது பழனிசாமிக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம் 1956-ல் உருவாக்கப்பட்டது.

“காவிரி நடுவர் மன்றம்: வரலாறு தெரியாமல் உளறும் போலி விவசாயி பழனிசாமி” - முரசொலி தலையங்கம் பதிலடி!

தமிழக எதிர்ப்பை மீறித்தான் கபினிஅணை கட்டப்பட்டது. ஹேரங்கி அணை கட்டுவதற்கான பணிகள் 1964ஆம்ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதுவரை இரண்டு மாநில அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை, இரு மாநில முதலமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையாக மாறியது. 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கர்நாடகா சார்பில் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் பங்கேற்றார்.

தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் பங்கெடுத்திருக்க இயலாத நிலையை அவரது உடல்நிலை உருவாக்கிவிட்டது. புற்று நோயின் தாக்கம் அவரை உருக்கிக் கொண்டு இருந்தது. அதனால் பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் பங்கெடுத்தார். சட்டஅமைச்சர் செ.மாதவனும் உடனிருந்தார். கர்நாடக அரசின் ஒப்பந்த மீறல்கள் அனைத்தையும் அமைச்சர் கலைஞர் கண்டித்தார். எதிர்ப்பை பதிவு செய்தார். இதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை.1969ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக வந்த கலைஞர் அவர்கள் கர்நாடக அரசு கட்டும் அணைகளுக்குத் தடையாணை விதிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 25.10.1971ஆம் நாள் நிராகரித்துவிட்டது. தமிழக அரசு கட்டியுள்ள அணைகளின் கொள்ளளவில் மைசூர் அரசும் அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தபோது பவானி அணை கட்டப்பட்டதையும், காமராசர் காலத்தில் அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகளில் அணை கட்டப்பட்டதையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டி அவர்களும் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இவை எல்லாம் தனது துறை அதிகாரிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பழனிசாமி பேசலாம்.

முதல்வர் கலைஞர் அவர்களின் மூளையில் உதித்ததுதான் நடுவர் மன்றம். அந்தக் கோரிக்கையை முதன்முதலாக 17.2.1970 அன்று மத்திய அரசுக்கு கோரிக்கையாக முதல்வர் கலைஞர் அவர்கள் வைத்தார்கள். கபினி பற்றிப் பேசும் பழனிசாமி, 1977க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். 1977 முதல் 1986 வரைக்கும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்திக் கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். 1986ஆம் ஆண்டு தான் காவிரி தொடர்பாக, முதல் கடிதத்தையே எம்.ஜி.ஆர். எழுதினார்.

எழுதிய நாள் 6.7.1986 .காவிரி பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தில் தமிழக அரசின் சில கடிதங்களை நினைவூட்டி எழுதி இருந்தார் எம்.ஜி.ஆர். அந்தக் கடிதங்கள் அனைத்தும் முதல்வர் கலைஞரால் எழுதப்பட்டவை தான்.எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட கடிதங்களின் தேதிகள் இவைதான்: தமிழக அரசின் கடிதம் 5.9.1969தமிழக அரசின் கடிதம் 17.2.1970தமிழக அரசின் கடிதம் 29.5.1975 - ஆகிய மூன்று கடிதங்களை எம்.ஜி.ஆர். மேற்கோள் காட்டினார். இவை மூன்றுமே முதல்வர் கலைஞரால் எழுதப்பட்டவைதான். இவை தெரியாமல் பழனிசாமி பேசக்கூடாது!

banner

Related Stories

Related Stories