முரசொலி தலையங்கம்

“ஊர்ந்து உயர்ந்த பழனிசாமியும் பன்னீரும்” - முரசொலி தலையங்கம் பதிலடி! #Elections2021

ஊழலால் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. என பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முரசொலி நாளேடு தலையங்கம் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

“ஊர்ந்து உயர்ந்த பழனிசாமியும் பன்னீரும்” - முரசொலி தலையங்கம் பதிலடி! #Elections2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊர்ந்தது உயர்ந்தால் அவற்றுக்கு பெருமலை கூட குன்றாய் காட்சியளிக்கும். அடர்ந்த மாபெரும் வனங்களும் பூங்காவாகவோ, சிறிய தோட்டமாகவோ தெரியக்கூடும். அல்லது பார்வையின் மனம் பொருத்து சிறுமையுடைய காட்சியாகக் கூட அவை தெரியலாம். இந்த பீடிகை எதற்கு என்று கேட்கலாம். நமது அன்புக்குரிய எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரைகளை நாளேடுகளில் பார்த்த போது, நமக்கு ‘ஊர்ந்தவை உயர்ந்தால் என்ன நிலைமை’ என்பது நினைவுக்கு வர, அதனையே மேலே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

கூவத்தூரில் சசிகலாவின் காலை ஊர்ந்து வந்து வணங்கியதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி உயரப் பறக்கும் முதல்வர் பதவியைப் பெற்றார். அப்படி பறந்த அனுபவம் - பறக்கின்ற அனுபவம் - பறக்கும் அனுபவம் வாய்க்கிறபோதெல்லாம் தி.மு.க.வினரின் உருவம் அவருக்குச் சிறுத்துப்போகிறது. நம்மை ஏசுகிறார். வாயிக்கு வந்தபடி பேசுகிறார். நாம் எப்படிச் சும்மாஇருக்க முடியும்? கூவத்தூர் காட்சிகளைச் சொல்கிறோம். நாம் மட்டும் இதனைச்சொல்லவில்லை. இது நாடே அறிந்த இரகசியம். எல்லா ஏடுகளிலும் பழனிசாமிகாலைப் பிடிக்கும் ஒளிப்படம் பதிவாகி மக்கள் பார்வையில் பதிந்து போய்இருக்கிறது.

அதைத் தி.மு.க.வினர் திரும்பத் திரும்பச் சொல்கிற அவசியம்ஏற்படுகிற போது எடப்பாடி பழனிசாமி நம் மீது பாய்கிறார். அதற்கு என்ன பதிலைசொல்கிறார் தெரியுமா?""""நான் ஊர்ந்து வருவதற்கு பல்லியோ, பாம்போ அல்ல, நான் நடந்து வந்து தான்முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்"" - என்று எடப்பாடி பழனிசாமி பதில்கூறுகிறார். முதல்வர் பதவியை, ஊருகிற பல்லியோ, பாம்போ ஏற்காது என்பதுஉலகத் திற்குத் தெரியாதா என்ன? இவர்தான் நடந்து வந்து பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியுமே. அதுவல்ல பிரச்சினை.

சசிகலாகாலில் விழுந்து ஊர்ந்து வணங்கியதற்கான சாட்சியங்களாக ஒளிப்படங்கள் இருக்கும் போது - அதற்காக தி.மு.க.வினர் மேல் கோபப்பட்டால் உண்மையை மறைத்து விட முடியுமா, என்ன? எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஆருடம் பேசுகிறார். இல்லையென்றால் கடவுளை இழுக்கிறார். அதுவும் இல்லை என்றால் தி.மு.க. என்றாலே குடும்ப அரசியல் என்கிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி என்று கூறுகிறார். அறிஞர் அண்ணாவோடு சேர்த்து தி.மு.க. ஆறுமுறை தமிழ்நாட்டை ஆண்டு இருக்கிறது. எவரும் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறை சென்றதில்லை.

“ஊர்ந்து உயர்ந்த பழனிசாமியும் பன்னீரும்” - முரசொலி தலையங்கம் பதிலடி! #Elections2021

ஆனால், தி.மு.க.வைப் பார்த்து ஊழலுக்காக கலைத்திட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனது பரப்புரையைப் பரப்பி வருகிறார். தொடர்ந்து பொய்யைச் சொல்லி வருகிறார். நெருக்கடியைப் பயன்படுத்தி அதை எதிர்த்ததற்காக தி.மு.க. ஆட்சியை முதன்முதலில் கலைத்தார்கள். இரண்டாவது முறை ஈழப் பிரச்சினைக்காக கலைத்தார்கள். ஆனால், எடப்பாடி ஊழலுக்காகத் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று பொய்யைச் சொல்லி வருகிறார். குடும்ப அரசியல் என்பதற்கு மிக அருமையான ஒரு பதிலை உதயநிதிஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். ‘மக்கள் வாரிசு அரசியலை நிராகரிக்கட்டும்’ என்று அவர் பதில் கூறி இருக்கிறார்.

தி.மு.க.வில் குடும்பம் குடும்பமாகத்தான் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மக்களிடம் சென்று பிரதிநிதித்துவம் கோரி நிற்கிற போது அவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். இதற்கு எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது ஊர்வனவற்றைக் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தினாலும் நாம் வியப்படையப் போவதில்லை. நாம் மக்களை நம்புகிறோம். பத்தாண்டு திட்டங்களை அவர்களுக்காகஅவர்கள் முன் வைக்கின்றோம். எங்களை ஆட்சி செய்ய அனுமதியுங்கள் என்றுமக்களிடம் தேர்தல் நேரத்தில் சொல்கிறோம்; ஆணையிட கோருகின்றோம். இது ஜனநாயக முறை; நெறி. மக்கள் அதிகாரம் படைத்தவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள்தான் தீர்மானிப் பார்கள்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்? "ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகும் ராசி இல்லை. உள்ளம் நன்றாக இருந்தால்தான் கடவுள் நல்ல பதவியில் அமர வைப்பார். ஸ்டாலினுக்கு நல்ல உள்ளம் கிடையாது. அதனால் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு ஒரு போதும் கிடைக்காது" இப்படி ஆரூடத்தை சொல்கிறார்; தேர்தலுக்கு கடவுளை இழுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது நல்ல உள்ளத்தை மக்கள் தெரிந்து கொள்ளும்படி பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு நமக்கும் முதல்வருக்கும் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் உணர்த்துவதாக இருக்கிறது. அதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வினர் அவர்களின் நிறுவனத் தலைவர் காலத்திலிருந்து மாநில சுயாட்சி குறித்து மாநாடோ, அகில இந்திய அளவில் ஓர் ஏற்பாடோ, சட்டசபையில் ஒரு தீர்மானமோ நிறைவேற்றியதில்லை. இப்போதுள்ள ஆட்சியில் உள்ள பழனிசாமி மத்திய - மாநில உறவைப் பற்றி என்ன சொல்கிறார்?. "மத்தியில் இருக்கும் ஆட்சியுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கான சிறப்புத் திட்டங்களுக்கு அனுமதியும், நிதியும் கிடைக்கும். அதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கின்றோம். நாங்கள் பா.ஜ.க.வுக்கு அடிமை அல்ல".

இந்தத் திருவாசகம் எடப்பாடி பழனிசாமி உடையது. மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிமையுடைய அனைத்தையும் செய்தே ஆக வேண்டும். திட்டங்களுக்கு அனுமதியும், நிதியும் எந்த அரசும் கோராமலோ, கேட்டுப் பெறாமலோ இருக்க முடியாது. மாநில அரசு மோதல் போக்கை கடைப் பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆகவேதான், முத்தமிழறிஞர் கலைஞர் "உறவுக்கு கைக் கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" எனும் கொள்கை முழக்கத்தை முன் வைத்தார். நாம் ஆட்சிக்கு வந்தால் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மோதல் போக்கை உருவாக்கும் கட்சி என்பது போல ‘இணக்கமாக இருப்போம்’ என்று அவர் பரப்புரை செய்கிறார்.

அதே நேரத்தில் ‘நாங்கள் பா.ஜ.க.வுக்கு அடிமை இல்லை’ என்பதையும் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க.வோடு இவர்களின் உறவு எப்படி இருந்தது -இருக்கிறது என்பதை இந்த நாட்டு மக்களே நன்றாக அறிவார்கள். அதை எடப்பாடி பழனிசாமி பேசித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தேனி பொதுக்கூட்டத்தில் பன்னீர் செல்வம் பேசுகிற போது, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என்று அவர் சொன்னதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ், பழனிசாமி - பன்னீர் கரங்களைக் கோத்து விட்ட காட்சி நடந்தேறியதும் அமித்ஷா கலந்து கொண்ட அரசு விழாவில் அவர்களாகவே முன்வந்து பன்னீரும் - பழனிசாமியும் ‘நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்’ என்று கூறியதும் எல்லாம் நடந்த பிறகு இவர்கள் டெல்லிக்கு அடிமை இல்லை என்று சொன்னால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? ஊர்ந்தது உயர்ந்ததால் நிலைமை இப்படி ஆயிற்று என்று சொன்னால் அது மிகையில்லை; உண்மைதான்.

banner

Related Stories

Related Stories