முரசொலி தலையங்கம்

கூசாமல் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் : போலி வேடத்தை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!

போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார். - இந்தப் பழனிசாமி தான் நானும் விவசாயி என்கிறார்.

கூசாமல் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் : போலி வேடத்தை அம்பலப்படுத்திய  முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூசாமல் பொய் சொல்வதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான்! ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவர்தான்! தேர்தல் நெருங்கி வருவதால் அவர் போடும் வேஷங்களில் ஒன்று, ‘நானும் விவசாயி' என்பதாகும்.

பச்சைத் துண்டு போடுவதாலோ, பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துவிடுவதாலோ அவர் விவசாயி ஆகிவிட முடியாது. நேற்றைய தினம் மதுரையில் பேசிய பழனிசாமி, “விவசாயிகளைக் காப்பதில் தமிழகம் முதலிடம்” என்று பேசி இருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் தெரியாதா?

டெல்டா மாவட்டங்களே கொந்தளித்துக் கிடக்கிறது.

காவிரிக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

காவிரி உரிமை ஜல்சக்தி துறையின் தொங்கு சதையாக மாறிவிட்டது.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியவில்லை.

எரிவாயுக் குழாய்கள் அமைப்பதால் விவசாயிகள் பல மாவட்டங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டங்கள் விவசாயிகளை அச்சம் தர வைத்துள்ளது.

கஜா புயல் தாக்கி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் நிவாரணம் தரவில்லை.

தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை.

நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

நெல் கொள்முதலை முழுமையாகச் செய்யவில்லை.

கரும்புக்கு விலை இல்லை.

கரும்பு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக பாக்கி.

கூட்டுறவுத் துறையில் தனிநபர் கடன் தருவது இல்லை.

கூசாமல் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் : போலி வேடத்தை அம்பலப்படுத்திய  முரசொலி தலையங்கம்!

விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிடுகிறார்கள்.

கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை.

கடன்களை தள்ளுபடி செய்யச் சொன்ன உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கவில்லை. உச்சநீதி மன்றம் போய் தடை கேட்டு வாதாடுகிறார்கள்.

நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.

போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார். - இந்தப் பழனிசாமி தான் நானும் விவசாயி என்கிறார். விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம் என்கிறார். இதைவிட காதில் பூ சுற்றும் காரியம் இருக்க முடியாது. உண்மையான விவசாயிகளுக்கான ஆட்சியைக் கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான், கழக அரசு தான் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கூட்டங்களில் சொல்லி இருக்கிறார்!

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த பட்சக் கூலி நிர்ணயிப்பதற்காக கணபதியாப்பிள்ளை ஆணையம் அமைத்தது கழக அரசு. தஞ்சை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி வரையறை செய்வதற்காக 1973 இல் கார்த்திகேயன் ஆணையம் அமைத்தவர் முதல்வர் கலைஞர்

புன்செய் நிலங்களுக்கு வரியை நீக்கினார். 5 ஏக்கர் வரை நஞ்செய் நிலத்துக்கு வரியை நீக்கினார். 1970 ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர். இதனால், 88 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி 38,504 விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர்!

குடியிருப்போருக்கே வீட்டுமனை சொந்தம் என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் பலன் பெற்றார்கள். நாங்கள் ரத்தம் சிந்திப் பெற வேண்டிய உரிமையை ஒரு துளிமையால் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார்கள்.

கூசாமல் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் : போலி வேடத்தை அம்பலப்படுத்திய  முரசொலி தலையங்கம்!

கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத்தரவில்லை என்று சொல்லி 1971ம் ஆண்டே காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர். 1990 ம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பும் பெறப்பட்டது.

கர்நாடக அரசு வழங்கும் நீரைக் கண்காணிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முதல்வர் கலைஞரின் சிந்தனையானது 1999ம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது. இப்படி காவிரி உரிமையைக் காப்பாற்றியவர் கலைஞர்.

1978 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டுப் போராடினார்கள். 1990ம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல, மின் கட்டணமே விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இல்லை என்று அறிவித்தவர் முதல்வர் கலைஞர்!

1989 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறு விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கழகம் அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் 106 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய அபராத வட்டியான 10 கோடி ரூபாயை கலைஞர் அரசு ரத்து செய்தது. விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகள் உள்பட அனைத்துப் பொருள்களுக்கும் விற்பனை வரி நீக்கப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மட்டும் நிலவரியாக 365 கோடியை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே 7000 கோடிக்கான கூட்டுறவுக் கடனை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர்!

என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். ‘தமிழக உழவர் பெருமக்களை தமிழகத்தின் பசிப்பிணி மருத்துவர்கள்' என்று சொன்னவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழக விவசாயிகளுக்கு பிணியே இந்த பழனிசாமிதான்!

banner

Related Stories

Related Stories