முரசொலி தலையங்கம்

"மாநில உரிமையை நசுக்கும் ஆளுநர்களின் அரசியல்!" - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசு அமைந்ததற்குப் பிறகு, மாநில ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்கள் என்ற உண்மையை பா.ஜ.க-வே கூட மறுத்திட முன்வராது.

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானின் கண்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் எனக் கொண்டுவந்த தீர்ம்னாம உறுத்தலாகிவிட்டது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான முழக்கம் அம்மாநில ஆளுநருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முதல்வரின் பேச்சுகளைக் கண்டித்தார்.

இந்த இரண்டு ஆளுநர்கள் மட்டுமல்லாமல், வேறு சில ஆளுநர்களின் அரசியலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி முறையில் மத்திய அரசின் பிரதிநிதிக்கு மாநிலத்தில் வேலை இல்லை.

அதனால்தான், அன்றே அறிஞர் அண்ணா, “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்று வினவினார். இதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.

banner