முரசொலி தலையங்கம்

ஐ.ஐ.டி-களில் தற்கொலைகளை தொடர்ந்து அனுமதிக்கப் போகிறதா அரசு? - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஃபாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய பேராசிரியர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனத்தில் மதச்சார்பின்மை நடைமுறையில் இல்லை. தகுதியுடைய பிற மதத்தவர்கள் மீது தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இவ்வமைப்புகளில் இப்படித் தொடர்ந்து நடைபெறுவதை அரசு அனுமதிக்கப் போகிறதா?

நாட்டின் உயர் அதிகாரமுடைய அமைப்பின் கவனத்திற்குக் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பிரச்சனையை கொண்டுபோய் இருக்கிறார். ஃபாத்திமாவின் வழக்கில் இந்த அரசுகள் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பொருத்தே அதன் உண்மைப் பண்பு உலகுக்குத் தெரியவரும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner