மு.க.ஸ்டாலின்

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

“தி.மு.க.வின் ஒப்பற்ற திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் மலர வேண்டும்!”

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (ஏப்.20) திரு.வி.க. நகர், பெரம்பூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் மேற்கொண்ட பரப்புரையில் ஆற்றிய உரை விவரம் :

எழும்பூர் :

நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் மே நான்காம் தேதி மீண்டும் உருவாகப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் அருமைச் சகோதரர் தமிழன் பிரசன்னாவுக்கு, நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தர வேண்டும். அதற்காகத்தான், நானும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வந்திருக்கிறோம்.

அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் ஒரு பெரிய போராளி. எந்த அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கு அஞ்சாதவர். மோடியை எதிர்த்துப் போராடக் கூடியவர். ஃபாசிஸ பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்.

தொடர்ந்து இரண்டு முறை டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மூன்றாவது முறையும் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரை முடக்க வேண்டும் என்பதற்காக, அவரின் வலதுகரமாக - இடதுகரமாக - தளபதிகளாக இருந்த பல அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்து, ஆண்டு கணக்கில் சிறையில் அடைத்து வைத்தார்கள்.

அதற்குப் பிறகு தேர்தல் நெருங்க நெருங்க, நம்முடைய அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஊழல் செய்தார் என்று ஒரு பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால் அந்த அவதூறான வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. அதன் பின்னர் விடுதலை ஆகி வந்திருக்கிறார்.

இதற்கிடையில்தான், டெல்லியில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி, பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, துஷ்பிரயோகம் செய்து, பல தில்லுமுலுகளை செய்து, அவரை மூன்றாவது முறையாக வர முடியாத அளவிற்கு தேர்தலை நடத்தி முடித்தார்கள்.

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. “என்னை எவ்வளவு முறை சிறையில் போட்டாலும்; எவ்வளவுதான் என்னை கொடுமைப்படுத்தினாலும்; தூக்கு கயிற்றில் ஏற்றினாலும், நான் கவலைப்பட மாட்டேன். உங்களை (பிரதமர் மோடி) எதிர்ப்பேன்; உங்களை எதிர்ப்பதுதான் என்னுடைய லட்சியம்; உங்கள் ஆட்சியை ஒழிப்பதுதான் என்னுடைய கோட்பாடு” என்று உறுதியோடு இருக்கக்கூடியவர்.

இன்னும் அவரைப் பற்றி பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், டெல்லியில் பல்வேறு சாதனைகளை - திட்டங்களை அங்கே உருவாக்கித் தந்தார்.

அதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, பள்ளிக்கூடங்களில் சிறப்பு வகுப்புகள். மாடல் ஸ்கூல் என்ற பெயரில், பல சிறப்பான திட்டங்களை – சாதனைகளைக் கொண்டு வந்தார்கள்.

நான் உடனடியாக இங்கிருக்கும் அதிகாரிகளிடமும், நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடும் கலந்து பேசி, அங்கு நடப்பது போன்று நம்முடைய தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து, நேராக நாங்கள் டெல்லிக்குச் சென்றோம்.

அவர் எங்களுக்கு அதை எல்லாம் சுற்றிக் காண்பித்தார். எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் விவரமாக எடுத்துச் சொன்னார்.

அதற்குப் பிறகு, நம்முடைய தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கணக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளை நாம் ஆரம்பித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப் போகிறோம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு புதுமைப்பெண் திட்டத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும்போது, ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் அல்லவா?, அதை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப் போகிறோம். அதேபோன்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் வழங்கும் ஆயிரம் ரூபாயையும், ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப் போகிறோம்.

அதேபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இனி ஆயிரம் அல்ல, 2 ஆயிரம் ரூபாய்!

இன்னொன்று, ‘இல்லத்தரசி’ திட்டம். அதில் 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப் போகிறோம். அதில் என்ன பொருள் வாங்க வேண்டும் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது முழுக்க முழுக்க பெண்களிள் சாய்ஸ். இப்படி ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், புதுமைப்பெண் திட்டத்தை இந்த வட சென்னையில் முதன்முதலில் தொடங்கினோம். அதை அப்போதைய டெல்லி முதல்வராக இருந்த சகோதரர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டம் இப்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

இப்படி, அவருக்கும் நமக்குமான உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தொடர்பின் காரணமாகத்தான், நான் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று அழைத்தேன். அவ்வாறு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல் வந்திருக்கிறார். அவர்களை வருக! வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

துறைமுகம் :

எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? (மக்கள் : நல்லா இருக்கோம்!) நன்றி!

உங்களைத் தேடி வந்திருக்கிறேன். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை எடுத்துவைக்க வந்திருக்கிறேன். உதயசூரியனுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம்முடைய வேட்பாளர், நமது மாவட்டச் செயலாளர், திரு.சேகர்பாபு அவர்களை நீங்களெல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அவர் மாவட்டச் செயலாளர் என்பதால் ஆறு தொகுதிகளுக்கும் அவர்தான் கண்ட்ரோல். ஆறு தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர் மட்டுமல்ல, ஆறு தொகுதிகளின் எம்.எல்.ஏ.-வும் அவர்தான். என்னுடைய கொளத்தூர் தொகுதியையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஏன் என்றால், அவர் தொகுதி மட்டுமல்ல. பக்கத்தில் இருக்கின்ற ஐந்து தொகுதிகளையும் அவர் சிறப்பாக கண்காணித்து, என்னென்ன குறைகள், என்னென்ன பிரச்சினைகள் என்பதையெல்லாம் சிந்தித்து அந்தப் பணிகளையெல்லாம் முறையாக செய்வார்.

ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா? ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தாம் பிள்ளை தானே வளரும்’ என்று. அதுபோல், சேகர்பாபு அவர்கள் எல்லா தொகுதிகளையும் தலையில் எடுத்துப் போட்டுக்கொண்டு அவர் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்து நீங்கள் மட்டுமல்ல, நானே பிரம்மித்துபோய் யோசிப்பதுண்டு. அப்படிப்பட்ட சேகர் பாபு அவர்களை நான் எப்போதும் சேகர் பாபு என்று அழைத்தது இல்லை. செயல் பாபு என்று தான் அழைப்பேன்.

அப்படிப்பட்ட செயல் வீரரை மீண்டும் துறைமுகம் தொகுதிக்கு உங்களிடம் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கும் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

நான் நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு, நேற்று இரவுதான் சென்னைக்கு வந்தேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றி ஆங்காங்கு இருக்கும் மக்களையெல்லாம் சந்தித்ததில், எனக்கு என்ன பதில் கிடைத்தது என்றால், நிச்சயமாக உறுதியாக வர இருக்கும் இந்த தேர்தலில் நம்முடைய திராவிட மாடல் 2.O ஆட்சி தான் அமையும் என்ற பதில்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் எல்லாம் வர இருக்கும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும்.

நடைபெற இருக்கும் இந்தத் தேர்தல்,நான் பல முறை சொன்னது போல், ஒவ்வொரு கூட்டத்திலும் பேசியது போல், தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் நடைபெறும் தேர்தல். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு நாம் செய்யும் பணிகளுக்யெல்லாம் இடையூறாக, நமக்கு வந்துசேர வேண்டிய நிதியைக் கூட கொடுக்காமல், நமக்க வர வேண்டிய திட்டங்களையெல்லாம் முடக்கிப்போட்டு அதையெல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மெட்ரோ ரயிலுக்கு பணம் கொடுக்கவில்லை. நம்முடைய பள்ளிக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக்காக வர வேண்டிய நிதியும் வரவில்லை. இப்படி எல்லாத் திட்டங்களையும் முடக்கிப்போட்டு, இன்றைக்கு ஒரு கொடூரமான பாசிச ஆட்சியை ஒன்றியத்தில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

ஆனால், இப்படிப்பட்ட பா.ஜ.க ஆட்சிக்கு நேற்று முன்தினம் ஒரு பெரிய அடி விழுந்தது. என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு ஓட்டெடுப்பு நடந்தது. தொகுதி மறுவரையறை என்றால் என்ன? மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளை சீரமைக்கும் பணி. ஏறக்குறைய 5 வருடங்களுக்கு முன்பே இந்தப் பிரச்சினை உருவானது.

நான் சென்ற வருடம் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து தென் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களையெல்லாம் அழைத்து ஒரு கூட்டம் நடத்தினேன். எதற்கு என்றால், தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்போகிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு செய்தால்தான் மக்கள்தொகை பெருக்கத்தை தடுக்க முடியும் என்று ஒன்றிய அரசு மாநில அரசுக்கும் அனுப்பினார்கள்.

நல்லதுதானே சொல்கிறார்கள், நியாயமானதுதானே சொல்கிறார்கள், அது நம்முடைய நாட்டிற்குதானே நல்லது என்று நாங்களும் முடிவு செய்து, தென் மாநிலங்களில் இருக்கும் பல முதலமைச்சர்களும் முடிவு செய்து அதில் சிறப்பு கவனத்தை செலுத்தினோம். அதனால், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக சிறப்பாக பிரச்சாரம் செய்து மக்கள் தொகையை ஓரளவுக்கு நாம் கட்டுப்படுத்தினோம். வட மாநிலங்களில் அதை கட்டுப்படுத்தாமல் அங்கு மக்கள் தொகை உயர்ந்துவிட்டது. அதனால், அங்கு எம்.பி.க்களின் தொகுதிகள் அதிகமாகிவிட்டன.

ஆனால், தமிழ்நாட்டிற்கும், தென் இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்களுக்கும் குறைந்துவிட்டது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் இது குறைவதால், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு வருடத்திற்கு முன்பே கூறிவிட்டோம். அதோடு, தென் மாநில முதலமைச்சர்களையும், பல்வேறு கட்சித் தலைவர்களையும் அழைத்து, சென்னையில் என் தலைமையில் கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் இது நியாயமானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஏற்கெனவே அம்மையார் இந்திராகாந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் இருந்தபோது இதை ஒரு 25 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்கள். அதேபோல், நீங்களும் ஒத்திவைக்க வேண்டும், இப்போது எடுக்கக் கூடாது என்று கூறி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால், அதற்கு அவர்கள் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை. எந்த பதிலும் நமக்கு சொல்லவில்லை. அதைப்பற்றி துளி கூட பேசவில்லை.

இப்போது, 23-ஆம் தேதி தேர்தல் நடக்கப்போகிறது. திடீரென்று நாடாளுமன்றத்தை கூட்டினார்கள். இப்போது மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், நாடாளுமன்றம் கூட்டுவதை தவறு என்று கூறி பல மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இப்படி பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்போது எங்கள் எம்.பி.க்கள் எல்லாம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைகளில் ஈடுபடவேண்டும். அதனால், தேர்தல் முடிந்தபிறகு வேண்டும் என்றால், இந்தக் கூட்டத்தை கூட்டிக் கொள்ளலாம் என்று எங்களது கருத்தினை சொன்னோம்.

இல்லை, முடியவே முடியாது என்று சொல்லி பிடிவாதமாக, சர்வாதிகாரதனமாக, எதேச்சாதிகாரமாக அந்த நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டினார்கள். எதற்கு என்றால், இந்த நாடாளுமன்றக் கூட்டம் இந்த நேரத்தில் கூட்டினால், நாமெல்லாம் சட்டமன்றத் தேர்தல் வேலையாக நம்முடைய வேலைகளை செய்யப் போய் விடுவோம். கூட்டதிற்கு செல்ல மாட்டோம். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு செல்ல மாட்டோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், நான் என்ன சொன்னேன் என்றால், நமக்கு தேர்தல் முக்கியம் இல்லை, பதவி முக்கியம் இல்லை, நம்முடைய மானம்தான், நம்முடைய உரிமைதான் முக்கியம். நமக்கென்று இருக்கும் உரிமைகள் முக்கியம். மாநில சுயாட்சிதான் முக்கியம் என்று கூறி எல்லா எம்.பி.க்களையும் யாரும் இங்கு இருக்கக் கூடாது, நாடாளுமன்றம் மூன்று நாட்கள் கூடப்போகிறது.

ஓட்டெடுப்பு நடக்கும், இந்த மூன்று நாட்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். ஒருவேலை அந்தக் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தோற்றாலும் பரவாயில்லை. நீங்கள் சென்று உங்களது உணர்வை தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி, நான் கட்டாயப்படுத்தி எல்லோரையும் அனுப்பி வைத்தேன்.

விவாதம் நடந்தது. மூன்று நாட்கள் அல்ல. இரண்டு நாட்கள் நடந்தது. ஓட்டெடுப்பும் நடந்தது. அந்த ஓட்டெடுப்பு நடந்தபோது அவர்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கூட்டணியில் இருக்கும் மாநிலத்தைச் சார்ந்த எம்.பி.க்களே அவர்களை எதிர்த்து ஓட்டுப் போட்டுவிட்டார்கள். அவர்கள் அகிலேஷ் யாதவை நம்பினார்கள். ஆனால், அகிலேஷ் யாதவ் முடியவே முடியாது, எங்கள் மாநிலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வட மாநிலங்கள், உத்திரப்பிரதேசத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும், மற்ற மாநிலங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று நமக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல், பீகார் மாநிலத்தில் இருக்கும் லாலு பிரசாத் கட்சியும் நமக்கு ஆதரவாக இருந்தார்கள்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் இருக்கும் கட்சியும் நமக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால், நாம் பெரும் வெற்றி பெற்றோம். நான் பெருமையாக சொல்கிறேன். இதுவரை மோடி ஆட்சிக்கு வந்து நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டுவந்து தோற்ற முதல் மசோதா இதுதான்.

எனவே, இப்போது கவுண்ட்-டவுன் ஆரம்பித்துவிட்டது. இனி தொடரப் போகிறது. இதுதான் இப்போது இருக்கும் நிலைமை. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட பாசிஸ எண்ணத்தோடு நடந்துகொண்டிருக்கும் ஆட்சி தான் மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி.

எனவே, இந்த ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு, அவர்களுடைய முதலமைச்சர்கள் இல்லாத மற்ற மாநிலங்களில் அவர்கள் ஆள முடியாத காரணத்தால் இந்த கொடுமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பல்வேறு கொடுமைகளை இழைக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு 40 பேரை நீங்கள் அனுப்பிவைத்ததால் தான் இந்த சதியை முறியடிக்க முடிந்தது.

அதுபோல், சட்டமன்றத்திலும் நம்முடைய பெரும்பான்மை பெரிதாக இருக்க வேண்டும். 200 என்று சொல்லி இருக்கிறேன். 200-ஐயும் தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி பெறக் கூடிய பட்டியலில் நம்முடைய துறைமுகம் தொகுதியும், சேகர்பாபுவும் இடம்பெற வேண்டும். அதற்காக தான் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். உதயசூரியனுக்கு நீங்கள் எல்லாம் ஆதரவு தந்து நம்முடைய சேகர்பாபு அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.

நன்றி. நன்றி. நன்றி. வணக்கம்.

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

ராயபுரம் :

நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? எதற்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? (மக்கள் : உதயசூரியன்). நன்றி!

இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய சுற்றுப்பயணத்தை செய்து முடித்துவிட்டு, நேற்று நான் சென்னைக்கு வந்தேன். வந்த பின்னர், தென்சென்னை பகுதியில் சில தொகுதிகளிலும், இன்று மாலை வடசென்னை பகுதியில் சில தொகுதிகளிலும் மக்களைச் சந்திக்கும் சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தொகுதியில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக நம்முடைய அருமைத் தம்பி டாக்டர் சுபேர்கான் அவர்கள் உங்களிடத்தில் வேட்பாளராக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை; நம்முடைய நெஞ்சமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய அருமை அண்ணன் ரகுமான்கான் அவர்களின் அருமைப் புதல்வன்தான் தம்பி சுபேர்கான். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

நான் சென்ற இடமெல்லாம் அடுத்து திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் வரும் என்று மக்கள் அனைவரும் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். அந்த உறுதிமொழியை நீங்களும் எனக்கு கொடுக்க வேண்டும். (மக்கள் : உதயசூரியனுக்குதான் வாக்களிப்போம்!).

இந்த உறுதியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு. உத்வேகத்தோடு, நீங்கள் நம்முடைய சுபேர்கான் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

நான் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கும் பிரச்சாரத்தில், ஒன்றை அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறேன்.

வரும் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பது, டெல்லிக்கும் - தமிழ்நாட்டுக்கும் நடைபெறும் தேர்தல்.

எதற்காக அவ்வாறு சொல்கிறேன் என்றால், இன்றைக்கு டெல்லியில் இருக்கும் மோடி தலைமையில், அமித்ஷா முன்னிலை வகிக்கும் பா.ஜ.க கட்சிதான் அ.தி.மு.க. என்ற முகமூடி அணிந்து கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள்.

ஏற்கனவே அ.தி.மு.க.வின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்தான், மீண்டும் இப்போது அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார்.

அப்போது அவர் தோற்றவுடன் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியும். “பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நான் தோற்றேன். சிங்கம் போன்று இருந்தேன்; இப்போது அசிங்கமாகி விட்டேன். நாங்கள் செய்த பாவம் அவர்களுடன் சேர்ந்ததுதான். அதனால், அந்த சவகாசமே இனிமேல் வேண்டாம்” என்றெல்லாம் சொன்னார். ஆனால், மீண்டும் அதே துணையுடன்தான், ஆதரவுடன்தான் இன்றைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க. முகமூடி போட்டு நிறுத்தியிருக்கிறார்களே தவிர, அவர் பா.ஜ.க. சார்பில்தான் நிற்கிறார். அதை மறந்துவிடாதீர்கள்.

ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, தமிழ்நாடு உள்ளிட்ட அவர்கள் ஆட்சி செய்யாத மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் எல்லாம், பல்வேறு துரோகங்களை செய்து கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டு பிள்ளைகள் படிப்பதற்கு வந்து சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டால், நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அண்ணா சொன்ன இருமொழிக் கொள்கையை கைவிட வேண்டும்; நீங்கள் இந்தி படிக்க வேண்டும்; சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினார்கள்.

அதற்கு நான் சொன்னேன், நாங்கள் அண்ணா சொன்ன இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று திட்டவட்டமாக சட்டமன்றத்திலும் சொன்னேன், வெளியிலும் சொன்னேன்.

அவர்கள் உடனே, அப்போது நாங்கள் தர வேண்டிய 2,152 கோடி ரூபாயை தர முடியாது என்று கூறினார்கள்.

உடனே நான் சொன்னேன், 2 ஆயிரம் அல்ல; 10 ஆயிரம் கோடியாக இருந்தாலும், நீங்கள் தர வேண்டாம். நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். இதுவரைக்கும் தரவில்லை.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு சென்னையில் பல இடங்களில் மெட்ரோ வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மெட்ரோவை நம்முடைய ஆட்சியில்தான், நான் துணை முதலமைச்சராக இருந்தபோதுதான், முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், என்னை ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி, அங்கு நிதியைப் பெற்று, அதன் மூலமாக அந்தப் பணியை நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பணிகளைச் செய்தார்கள். அந்த அடிப்படையில்தான் மெட்ரோ பணி தொடங்கியது.

இன்றைக்கு ஏறக்குறைய 60, 70 சதவீதம் பணிகள் முடிந்திருக்கின்றன. மீதம் இருக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்றால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், ஒதுக்க முடியாது என்று அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.

அதேபோன்று, கோவை – மதுரை மற்றும் திருச்சியில் மெட்ரோ திட்டம் வர வேண்டும் என்று கேட்டபோது, அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள்.

எனவே, தமிழ்நாட்டுக்கு துரோகத்தை இழைக்கும் ஒரு ஆட்சிதான், இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கிறது. அந்த ஆட்சி, இன்றைக்கு அ.தி.மு.க. என்ற முகமூடி அணிந்து கொண்டு, நம்முடைய தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலை சந்திக்கிறது.

அதனால்தான், இது தமிழ்நாட்டுக்கும் - டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.

எனவே, இதில் நீங்கள் தேர்ந்தெடுப்பது தமிழ்நாடா? டெல்லியா? (மக்கள் : தமிழ்நாடு)

அந்த முடிவோடு 23-ஆம் தேதி நீங்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்கு நம்முடைய வேட்பாளர் அருமைத் தம்பி டாக்டர் சுபேர்கான் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து, மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

பெரம்பூர் :

சென்னையில் இருக்கும் எல்லாப் பகுதிகளும் எனக்கு அத்துப்படி. நான் மேயராக இருந்து, என்னென்ன பணிகள் எல்லாம் செய்தேன் என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என்று ஏராளம். இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று எத்தனையோ மாநகராட்சிகள் இருக்கின்றன. மாநகராட்சி சார்பாக யாரும் பாலம் கட்டியதாக எங்கும் வரலாறு கிடையாது.

ஆனால், நான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் ஏறக்குறைய 10 மேம்பாலங்களை கட்டிய பெருமை எனக்கு உண்டு. உங்களுக்கு, உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான். அந்தப் பாலங்கள் கட்டியதால் தான் இன்றைக்கு ஓரளவுக்கு போக்குவரத்து சீராக இருக்கிறது.

அதனால்தான், நாம் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நான் முதலமைச்சராக வந்தபிறகு இப்போது, மாநகராட்சிகள் சார்பில், சுமார் 19 பாலங்கள், சிறுபாலங்கள் புதிதாக கட்டியிருக்கிறோம். இன்னும் பல பாலங்கள் கட்டிக் கொண்டு வருகிறோம். மெட்ரோ இரயில் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதெல்லாம் செய்திருக்கிறோம் என்ற உரிமையோடு இங்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றிவிட்டு நேற்றுதான் சென்னைக்கு வந்தேன். வந்த உடனே, இன்றைக்கு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நேற்று தென் சென்னைக்கு சென்றேன். இன்றைக்கு வட சென்னைப் பகுதியில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

அதிகமாக உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது உங்களோடு இருந்து உங்களுடன் பணியாற்றும் உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் தொண்டனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக பணியாற்றும் ஒருவன் வேண்டுமா? எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை நடித்துக்கொண்டுவரும் அவர் வேண்டுமா? என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். அதுதான் நான் உங்களை கேட்கும் ஒரே கேள்வி. வேறு ஒன்றும் வேண்டாம்.

நான் யாரையும் அரசியலில் தாக்கியும் பேச விரும்பவில்லை. நான் யாரையும் எதிர்த்து மரியாதை இல்லாமல், தரக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. அதனால், நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே, மேயராக இருந்து நான் ஆற்றியப் பணிகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்போது, முதலமைச்சராக இருந்த இந்த 5 ஆண்டுகளில் ஆற்றிய பணிகளும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களின் 90 சதவீதப் பணிகளை நாம் முடித்திருக்கிறோம். இன்னும் 10 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. நான் இல்லையென்று மறுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், ஒன்றிய அரசு நிதியும், அனுமதியும் தர மறுக்கிறது.

நான் உங்களிடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இப்போது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் சரியாக உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு வருகிறது அல்லவா? இப்போது மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்தால் அதை உயர்த்தி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்கப் போகிறோம்.

அதேபோல், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம்- பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் நம்முடைய வீட்டுப் பெண்கள், ஆண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கி வருகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதையும் உயர்த்தி ஆயிரத்து 500 ஆக கொடுக்கப் போகிறோம்.

அடுத்து, உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த திட்டம். இல்லத்தரசி திட்டம். இந்த திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கப்போகிறோம். இதை வைத்து, நீங்கள் மகளிர் என்னப் பொருள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த பொருள்களான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்‌ஷன் ஸ்டவ் என்று என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எங்கே வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கெனவே, கலைஞர் ஆட்சியில் இருந்தபோது சொத்தில் சம உரிமை கொடுத்தார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை கொடுத்தார். விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டத்தை கொண்டு வந்தார். மகளிர் சுய உதவிக் குழு கொண்டு வந்தார்.

இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கலைஞருடைய மகன், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், ஆட்டோ வாங்க கடன் உதவிகள் என பெண்களுக்கான பல திட்டங்களை நாம் அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அனுதினமும் கடுமையான வேலைகளை செய்யும் பெண்களுக்கு உரிமையைத் தர வேண்டும் என்பதற்காக தான் இந்த உரிமைத் தொகையை நான் அறிமுகப் படுத்தினேன். இதுதான் உண்மை.

இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். அதேபோல், பெண்களுக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. எனவே, இந்த ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் வலு சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும். அதற்காகதான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.

ஆர்.டி.சேகர் – ஏற்கெனவே இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து அவர் எப்படியெல்லாம் பணியாற்றியிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடிய ஒரு சிறந்த செயல் விரர், ஒரு நல்ல தொண்டன், எளிய ஒரு எம்.எல்.ஏ-வாக இருந்து உங்களுடன் பணியாற்றக் கூடியவர். நீங்கள் அவரை தேர்ந்தெடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தர வேண்டும் என்று உங்களின் பாத மலர்களையெல்லாம் தொட்டுப் பணிவோடு கேட்டு நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!

ஆர்.கே.நகர் :

உங்களை எல்லாம் சந்தித்து உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். நம்முடைய வெற்றி வேட்பாளர் எபினேசர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ,பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

நான் சென்னையில் பிறந்து, வளர்ந்து, எம்.எல்.ஏ.-வாக, மேயராக - துணை முதலமைச்சராக - இன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்று, பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், என்னைப் பொருத்தவரையில், நான் சென்னைக்கு மேயராக இருந்து ஆற்றிய பணிதான் எனக்கு மிக மிக முக்கியமான பணி. ஏனென்றால், நான் வருவதற்கு முன்பு, சென்னையில் மேயர் பொறுப்பு என்றால் ஒரு வருடம்தான். அந்த ஒரு வருடம் மேயராக இருப்பவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றால், கவுன்சிலர்களுக்கு மட்டும் தேர்தல் நடந்து, அவர்கள் சேர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், 1996 தி.மு.க. ஆட்சி வந்தபோது, ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சித் தேர்தலை கலைஞர்தான் நடத்தினார். அவ்வாறு நடத்தியபோது மேயரையும் மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை போட்டு நிறைவேற்றினார். அவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான்தான் பொறுப்பேற்றேன். கிட்டதட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்து மொத்தம் 40 லட்சம் வாக்குகள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான் 5 ஆண்டுகள் பணியாற்றினேன்.

அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வந்த போதும் மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் நான்தான் வெற்றி பெற்றேன். நான் மேயராக இருந்த ஐந்தாண்டு காலத்தில் நன்றாக பணியாற்றி இருக்கிறேன் என்ற நம்பிக்கை உணர்வோடு இரண்டாவது முறையும் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

அவ்வாறு இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டது ஜெயலலிதாவிற்கு பிடிக்கவில்லை. அப்போது நான் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாகவும் இருந்தேன்.

அந்த அம்மா என்ன செய்தார்கள் என்றால், எனக்காகவே ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். என்னவென்றால், யாரும் இரண்டு பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்று. ஏதாவது ஒரு பொறுப்பில்தான் இருக்க வேண்டும் என்று சட்டத்தை போட்டார்கள்.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், நான் மேயராக இருந்து எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, மேயராக இருந்து பயன் இல்லை என்று மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்.எல்.ஏ.வாக மட்டும் இருந்தேன். எட்டு ஆண்டுகள் நான் மேயராக இருந்தேன்.

ஜெயலலிதா ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் மெட்டும் மேயராக இல்லை. அந்த எட்டு ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் இருந்த 1996 முதல் 2001 வரையில், என்னென்ன பணிகளை எல்லாம் செய்தேன் என்று உங்களுக்கு தெரியும்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பத்து பாலங்களை கட்டினோம். வேறு எந்த மாநகராட்சியும் அவ்வாறு கட்டியதில்லை. முதல் முதலில் நான்தான் கட்டினேன். பள்ளிகளை மேம்படுத்தினோம். பள்ளிகளுக்கு கணினிகள் கொண்டு வந்தோம். LKG, UKG-ஐ அறிமுகப்படுத்தினோம். மாநகராட்சித் திடல்களை சரி செய்தோம். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தினோம். இவ்வாறு ஐந்து வருடங்கள் சிறப்பாக பணியாற்றினோம்.

அடுத்து, இப்போது என் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்த வட சென்னை பகுதிக்கு ஏதாவது ஒரு மிகப்பெரிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தோம். காரணம், தென்சென்னை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வடசென்னை நெருக்கடியாக இருந்ததால் மேம்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது.

அதற்காக ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்து, முதற்கட்டமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்த ஆர்.கே. நகர் பகுதிக்கு மூன்று பாலங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, திருமண மண்டபங்கள், பள்ளி மேம்பாடுகள், விளையாட்டு மைதானங்கள் என பல பணிகளை செய்து இருக்கிறோம். இதன்மூலம், தென்சென்னையோடு போட்டு போடும் அளவிற்கு வடசென்னை வளர்ந்திருக்கிறது.

இதைப் பார்த்து, இப்போது தேர்தல் அறிக்கையில், வடசென்னை வளர்ச்சி திட்டம் போன்று, ஒவ்வொரு மண்டலத்திற்கும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

எனவே, தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை சொன்னோமோ, அதையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், உலகம் உங்கள் கையில், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள்.

இதுவரைக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, பட்டா வழங்கிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

எனவே, நான் உரிமையோடு உங்களிடத்தில் கேட்க வந்திருக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, நம்முடைய எபினேசர் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்,

banner

Related Stories

Related Stories