மு.க.ஸ்டாலின்

தஞ்சை முதல் தூத்துக்குடி வரை.. முதலமைச்சரின் 4-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் விவரம் உள்ளே!

தஞ்சை முதல் தூத்துக்குடி வரை.. முதலமைச்சரின் 4-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதியோடு நிறைவடைந்த சூழலில், தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகவும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் களமிறங்குகிறது.

மேலும் 59 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று (ஏப்.10) முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

=> ஏப்ரல் 10, மாலை 5 மணிக்கு...

தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...,

திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

=> ஏப்ரல் 11, மாலை 4 மணிக்கு...

புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...

கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

அதே நாள் மாலை 7 மணிக்கு... திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...

காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

=> ஏப்ரல் 12, மாலை 4 மணிக்கு...

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்....

பரமக்குடி, திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

அதே நாள் மாலை 7 மணிக்கு... தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...

தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

banner

Related Stories

Related Stories