மு.க.ஸ்டாலின்

மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது போர் மூண்டுள்ள நிலையில், இரு நாடுகளும் தாக்கி கொள்ளும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ள நிலையில், ஈரானின் பல்வேறு பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line

இதன் காரணமாக அந்தந்த நாடுகள், தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க களத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் இருந்து அந்த இஸ்ரேல் - ஈரானுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாடுகளில் வாழும் தமிழர்களை காப்பாற்றும் முனைப்பில் உதவி எண்ணை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line

இதுகுறித்து வெளியான அறிவிப்பு வருமாறு :-

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள  ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நான், தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது

மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line

தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையை கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினை தொடர்புகொள்ளலாம்.

மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் :

011-24193300 (Land line)

92895 16712 (Mobile Number with Whatsapp)

அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள் – 1800 309 3793

வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)

தொடர்புக்கு – +91 80 6900 9901

banner

Related Stories

Related Stories