தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.6.2025) சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,
சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டடம் உள்ளிட்ட 1,244 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 200 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் 225 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 204 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,01,203 பயனாளிகளுக்கு வழங்கினார்.
=> சேலம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில்,
அன்னதானப்பட்டி, மொத்தையனூர், மோரூர், இனாம்பைரோஜி, கடத்தூர், கல்லாநத்தம், திருமனூர், சந்திரப்பிள்ளைவலசு ஆகிய இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், வடுகப்பட்டி – ஒக்கிலிப்பட்டி, கோலாத்துக்கோம்பை, உமையாள்புரம் ஆகிய இடங்களில் துணை சுகாதார நிலையங்கள், ஆலடிப்பட்டி, குன்னூர், ஆரியபாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெள்ளாளக்குண்டம், நாகியம்பட்டி, கூடமலை ஆகிய இடங்களில் நூலகக் கட்டடங்கள், ஈச்சம்பட்டி, காஞ்சேரி, செம்மண்கூடல், செம்மண்கூடல், பச்சனம்பட்டி, துவரகாபுரி, தாண்டானூர், சின்னகிருஷ்ணாபுரம், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், மேட்டுடையார்பாளையம், ஏ.கரடிப்பட்டி, கொட்டவாடி, பெரியகிருஷ்ணாபுரம், நாவக்குறிச்சி, புனல்வாசல், தியாகனூர் புதூர், வெள்ளார், புனாபுரம், பண்ணவாடி, வீரக்கல், தோரமங்கலம், ஆவடத்தூர், அதிகாரிப்பட்டி, மாட்டுக்காரன்புதூர், ஊர்கவுண்டன் கோட்டை, குதிரைக்காரன் புதூர், மோரூர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி கட்டடங்கள், பைத்தூர், அப்பமசமுத்திரம், தம்மநாயக்கன்பட்டி, ஆரியபாளையம், செலவடை, தெசவிளக்கு, வனிச்சம்பட்டி, தோப்பூர் ஆகிய இடங்களில் உணவு தானியக் கிடங்குகள், பச்சனம்பட்டி, வேப்பிலைப்பட்டி, வண்ணாத்திக்குட்டை, கருமந்துறை, தேவராயம்பாளையம், கனககிரி, இருகாளூர், பண்ணைகிணத்தூர் ஆகிய இடங்களில் நியாயவிலைக் கடைகள், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கதிரடிக்கும் தளங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுபாலங்கள், மயானங்களில் காத்திருப்பு கொட்டகைகள் என 49 கோடியே 95 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் 169 முடிவுற்றப் பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கொங்கணாபுரம், நங்கவள்ளி, கொளத்தூர் பொன்நகர், ஆரியபாளையம் ஆகிய இடங்களில்
2 கோடி ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள், மேச்சேரி வெள்ளார், ஒக்கிலிப்பட்டி, மாரமங்கலத்துப்பட்டி, கோலாத்துக்கோம்பை, நாவலூர், கொண்டயம்பள்ளி, நடுவலூர், உமையாள்புரம், பெரியபக்காளம், ஓடைக்காட்டுபுதூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையங்கள், அரசிராமணி, குன்னூர், அறநூத்துமலை ஆகிய இடங்களில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொன்நகரில் 30 இலட்சம் ரூபாய் செலவில் நகர் நலவாழ்வு மையம், பனமரத்துப்பட்டியில் 60 இலட்சம் ரூபாய் செலவில் புற நோயாளிகள் பிரிவு;
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 கோடியே 52 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவமனை கட்டடம், புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டடம் மற்றும் உபகரணங்கள், முழு உடல் பரிசோதனை சி.டி.ஸ்கேன் உபகரணம், நிர்வாக கட்டடத்தின் முதல் தளத்தில் திறன் மையம்; வாழப்பாடியில் 3 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 2 கோடியே 17 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய சி.டி.ஸ்கேன் இயந்திரம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருவாக்கவுண்டனூர் முல்லை நகர், பள்ளப்பட்டி அபிராமி கார்டன், அழகாபுரம் புதூர் ஆகிய இடங்களில் 90 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியூரில் 60 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம், களரம்பட்டி, காடையாம்பட்டி, ஆத்தூர், வீரகனூர், இராசிக்கவுண்டனூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 4 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம், ஆத்தூர் நகராட்சியில் 76 இலட்சம் ரூபாய் செலவில் பழக்கடைகள், ஆத்தூரில் 22 இலட்சம் ரூபாய் செலவில் நூலகத்திற்கு கூடுதல் கட்டடம், ஆட்டையாம்பட்டி – சந்தைப்பேட்டை, பேளூர், ஏத்தாப்பூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தைகள்;
கூட்டுறவுத் துறை சார்பில், கடம்பூரில் 30 இலட்சம் ரூபாய் செலவில் வேளாண் அங்காடி, தேவண்ணகவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 13 இலட்சம் ரூபாய் செலவிலும், பெரியகவுண்டாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 30 இலட்சம் ரூபாய் செலவிலும் வேளாண் வணிக வளாகங்கள்;
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், காடையாம்பட்டி மற்றும் எடப்பாடியில் 40 இலட்சம் ரூபாய் செலவில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் – வட்டார வேளாண் இயந்திரங்கள் வாடகை மையக் கூடங்கள்;
நீர்வளத் துறை சார்பில், கிருஷ்ணாபுரம் சுவேதா நதியின் குறுக்கே
3 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி வரத்து வாய்க்கால் 8 கோடியே 91 இலட்சத்து
3 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சிக்கனம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 29 இலட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகம், மரவனேரியில் 7 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 180 ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி, குரால்நத்தத்தில் 44 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம்;
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், சங்ககிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 5 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தலைவாசலில் 58 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகக் கட்டடம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 42 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள்;
பால்வளத் துறை சார்பில், தளவாய்ப்பட்டியில் 52 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 7 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் பயிற்சியாளர்கள் தங்கும் விடுதி கட்டடம்;
என மொத்தம், 200 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் 225 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
=> சேலம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள், சமுதாய சுகாதார வளாகங்கள், பள்ளிகளில் கழிவறைகள், பேவர் பிளாக் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள், சாலைப் பணிகள், கால்வாய் மற்றும் வடிகால் பணிகள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், பொது விநியோக கடைகள், மயானங்களில் தண்ணீர் வசதியுடன் காத்திருப்பு கொட்டகைகள் மற்றும் சுற்றுச்சுவர்கள், ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் இணைப்பு வசதிகள், கொட்டகையுடன் கூடிய கதிரடிக்கும் தளங்கள், கொட்டகையுடன் கூடிய களஞ்சிய தளங்கள், மயானத்தில் தகனக்கூடங்கள், சிறு பாலம், என 35 கோடியே 48 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 442 புதிய பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கன்னந்தேரி, முள்ளிசெட்டிப்பட்டி, ஓலைப்பட்டி, செம்மணூர், பெரியதண்டா, கிழக்கு பாவடி, உடையாப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னனூர், எ.குமாரபாளையம், புதுப்பாளையம், சோமம்பட்டி, வீரகனூர் ஆகிய இடங்களில் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள், சேடப்பட்டி, ஆரியபாளையம், பேளூர், செந்தாரப்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள், தாரமங்கலம், வடுகப்பட்டி, தலைவாசல், வாழவந்தி ஆகிய இடங்களில் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகுகள் கட்டும் பணிகள், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகிய இடங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள்;
ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மகப்பேறு கட்டடம், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் சமையலறை கட்டடம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 11 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், செட்டிசாவடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் அளவிற்கு தீர்வாக்கம் செய்யும் திறன் கொண்ட ஆலையை பொது மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நிறுவும் பணிகள், செட்டிசாவடியில் 57 கோடியே 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி எரிவாயு தயாரிக்கும் ஆலையை நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை தீர்வாக்கம் செய்யும் திறன் கொண்ட ஆலையை நிறுவும் பணிகள், சேலம் மாநகராட்சியின் நாட்பட்ட திடக்கழிவுகளை 7 கோடியே 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செட்டிச்சாவடி சேர்ப்புத் தளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணிகள், ஜலகண்டாபுரம், கருப்பூர் மற்றும் வாழப்பாடி ஆகிய பேரூராட்சிகளில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள், வாழப்பாடி பேரூராட்சியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம், கொங்கணாபுரம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், அரசிராமணி பேரூராட்சி சரபங்கா ஆற்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம், எடப்பாடி – கல்வடங்கம் மெயின்ரோடு முதல் நல்லமுத்தான்காடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முதல் காவேரிப்பட்டி வரை, எடப்பாடி – குமாரபாளையம் மெயின்ரோடு முதல் பொன்னுசமுத்திரம் ஏரி கழுங்கு வரை 2 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலைகள்;
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், சேலம் வேளாண்மைப் பொறியியல் துறை வளாகத்தில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில்,
சேலம் நகரில் 8 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதிக் கட்டடம், கரியக்கோவில் வளவில் 20 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகள், தேக்கம்பட்டு, குன்னூர், பகடுப்பட்டு, புதூர், சூலாங்குறிச்சி, பகடுப்பட்டு, ஓடைக்காட்டுபுதூர், குன்னூர், கருமந்துறை, கரியகோவில்வளவு, அருநூத்துமலை ஆகிய இடங்களில் உள்ள பழங்குடியினர் நல துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 3 கோடியே 78 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைக் கட்டடங்கள், புளியங்குறிச்சியில் 77 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம அறிவுசார் மையம், தென்மாங்குடிபாளையம், குப்பனூர், அரங்கம் ஆகிய இடங்களில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், கெங்கவல்லி – அணையம்பட்டி பகுதியில் 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதிகள்;
பள்ளிக்கல்வித் துறை சார்பில் சேலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டடம்;
பதிவுத் துறை சார்பில், மேட்டூரில் 2 கோடியே 66 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்; நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேலம் சந்தை மற்றும் சேலம் நகரம் இரயில் நிலையங்களுக்கு இடையே 78 கோடியே 65 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, கொண்டலாம்பட்டியில் 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சந்தை விரிவாக்கப் பணிகள்;
பொதுப்பணித் துறை சார்பில், ஏற்காட்டில் பொதுப்பணித்துறைக்கான 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வு மாளிகை; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஆத்தூரில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம்;
என மொத்தம், 1,244 கோடியே 27 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 509 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
=> சேலம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :
வருவாய்த் துறை சார்பில் 35,273 பயனாளிகளுக்கு பட்டா, 43,767 பயனாளிகளுக்கு நகர நிலவரி திட்டத்தில் பட்டா, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 84 பயனாளிகளுக்கு நிதியுதவி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 19 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை,
மகளிர் திட்டத்தின் கீழ் 2500 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், கூட்டுறவுத் துறை சார்பில் 8352 பயனாளிக்ளுக்கு பயிர் கடன்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 814 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்பேசிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், ஆழ்துளை கிணறு மற்றும் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டங்களின் கீழ் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்
455 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 5000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 2380 பயனாளிகளுக்கு கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, இயற்கை மற்றும் விபத்து மரண நிதியுதவி, ஓய்வுதிய நிதியுதவி, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 10 பயனாளிகளுக்கு கல்வி கடனுதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 135 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், சலவை இயந்திரங்கள், மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்
30 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில் 40 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினைத் திட்ட கடனுதவிகள், தாட்கோ சார்பில் 551 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி அபியுதாய் யோஜ்னா, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம், நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;
பால்வளத் துறை சார்பில் 870 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன்கள், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு இணை மானியம், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 900 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,01,203 பயனாளிகளுக்கு 204 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.