தமிழ்நாடு

நயினாரின் விமர்சனம்.. பழனிசாமியின் குற்றச்சாட்டு... - நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

நயினாரின் விமர்சனம்.. பழனிசாமியின் குற்றச்சாட்டு... - நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கீழ்பாக்கத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆய்வு செய்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியதாவது, :-

ஏகாம்பரநாதன் கோயிலுக்கு சொந்தமான இந்த பள்ளியை தனியார் அறக்கட்டளை 100 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில், பொருளாதார பிரச்சினையால் திருக்கோயிலிடம் ஒப்படைத்து விட்டார்கள். பள்ளிக்குத் தேவையான 32 கூடுதல் வகுப்பறைகள் ரூ.11 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக இந்த பள்ளி அமையும்.

பள்ளி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பு சுமார் 700 மாணவர்கள் படித்து வந்தார்கள். தற்பொழுது 1,170 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கூடுதல் வகுப்பறைகள் கட்டி வரும் நிலையில், அடுத்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கோயில் சொத்துகளை மீட்கும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.7 ஆயிரத்து 800 கோடியை நெருங்கி இருக்கிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு தாக்கத்தின் காரணமாக, பாஜக தற்போது ஓடி ஓடி மதுரையில் மாநாடு நடத்துகிறது. மதம் சார்ந்து மக்களை பிரிப்பது எங்கள் பணி அல்ல. மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த சக்திகள் 2026 இல் புறக்கணிக்கப்படுவார்கள். விரட்டியடிக்கப்படுவார்கள்." என்றார்.

நயினாரின் விமர்சனம்.. பழனிசாமியின் குற்றச்சாட்டு... - நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

=> ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு...

"புரிதல் இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி. அவர் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். அவர் ராமேஸ்வரத்திற்கு சென்று பார்த்து அங்கு இருக்கும் நிலையை அறிந்த பிறகு அறிக்கை கொடுக்க வேண்டும். அப்பொழுது பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். காற்று வாக்கில் வருவதை உள்வாங்கிக் கொண்டு அறிக்கையாக வெளியிடுகிறார் பழனிசாமி. அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எல்லா கோயில்களிலும் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்க் கடவுள் முருகன் தமிழக முதலமைச்சரை விரும்புகிறார். ஏனென்றால் இதுவரை 117 முருகன் திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது போன்று எந்த ஆட்சியிலாவது பெருமை சேர்த்ததுண்டா? 2026 ஆம் ஆண்டு முருகன் கையில் இருக்கும் வேல் திமுகவுக்கு வெற்றியைக் கொடுக்கும்." என்றார்.

=> திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியோடு பேசி வருவதாக நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு...

"நயினாரின் பயம் வெளிப்படையாக தெரிகிறது. அனைவரையும் வா வா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார். புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மேல் ஏறி படுத்துக் கொள்ளுங்கள் என்ற பழமொழி நயினாருக்கு பொருந்தும்.

கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணியை தேடி திமுக தலைமையில் அமைந்துள்ள இந்த கட்டுமானம் எங்கும் செல்லவில்லை. தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் 'கூட்டணி கூட்டணி...' என்று பறந்து கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது." என்றார்.

நயினாரின் விமர்சனம்.. பழனிசாமியின் குற்றச்சாட்டு... - நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமிக்கு மேடையே கிடைப்பதில்லை. அதனால் யாரைப் பார்த்தாலும் நாடகமா என்று கேட்கிறார்.

வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5:30 மணிக்கு, திருமணம் செய்து கொள்ள, மணமக்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு, 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகம் மணமக்கள் வரிசையில் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி வரைமுறைப் படுத்தப்படவில்லை.

இதனால் திருமணம் செய்ய இடம் பிடிப்பதில், மணமக்களின் உறவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளியபடி தாக்கிக் கொண்டதால், சிறிது நேரம் பதற்றம் உருவானது. இதுகுறித்து இணை ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் திருமண நிகழ்ச்சிக்காக கூடுதல் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. வாழப்பாடி கோயிலும் உரிய முறையில் வரைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

இறுதியாக சென்னை மாநகராட்சி சார்பில் அயனாவரத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய நவீன மகப்பேறு மருத்துவமனைக்கான பூமி பூஜையை அமைச்ச சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அயனாவரம், பெரியார் சாலையில் பழுதடைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் முதற்கட்டமாக 66 பயனாளிகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை மற்றும் கருணைத் தொகையை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories