மு.க.ஸ்டாலின்

“இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

“இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இஸ்லாமிய திருநாள்களில் ஒன்றான பக்ரீத் திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு,

“தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

“இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.

இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக - கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர,

சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories