தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை , ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன் , டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன்,தி.வேல்முருகன், உள்ளிட்டோரும், அவர்களை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோரும் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதனை ஏற்று, “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியலில் கல்வி கண் திறந்த பெருமை காமராசர் அவர்களுக்கு உண்டு எனில், எண்ணற்ற உயர்கல்வி நிலையங்களை கட்டமைத்ததில், கலைஞருக்கு பெரும் பங்குண்டு என்பதை சுட்டிக்காட்டும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளவை, பின்வருமாறு,
கும்பகோணத்தில் அமைகிறது ‘கலைஞர் பல்கலைக்கழகம்’!
போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம்! நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம்!
இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகளில் சில:
பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம்!
ஆரம்பப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் நியமனம்!
வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை என உண்மையான சத்துணவு!
தமிழில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!
முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை!
தேர்வு முறையில் செமஸ்டர் முறை அறிமுகம்!
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு!
இலவச பஸ் பாஸ்!
இந்தியாவிலேயே முதன்முதலாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினிப் பாடம் அறிமுகம்!
பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீக்கம்!
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள்!
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்குத் தனித்தனி துறைகள் மற்றும் அமைச்சகங்கள்!
அண்ணா நூற்றாண்டு நூலகம்!
உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை உருவாக்கி,
கோவை பாரதியார் பல்கலைக்கழகம்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்!
கோவை வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்!
சென்னை அண்ணா தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம்!
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்!
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்!
ஒன்றிய அரசை வலியுறுத்தி,
திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்!
திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்!
- என நீளும் இந்தப் பட்டியலால் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் உயர்வில் என்றும் வாழ்வார்!