நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.727 கோடி மதிப்பில் 1703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15,634 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நீலகிரி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று (5.4.2025) கோயம்புத்தூர் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூரிலிருந்து சாலை மார்க்கமாக உதகை செல்லும் வழியில், வழிநெடுகிலும் மாணவ, மாணவியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்கள், சிறுவர், சிறுமியர்களிடம் உரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, குஞ்சப்பனையில் கடந்த மழையின்போது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவு தளம் திடப்படுத்தும் பணிகளையும் மற்றும் கேபியான் சுவர் (GABION WALL) அமைக்கும் பணிகளையும் முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவர்களுடன் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (6.4.2025) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், 494 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் 1703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூபாய் 130 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 102 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பயனாளிகளுக்கு வழங்கினார்.
=> நீலகிரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள் :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்களுக்காக 200 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 6 ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள்;
நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு அரசு மருத்துவமனையில் 8.60 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் காத்திருப்புக் கூடம், அவசரகால ஊர்தி மற்றும் வாகன நிறுத்தும் இடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டடம்; 1.50 கோடி ரூபாய் செலவில் கேத்தி, தங்காடு ஓரநள்ளி மற்றும் நெலாக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் வட்டார சுகாதார அலகு; அணிக்கொரை, தாவெணை, நஞ்சநாடு, ஹாப்பிவேலி, அய்யன் கொல்லி, செரச்சால், நெல்லியாளம், கோட்டப்பாடி, தேவாலா, நந்தட்டி, நடுவட்டம், அனுமாபுரம், டி.ஆர். பஜார் மற்றும் ஏலமன்னா ஆகிய பதினான்கு இடங்களில் 5.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்; உதகமண்டலத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், என மொத்தம் 370.42 கோடி ரூபாய் செலவிலான மருத்துவத் துறை கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கோத்தகிரியில் 5 கோடியே 20 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு அலுவலர்களுக்கான 16 குடியிருப்புக் கட்டடங்கள், உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு 63 இலட்சம் ரூபாய் செலவில் இ-சேவை மையங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறைகள் மற்றும் கணினி அறைகளுக்கான கூடுதல் கட்டடங்கள் என மொத்தம் 5 கோடியே 83 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;
வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் சார்பில் கூடலூர், உப்பட்டி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் விடுதிக் கட்டடம்;
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலகத் துறை சார்பில் குன்னூர் வட்டாரம் - கேத்தி மற்றும் உதகமண்டலம் வட்டாரம் – தும்மனட்டி ஆகிய இடங்களில் 74 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கிளை நூலகக் கட்டடங்கள், உதகமண்டலம் வட்டாரம் – கப்பச்சியில் 22 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கூடலூர் வாழைத்தோட்டம், கோத்தகிரி ஈளாடா, பந்தலூர் கோழிச்சால் ஆகிய இடங்களில்
33 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 3 புதிய நியாய விலைக் கடைகள், கோத்தகிரி சுள்ளிக்கூடுவில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை, உதகை போர்த்தியாடா மற்றும் குன்னூர் ஆருவ ஒசஹட்டி ஆகிய இடங்களில் புதிய நடமாடும் நியாய விலைக் கடைகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் உதகை வட்டம், நஞ்சநாடு-2 கிராமம், பகல்கோடு மந்துவில் தோடர் பழங்குடியின மக்களுக்காக 50 இலட்சம் ரூபாய் செலவில் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கக் கட்டடம், கூட்டுறவு சங்கத்திற்கான வாகனம் மற்றும் தேவையான உபகரணங்கள், உதகை வட்டம், கக்குச்சி கிராமம், திருச்சிக்கடியில் செயல்பட்டு வரும் கம்டோகோவ் கைவினைஞர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் மண்பானை விற்பனை மையக் கட்டடம்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சோலூர் பேரூராட்சிக்கு 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம்; உதகமண்டலம் நகராட்சி, வார்டு எண்.36-ல் வேலிவியூ பகுதியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் தொலைநோக்கி கோபுரம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் தாட்கோ சார்பில் உதகமண்டலம் – தக்கர்பாபா நகர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி மற்றும் எல்க்ஹில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி, ஹுக்கர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 கோடியே 52 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கூடலூர் வட்டாரத்திற்கு 16 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள்;
நெடுஞ்சாலைத் துறை சார்பில் உதகமண்டலம் – தலைகுந்தா - கல்லட்டி - தெப்பகாடு சாலையில் 1 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் பாலம் மற்றும் காட்டேரி முதல் சேலாஸ் - கெந்தளா - பாலாடா - கொல்லிமலை வழியாக காந்திபேட்டை வரை 20.500 கி.மீ தூரம் குன்னூர் நகருக்கு 48 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை;
வனத் துறை சார்பில் கூடலூர் வனக்கோட்டத்தில் மரத்திலான ஓய்வறை, குன்னூர் வனசரகத்திற்குட்பட்ட காட்டேரி சோதனை சாவடி, பைக்காரா வனசரகத்திற்குட்பட்ட பைக்காரா மற்றும் நீலகிரி வனசரகத்திற்குட்பட்ட உதகை தெற்கு ஆகிய இடங்களில் முன்கள பெண் பணியாளர்களுக்கான ஓய்வறை மற்றும் கழிவறைகள், குந்தா வனசரக அலுவலகத்தில் முன்கள பெண் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிவறை, நீலகிரி வனக்கோட்டம், உதகை தெற்கு வனசரக அலுவலர் குடியிருப்புக் கட்டடம், பழங்குடியின குக்கிராமங்களுக்கு சூரியஒளி மின்விளக்குகள், தெருவிளக்குகள், பைக்காரா நீர்வீழ்ச்சி புதிய படகு இல்லத்தில் 3 மிதக்கும் நடைபாதைகள், நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிக்கும் அறை, பெண்களுக்கான கழிவறை, மேம்படுத்தப்பட்ட வேட்டை தடுப்பு மற்றும் நடமாடும் முகாம்கள், கட்டி முடிக்கப்பட்ட புதிய முகாம்கள், வனவிலங்குகள் உணவுக்கான புற்கள் உற்பத்தி, நாற்று நடுதல், மேம்படுத்தப்பட்ட முன்கள பெண் வன பணியாளர்களின் அலுவலக உட்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட முன்கள பணியாளர்களின் குடியிருப்புகளை என மொத்தம் 2 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்கள்;
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கூடலூர் சேரங்கோடு ஊராட்சி – கொத்தல் குண்டு பகுதியில் 2 கோடியே 75 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், கூடலூர் நெலாக்கோட்டை ஊராட்சி – பாலவயல் பகுதியில் 3 கோடியே 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பாலம், குன்னூர் வட்டாரத்தில் ஆடர்லி சேம்புகரை சாலை, கரிமரஹட்டி சாலை, தைமலை அம்பேத்கர் சாலை, கோத்தகிரி வட்டாரத்தில் கோபி ஈரோடு சாலை முதல் தும்பூர் சாலை, மார்வளா முதல் பள்ளியாடா வரை சாலை, மேம்படுத்தப்பட்ட கோடநாடு சுண்டட்டி தார் சாலை, கூடலூர் வட்டாரத்தில் அம்பலாமூலா முதல் வடவயல் சாலை, உதகமண்டலம் தொட்டபெட்டா ஊராட்சியில் முத்தோரையில் சமுதாயக்கூடம், கோத்தகிரி வட்டாரம் – கட்டபெட்டு உயர்நிலைப் பள்ளியில் சமையலறை, உதகமண்டலம் வட்டாரம், தூனேரி ஊராட்சி, ஊர்மலையில் நடைபாதையுடன் கூடிய தடுப்புச் சுவர், முள்ளிகூர் ஊராட்சி நேருநகர் காலனியில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை, இத்தலார் ஊராட்சி – சுரேந்திர நகர் காலனியில் பல்நோக்கு கட்டடம், தூனேரி ஊராட்சி ஊர்மலை கிராமத்தில் விளையாட்டு மைதானத்திற்கு தடுப்புச் சுவர், குன்னூர் வட்டாரத்தில் சின்ன பிக்கட்டி கிராமத்தில் சமுதாய கூடத்திற்கு சமையலறை, ஜயப்பன் காலனியில் சமுதாய கூடத்திற்கு சமையலறை, கூடலூர் வட்டாரத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சிமெண்ட் சாலைகள், குடிநீர் குழாய், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கழிவுநீர் கால்வாய், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் 246 வீடுகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 70 வீடுகள், பிரதம மந்திரி பெருந்திட்டத்தின் கீழ் 11 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 206 வீடுகள், பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 59 வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 14 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்ட 1025 வீடுகள், என மொத்தம் 51 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 6 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்பட்ட மண் சுகாதார மேலாண்மைக்கான கருவிகள்;
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கோத்தகிரி வட்டாரத்தில் ஈளாடா பாரதி நகர், கரிக்கையூர், தாளமுக்கை ஆகிய இடங்களில் 53 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள்;
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கூடலூர் வட்டாரத்தில் மசினகுடி ஊராட்சியில் 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் நியாய விலைக்கடை, கோத்தகிரி வட்டாரத்தில் தெங்குமரஹடா ஊராட்சி அல்லிமாயாரில் 16 இலட்சம் ரூபாய் செலவில் பொது விநியோகக்கடை மற்றும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 42 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் 29 கடைகள்; என மொத்தம் 77 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் முதுமலை புலிகள் சரணாலயத்தின் வனப்பகுதியில் உள்ள யானைகளை மின் விபத்தில் இருந்து தடுக்கும் பொருட்டு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 11 கி.மீ. தூரத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில் வான்வழி தொகுப்பு கடத்தி மின்பாதை;
என மொத்தம் 494 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் 1703 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
=> நீலகிரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தொலைதூர பழங்குடியின கிராமங்களில் 1 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆட்டு கொட்டகைகள் அமைக்கும் பணிகள்;
பொதுப்பணித் துறை சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில்
3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், தேவர்சோலையில் 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நெம்பலாகோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், சோலூர் கோத்தகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 59 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறைக் கட்டடங்கள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேவர்சோலை - முக்கூர் முதல் ஒற்றுவயல் தார்சாலையை 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள், கம்பாடி முதல் சக்கச்சிவயல் வரை தார்சாலையை 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள்; பண்ணிக்கொல்லி மற்றும் செத்தன்கொல்லி ஆகிய இடங்களில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடங்கள்;
பால் வளத்துறை சார்பில் உதகமண்டலம் புதிய பால் பண்ணை வளாகத்தில் 13 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள்;
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் தாட்கோ சார்பில், கோத்தகிரி குஞ்சப்பனை ஊராட்சி ஜக்கனாரை கிராமத்தில் 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடம், கூடலூர் கார்குடி பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு 3 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் மற்றும் 3 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், கூடலூர் வாழவயல் கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், கூடலூர் ஏரோடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் 16 குடும்பங்களுக்கு (பகுதி 1, 2 மற்றும் 3) 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், கூடலூர் முண்டக்குன்னு கிராமத்தில் வசிக்கும் 11 பழங்குடியினர் குடும்பங்களுக்கு 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், கோத்தகிரி புது கோத்தகிரி கிராமத்தில் வசிக்கும் 16 பழங்குடியினர் குடும்பங்களுக்கு 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள்;
நெடுஞ்சாலைத் துறை சார்பில் உதகை நகருக்கு 10.85 கி.மீ தூரத்திற்கு 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுப் பாதை அமைக்கும் பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கூக்கல் தொரை மற்றும் தூனேரி ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், தொட்டப்பெட்டா ஊராட்சி ஆடாசோலை, நெடுகுளா ஊராட்சி வ.உ.சி. நகர், கெங்கரை, ஜக்கனாரை ஊராட்சி, ஹாடாத்தொரை பகுதி, கொணவக்கரை ஆகிய இடங்களில் 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார மையங்கள், கடநாடு ஊராட்சி தாவணெ மல்லிக்கொரை சாலையில் 3 கோடியே 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள்,
கொரனூர் முதல் பிக்கபத்திமந்து வரை, முத்திரி முதல் இந்திரா நகர் பழங்குடியினர் காலனி வரை, நடுஹட்டி முதல் கல்லட்டி வரை, மண் வயல் முதல் மணலி வரை, அய்யங்கொல்லி இதர மாவட்ட சாலை முதல் மழவன் சேரம்பாடி – காவயல் – புஞ்சக்கொல்லி வரை, கொட்டாடு முதல் கல்பரா சர்ச் வரை, குந்தலாடி கால்நடை மருத்துவமனை முதல் வாழவயல் வரை ஆகிய இடங்களில் 13 கோடியே 40 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், பிதர்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், தூனேரி ஊராட்சி – அம்பேத்கர் நகர், அணிக்கொரை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 45 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகள் மற்றும் கட்டடங்கள் பழுது பார்க்கும் பணிகள், கீழ்கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு 12 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய வைப்பு அறை கட்டும் பணிகள், குருத்துக்குளி, கக்குச்சி, கெந்தொரை, எடப்பள்ளி, நெடுகுளா ஆகிய இடங்களில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் கட்டும் பணிகள், சொக்கநல்லியில் 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் அருகில் சமையலறை கூடம், தீனட்டி மற்றும் கெந்தொரை ஆகிய இடங்களில் 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணிகள், கல்லம்பாளையத்தில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடை, நெலாக்கோட்டை ஊராட்சி – குதிரை வட்டம் மற்றும் முள்ளன்வயல், சேரங்கோடு ஊராட்சி – பாதிரிமூலா, ஸ்ரீமதுரை ஊராட்சி-மண்வயல் ஆகிய இடங்களில் 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள்;
வனத்துறை சார்பில் ஆமைக்குளம் கூடுதல் வன வட்டத்தில் 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகள்;
என மொத்தம், 130 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 56 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
=> நீலகிரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1,606 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 4,667 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உதவிகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 2,279 பயனாளிகளுக்கு கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, ஓய்வூதிய உதவித்தொகை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 101 பயனாளிகளுக்கு கைபேசியில் மின் மோட்டார் இயக்கும் கருவி, சுழல் கலப்பை, சூரியஒளியில் இயங்கும் பம்புசெட், டிராக்டர், தேயிலை அறுவடை இயந்திரம், பவர் டில்லர், பவர் வீடர், புதர் அகற்றும் கருவி, சூரியசக்தியுடன் கூடிய மின்வேலி ஆகிய உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 97 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மிளகு தரம் பிரிக்கும் இயந்திரம், சலவை பெட்டி, பழங்கடியினருக்கான வீடுகள், சமூகநலத்துறை சார்பில் 53 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவிகள், காதொலிகருவி, பிரெய்லி கைகடிகாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழ் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவிகள், தாட்கோ சார்பில் 10 பயனாளிகளுக்கு சுற்றுலா வாகனம் வாங்கிட உதவி, குத்தகைக்கு தேயிலை தோட்டம் வாங்க உதவி, தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15,634 பயனாளிகளுக்கு 102 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்த விழாவில், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக் கொறடா
கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.