மு.க.ஸ்டாலின்

அரசுப் பள்ளியில் பயின்று, இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள வி.நாராயணன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) ISRO தலைவராக பொறுப்பேற்கிறார் வி.நாராயணன்!

அரசுப் பள்ளியில் பயின்று, இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள வி.நாராயணன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி நிறுவனமாக விளங்கும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைவராக இருந்து வரும் சோம்நாத் பணிநிறைவு பெறும் நிலையில், புதிய தலைவராக வி.நாராயணன் அவர்களை தேர்வு செய்து உத்தரவிட்டுள்ளது ஒன்றிய அரசு.

புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுடன், தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிறப்பாகவும் அமைந்துள்ளது.

இவர், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) பதவியேற்கிறார். இரு ஆண்டு காலம், வி.நாராயணன் அவர்கள், இஸ்ரோ தலைவராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பயின்று, இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள வி.நாராயணன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

Chandrayaan2, Chandrayaan3, AdityaL1, Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் வி.நாராயணன் அவர்களின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்!

நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories