மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !

முன்னாள் பிரதமர் மன்மோகன் ​சிங் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் ​சிங், காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவர் ஆவார். கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார். பொருளாதார வல்லுநரான இவர், இந்தியா​வின் பொருளாதார தாராளமய​மாக்கல் கொள்​கை​யின் தொடக்​கத்​துக்கு வித்திட்டவர்.

ரிசர்வ் வங்கி​யின் கவர்னராக​வும் பதவி வகித்​துள்ளார். காங்​கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்​போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்தார்.

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !

இந்த சூழலில் மன்மோகன் சிங் இதயநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (டிச.26) காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலன்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !

நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்.

“தமிழ்நாடு மக்களுக்கு நண்பராக இருந்தார்” - மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார் என்கிற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை மன்மோகன் சிங் அவர்களின் காலகட்டத்திற்கு முன் - பின் என்று குறிப்பிடும் அளவுக்கு மாற்றியமைத்தவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்துக்கும், மதிப்புக்கும் உரியவர். நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மூலம் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர். 10 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் இருந்து நிறைய சாதித்த நிறைகுடம் மன்மோகன்சிங் அவர்கள். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பெற்றத் திட்டங்களும் - அடைந்த வளர்ச்சியும் அதிகம்.

உலகப் பொருளாதாரத்தின் திசைவழியை சரியாகப் புரிந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்த மன்மோகன் சிங் அவர்களின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும். அவர்களின் மரணத்துக்கு எனது ஆழந்த இரங்கல். அவரை இழந்து வாடும் காங்கிரஸ் பேரியக்கத்தினர் - குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories