அரசியல்

இனி பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்! : அமைச்சர் கோவி செழியன்!

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி செழியன் செய்தியாளர் சந்திப்பு.

இனி பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்! : அமைச்சர் கோவி செழியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,

“மாணவர்களின் நலனை காக்கும் பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்புகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் கல்வி நிறுவனம் என்றால் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் என்கின்ற புகழை பெற்று தந்தது நமது முத்தமிழறிஞர் கலைஞர் தான்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி நிலையில், தமிழ்நாட்டில் 48 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதனை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறார்.

குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாணவ மாணவிகள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அவர்களது இடர்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் தெரிவிப்பதற்கான விழிப்புணர்வு அவர்கள் கல்விப் பயணத்தை தொடங்கிய பொழுது வழங்கப்பட்டது.

உயர்கல்வியில் பேராசிரியர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற ஒன்று இல்லாத நிலையில் இன்று ஒளிவு மறைவற்ற முறையில் செயல்படுகிறோம் என்கின்ற நிலைமையில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்களுக்கு திறந்தவெளி மனுக்களை பெற்று பேராசிரியர்கள் பணியிடம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை சம்பவத்தில் நடைபெற்ற சம்பவம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு தகாத நபர் விரும்பாத காரியத்தை செய்ததன் விளைவு 25ஆம் தேதி மாணவி புகாராக அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போஸ் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவிகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாறுதல் இருந்தால் அவர்களை கமிட்டி தாமாக அழைத்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இன்னல்களை குறித்து தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், மகளிர் தேசிய ஆணையும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்கள் அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். இந்த நிலையில் இது அரசியல் ஆக்க எண்ணுகிறார்கள் என்பதுதான் ஊடகங்களில் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இதை எந்த நிலையிலும் நாங்களும் தமிழ்நாடு அரசும் அரசியலாக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உயர்கல்வித்துறை மிகவும் செம்மையாக நடைபெறுகிறது. பல்கலைக்கழக நிர்வாக பெருமக்களை அமர வைத்து பல்கலைக்கழகத்தின் எங்கெங்கு நுழைவாயில் உள்ளது, எங்கெங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளது என்பதை குறித்து கேட்டறிந்துள்ளோம். சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இதை அரசியலாக அணுகினால் அதற்கான விளக்கம் தருவதும் தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

இனி பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்! : அமைச்சர் கோவி செழியன்!

போஸ் கமிட்டி என்பது மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியாக இடர்பாடுகள் தொடர்பான புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி. ஆனால் இந்த புகார் பொருத்தவரையில் அது போன்ற ஒரு புகார் கமிட்டி இடம் வரவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான ஒரு செய்தி. இனி வரக்கூடிய காலங்களில் இது நடைபெறாமல் தவிர்க்கப்படும். கல்லூரி நிறுவனங்களை ஆய்வு செய்வதைப் போல கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகள் குறித்தும் வரக்கூடிய காலங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

கைது செய்யப்பட்ட ஞானசேகர் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுள் நுழைவதற்கு முன்பு அனைவரும் அவர்களது அடையாளங்களை காவலர்களிடம் தெரியப்படுத்தி பின்பு புகைப்படம் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தை பெற்றவரையில் குற்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக அரசும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் துணை நிற்கும்.

அவர் பிளாட்பார்ம் ஓரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவதன் காரணத்தினால் அவர்களுக்கு நிறைய மாணவ மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பழக்கமாகி உள்ளார்கள் என்றும் மேலும் அவரது மனைவி இங்கு பணி புரியும் காரணத்தினால் அவர் அதிக அளவில் இங்கே வருவதாகவும் காவலாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வரக்கூடிய நிலையில் அது தொடர்பான விசாரணைகளை இன்னும் வரக்கூடிய காலங்களில் மேற்கொள்ள உள்ளோம். முழு அளவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் 100 சதவீதம் துணை நிற்போம்.

இது போன்ற தகவல் கமிட்டியின் பார்வைக்கு வந்திருந்தால் உடனடியாக வலிய விசாரித்து தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு இருப்போம் மாறாக அதுபோன்று நடைபெறாமல் அது காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் மாணவ வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் 80 சதவீததிற்கும் மேல் சரிவர இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஒரு பத்து சதவீதம் மட்டுமே இயங்கவில்லை. குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இவை முழுமையடையும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 80 சதவீதம் மின்விளக்குகள் சரியான நிலையில் வேலை செய்து வருகிறது. மீதம் உள்ள ஒரு சில இடங்களிலும் அதனை சரி செய்யும் பணி தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி சம்பவத்தை போன்று இங்கு எந்த ஒரு சம்பவமும் காலம் தாழ்த்தி நடைபெறவில்லை. கல்லூரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகள் மூலமாக மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தொடர்பாக ஏற்படக்கூடிய இன்னல்கள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளவும் உள்ளோம்.

இந்த கமிட்டி குழு என்பது பேராசிரியர் பெருமக்கள் மாணவர்கள் அடங்கிய ஒரு குழு. பாதிப்படைந்த மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய மன ஆறுதலையும் அவர்களுக்கு தேவையான சட்டப் பாதுகாப்பையும் தருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளித்துள்ளோம்.

பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர் அல்ல. அவர் பொதுவெளியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளின் வாயிலாகவே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதனை மாறாக சித்தரித்து பலர் வெளியிட்டு வருகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தை முழுவதுமாக முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு வரக்கூடிய காலங்களில் எல்லா பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories