மு.க.ஸ்டாலின்

ஆசியாவின் முதல் மூன்று முதலீட்டுக்கான இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே நோக்கம் -முதலமைச்சர் உறுதி !

இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதர் எரிக் கர்செட்டி தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்.

ஆசியாவின் முதல் மூன்று முதலீட்டுக்கான இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே நோக்கம் -முதலமைச்சர் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதர் எரிக் கர்செட்டி (Mr. Eric Garcetti) சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின்போது தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது "அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகள் செய்து இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அமேசான், Caterpillar, CTS, IBM போன்ற பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் சமீபத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் முதல் மூன்று தொழில்மயமான மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகவும், ஆசியாவிலேயே முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதே எங்கள் நோக்கம்.

தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. திறமையான மனித வளம் மற்றும் அமைதியான தொழில் உறவுகள் தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த இடமாக ஆக்குகின்றன.

ஆசியாவின் முதல் மூன்று முதலீட்டுக்கான இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே நோக்கம் -முதலமைச்சர் உறுதி !

ஆட்டோமொபைல்ஸ் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணு வன்பொருள், தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான மகத்தான வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்குகிறது.நாங்கள் சிறந்த சமூக உள்கட்டமைப்பை வழங்குவதுடன் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கல்வி ஒத்துழைப்புகளை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்புகிறோம். டென்வர் மற்றும் சான் அன்டோனியோ நகரங்களுடன் சென்னையும், டோலிடோ நகரத்துடன் கோயம்புத்தூரும் Sister City ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன.

தமிழ்நாடு தனது அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் ஜனவரி மாதத்தில் நடத்துகிறது. அதில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, அமெரிக்கா இந்த மாநாட்டில் ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! நன்றி! வணக்கம்!" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories