மு.க.ஸ்டாலின்

8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

8 எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி:

புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் வழங்கினார்.

வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை:

வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை:

மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் நூல்களுக்கு 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, முனைவர் ந. இராசையா நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.

தமிழ்ச் செம்மல் விருது:

2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. சிவசிதம்பரம் இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மா. சோதி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் அ. மாயழகு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த. முத்துரத்தினம் , கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த .ஆ.நாகராசன் , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் கடவூர் மணிமாறன் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த . இரா. துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் சு. கந்தசாமி பிள்ளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இரா. எல்லப்பன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. இரத்தினகுமார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மானூர் புகழேந்தி;

சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வ. தேனப்பன் , செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கே. சுப்பிரமணியன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வே. மாணிக்காத்தாள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. மோகன் குமார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுக சீதாராமன் , தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் கண்ணிமை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரை. தில்லான் , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த க. பட்டாபிராமன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வ. பாலசுப்பிரமணியன்;

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வ. சுமதி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. லோகநாதன் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த க. பரமசிவன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. கு. சண்முகம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரெ. சண்முக வடிவேல், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் அ. கணேசன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. சிவராம கிருஷ்ணன் , தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேனி சீருடையான்;

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மு. சொக்கப்பன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி. கைலாசம் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த போ. மணிவண்ணன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீ.கே. கஸ்தூரிநாதன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. வினோதினி , மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை. ந. சொக்கலிங்கம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ச. பவுல்ராஜ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஅ. சுப்பிரமணியன் , விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம. நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை செ. சுகுமாரன், செ. இராஜேஸ்வரி, முனைவர் மு. வளர்மதி, முனைவர் இராக. விவேகானந்த கோபால், முனைவர் அ.சு. இளங்கோவன். முனைவர் வீ. சந்திரன், முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியர் தமிழ்ச்செல்வி, மறைந்த ந. தாஸ், முனைவர் மா. சம்பத்குமார் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

banner

Related Stories

Related Stories