மு.க.ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள்..” :ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை

10 ஆண்டுகளாக நிதி நிலை மோசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள்..” :ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநாடு இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது பின்வருமாறு :

"நீங்கள் தீவித்திடலில் கூடியுள்ளீர்கள்; ஆனால் நீங்கள் தனித்திவீல் அல்ல. கோட்டையை உள்ளடக்கியது தான் உங்கள் தீவு. உங்களில் ஒருவனாக பெருமையோடு பூரிப்போடு நிற்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்களின் ஊழியன். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது அதனை யாராலும் பிரிக்கமுடியாது.

அரசு ஊழியர் மாநாட்டில் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தாலும் இங்கு பேசாமல் வேறெங்கு பேசுவது. 6-வது முறையாக ஆட்சியை பிடிக்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் அத்தகைய நன்றி உணர்வோடு நிற்கிறேன். நம்முடைய ஆதரவு முதல்வருக்கும் அரசிற்கு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளீர்கள். இதற்காகவே நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

“அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள்..” :ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை

நீங்கள் அதிக எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள்' நானும் அதனை நிறைவேற்ற இடத்தில் உள்ளேன். தி.மு.க அரசு உங்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் என்பதை இப்போதும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்களே அழைப்பிதழில் அச்சிட்டுள்ளீர்கள்.. கொரோனா காலத்தில் நிதி நிலை சரியானது நம் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என கூறிவிட்டீர்கள். நீங்களும் நானும் வேறு வேறு அல்ல..

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதனை தி.மு.க அரசு அமைந்ததும் ரத்து செய்தோம். போராட்டக்காலத்தை பணிக்காலம் அறிவித்தோம். தாமதமின்றி ஊதியமும் வழங்கப்பட்டது; அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது.

“அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள்..” :ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை

75-வது சுதந்திர தினவிழாவிலும் உயர்வு அறிவிப்பு 12ஆயிரம் கோடி ரூபாய் செலவினம். பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கப்பட்டது, அரசு ஊழியர்கள் இறந்த போது குடும்பத்தொகை உயர்த்தப்பட்டது. கோவிட் நோயால் 409 முன்களப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.98 கோடிக்கும் மேல் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும்,

* உயிர்காக்கும் அவசரத்தன்மைகொண்ட சிகிச்சைகளுக்கு சிகிச்சை பெற அனுமதி.

* கோவிட்-19 நோய்க்கான சிகிச்சைக்கு 10லட்சம் வரை கட்டணமில்லாமல் சிக்கிச்சை பெற வழிவகை.

* அரசு ஊழியர்களை நம்பியுள்ளவர்கள் சிகிச்சைபெறவும் வழிவகைச்செய்யப்பட்டுள்ளது.

* மகப்பேறு விடுப்பு 9 மாதத்திலிருந்து 12 மாதமாக உயர்த்தப்பட்டது .

* 10338 புதிய பணியிடங்கள் அரசால் தோற்றுவிக்கப்பட்டது

- இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் செய்யப்பட்டது. நாங்கள் அளித்த உறுதி மொழி மட்டுமல்ல சொல்லாததையும் செய்துள்ளோம். இங்கு வரும்போதே உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு கையெழுத்திட்டு விட்டு தான் வந்துள்ளேன்.

“அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள்..” :ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மறு சீரமைப்பு வாயிலாக மாற்றியமைக்கப்பட்டது. மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். 1500 கோடி ருபாய் மகளிர் இலவச பயணத்திட்டத்தில் செலவாகிறது; கூட்டுறவு கடன் தள்ளுபடி; காலை சிற்றுண்டித்திட்டம் துவங்கப்படவுள்ளது; நினைக்கும் திட்டங்களை செயல்படுத்த நிதி வருவாய் இல்லை; அதனை உருவாக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும் அதனை திறம்பட செய்துள்ளோம். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் - ஜீன் வளர்ச்சி அடைந்துள்ளோம்.

இது முழுமையாக நிறைவேறும் போது உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும். உங்கள் துறை அமைச்சரிடமும் நேரிடையாக கோரிக்கைகளை தெரிவிக்கலாம் அதற்கான தீர்வுக்காணப்படும். உங்கள் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும் வீண் போகாது. 10 ஆண்டுகளாக நிதி நிலை மோசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கிறோம்; உங்களில் ஒருவான சொல்கிறேன்.. உங்களால் உருவான அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும்” என்றார்.

banner

Related Stories

Related Stories