மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலினை துபாயில் சந்தித்த ‘வியாபார சாம்ராஜ்ய டான்’ யூசுப் அலி.. இவர் யார் தெரியுமா?

துபாய் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமன யூசுப் அலி சந்தித்துப் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை துபாயில் சந்தித்த ‘வியாபார சாம்ராஜ்ய டான்’ யூசுப் அலி.. இவர் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

துபாய் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான யூசுப் அலி சந்தித்துப் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி. இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லூலூ சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் ஆவார்.

2018-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரின் நத்திகா கிராமத்தில் பிறந்தவர் யூசுப் அலி. இவர் அதே கிராமத்தில் பள்ளிப்படிப்பும், பிசினஸ் மேனேஜ்மெண்டில் டிப்ளமோவும் படித்து முடித்ததும், 18 வயதில் அபுதாபிக்குச் சென்றார்.

தனது மாமா அப்துல்லாவின் வியாபரத்தில் இணைந்த யூசுப் அலி, பின்னர் வியாபாரத்தை மேம்படுத்தினார். தொடர்ந்து உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளிலும் வியாபாரத்தை வளர்த்தார் யூசுப் அலி.

1980-களில் லூலூ கம்பெனி ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்த மற்றும் சில்லறை விலை உணவுச் சந்தையில் ஒரு பெரும் சந்தையை கைப்பற்றியது.

1990களில் யூசுப் அலி, லூலூ சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டில் லூலூ குரூப் இண்டர்நேஷனல் என கம்பெனியை பதிவு செய்தார்.

இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு ஆண்டிற்கு 7.4 அமெரிக்க பில்லியன் டாலர்கள். லூலூ குரூப் இண்டர்நேஷனலுக்கு இன்று உலகம் முழுக்க 215 கடைகள் உள்ளன.

லூலூ குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தற்போது சுமார் 57,000 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது இந்நிறுவன கடைகள்.

இவர்த்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு வணிக உலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories